MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • RBI Rules: கடன் கட்டவில்லை என்றால் போன் முடக்கப்படுமா? ஆர்பிஐ விதி சொல்வது இதுதான்

RBI Rules: கடன் கட்டவில்லை என்றால் போன் முடக்கப்படுமா? ஆர்பிஐ விதி சொல்வது இதுதான்

RBI Rules: இன்று ஸ்மார்ட்போன், மடிக்கணினி உள்ளிட்ட பொருட்களை மாதத் தவணையில் வாங்குவது மிகவும் சாதாரணமாகிவிட்டது. ஆனால் அந்தத் தவணையை செலுத்தத் தவறினால், கடன் கொடுத்த நிறுவனம் உங்கள் போனை தொலைவிலிருந்து முடக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : Aug 16 2026, 08:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
போன் லாக் விதிகள்
Image Credit : Google

போன் லாக் விதிகள்

ஸ்மார்ட்போன், மடிக்கணினி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை மாதத் தவணையில் வாங்குவது தற்போது பரவலாகிவிட்டது. இந்நிலையில், தவணை செலுத்தத் தவறினால் கடன் வழங்கிய நிறுவனம் சாதனத்தை முடக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறு இந்திய ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ள புதிய வரைவு விதிகளில் பல கட்டுப்பாடுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, எந்த சாதனத்தை வாங்குவதற்காக கடன் வழங்கப்பட்டது, அந்தக் கடனுக்கான நிலுவையை வசூலிக்க மட்டுமே அந்த சாதனத்தின் சில செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வேறு தனிநபர் கடன், வீட்டுக் கடன் அல்லது கார் கடனுக்காக உங்கள் கைப்பேசியை முடக்குவது இந்த முன்மொழியின் கீழ் அனுமதிக்கப்படாது. மேலும், கடன் ஒப்பந்தத்திலேயே அதற்கான அனுமதி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கடன் வசூல் விதிகள்
Image Credit : Asianet News

கடன் வசூல் விதிகள்

அதிலும், ஒரு தவணை தவறிய உடனேயே கைப்பேசியை முடக்கிவிட முடியாது. வரைவு விதிகளின்படி, தொடர்புடைய கடன் கணக்கு 60 நாட்கள் நிலுவையில் சென்ற பிறகே முதல் அறிவிப்பு வழங்க வேண்டும். அதில் குறைந்தது 21 நாட்கள் நிலுவையை சரிசெய்ய அவகாசம் வழங்கப்பட வேண்டும். அந்த காலத்திற்குப் பிறகும் பணம் செலுத்தப்பட்டது, இரண்டாவது அறிவிப்பு வழங்கப்படவில்லை மேலும் 7 நாட்களுக்கு அவகாசம் கொடுக்கப்பட வேண்டும். இந்த நடைமுறைகளுக்குப் பிறகும் கடன் தவறு சரிசெய்யப்படாமல், கணக்கு 90 நாட்கள் நிலுவையில் இருந்தால் மட்டுமே சாதனத்தின் சில செயல்பாடுகளை படிப்படியாகக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். எனவே “ஒரு இஎம்ஐ தவறினாலே உடனடியாக போன் லாக்” என்பது இந்த முன்மொழியப்பட்ட விதிகளின் சரியான விளக்கம் அல்ல.

Related Articles

Related image1
8th Pay Commission: ஓய்வூதியர்களுக்கு குட் நியூஸ் வருமா? ரூ.45,000 குறைந்தபட்ச பென்ஷன் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைப்பு
Related image2
August 16 Deadline: இன்றே கடைசி.. கேஸ் சிலிண்டர் பயனர்களே கவனம்.. வெளியான அறிவிப்பு
35
ஆர்பிஐ கடன் வசூல்
Image Credit : AI image - Gemini

ஆர்பிஐ கடன் வசூல்

சாதனத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும், அத்தியாவசிய வசதிகளை முழுமையாக முடக்க முடியாது. இணைய இணைப்பு, உள்வரும் அழைப்புகள், அவசர உதவி வசதிகள் மற்றும் அரசு அல்லது பொது பாதுகாப்பு தொடர்பான அவசர அறிவிப்புகளைப் பெறும் வசதிகள் போன்றவை தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று வரைவு விதிகள் கூறுகின்றன. மேலும் கடன் வசூலிப்பதற்காக கடன் வழங்குநர் உங்கள் கைப்பேசியில் சேமிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட தகவல்களை அணுகவோ, பயன்படுத்தவோ, பெறவோ அல்லது சேமித்து வைக்கவோ கூடாது. புகைப்படங்கள், தொடர்பு எண்கள், குறுஞ்செய்திகள் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகளை கடன் வசூலுக்காக பயன்படுத்த இந்த முன்மொழிவு அனுமதி வழங்கப்படவில்லை.

August 16 Deadline: இன்றே கடைசி.. கேஸ் சிலிண்டர் பயனர்களே கவனம்.. வெளியான அறிவிப்பு

45
ஆர்பிஐ புதிய கடன் விதிகள்
Image Credit : Asianet News

ஆர்பிஐ புதிய கடன் விதிகள்

நிலுவைத் தொகையைச் செலுத்தி கடன் தவறி சரிசெய்துவிட்டால், சாதனத்தின் மீதான கட்டுப்பாடுகளை விரைவாக அகற்ற வேண்டும். முன்மொழியப்பட்ட விதிகளின்படி, கடன் தவறு சரிசெய்யப்பட்ட பிறகு அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்குள் சாதனத்தின் செயல்பாடுகள் மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட வேண்டும். தவறாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது பணம் செலுத்திய பிறகும் கட்டுப்பாட்டை நீக்குவதில் தாமதம் ஏற்பட்டதாலோ, கடன் வழங்குநர் தாமதமான ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.250 இழப்பீடு வழங்க வேண்டியிருக்கும். கடன் முழுமையாக செலுத்தப்பட்ட பிறகு, சாதனத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தையும் அகற்ற வேண்டும்.

55
கடன் வாங்கியவர் உரிமைகள்
Image Credit : our own

கடன் வாங்கியவர் உரிமைகள்

இதனுடன் கடன் வசூல் முகவர்களின் செயல்பாடுகளையும் ஆர்பிஐயின் முன்மொழியப்பட்ட விதிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. கடன் வாங்கியவர்களை மிரட்டுதல், அவமானப்படுத்துதல் அல்லது அவர்களின் தனியுரிமையை பாதிக்கும் வகையில் நடந்து கொள்வது போன்ற முறைகள் அனுமதிக்கப்படாது. மேலும், கடன் வசூல் தொடர்பான தொடர்களிலும் குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் புகார் தீர்வு நடைமுறைகள் கடன் வழங்குநர்கள் பின்பற்றப்பட வேண்டும். முக்கியமாக, இவை தற்போது முன்மொழியப்பட்ட வரைவு விதிகள் என்பதால், இறுதி விதிகள் வெளியாகும்போது சில அம்சங்களில் மாற்றம் இருக்கலாம். எனவே “இஎம்ஐ கட்டவில்லை என்றால் யாரும் உங்கள் போனை லாக் செய்யலாம்” என்பது தவறான புரிதல். அதேநேரத்தில், சாதனம் வாங்கிய கடனுக்கான ஒப்பந்தத்தில் நிபந்தனை இருந்தால், அதன் விதிமுறைகளை ஆரம்பத்திலேயே முழுமையாகப் புரிந்துகொள்வது, தவணை செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால் கடன் நிறுவனத்தை உடனடியாகத் தொடர்புகொள்வது பாதுகாப்பான நடைமுறையாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய ரிசர்வ் வங்கி
கடன்
வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Goat Farming: அதிக பால், அதிக பணம் தரும் ஆடு எது? லட்சாதிபதி ஆக சூப்பர் சான்ஸ்!
Recommended image2
August 16 Deadline: இன்றே கடைசி.. கேஸ் சிலிண்டர் பயனர்களே கவனம்.. வெளியான அறிவிப்பு
Recommended image3
Samsung S25: பாதி விலையில் Samsung Galaxy S25 Ultra..! ரூ.1.29 லட்சம் போன் இப்போது ரூ.57,949-க்கு!
Related Stories
Recommended image1
8th Pay Commission: ஓய்வூதியர்களுக்கு குட் நியூஸ் வருமா? ரூ.45,000 குறைந்தபட்ச பென்ஷன் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைப்பு
Recommended image2
August 16 Deadline: இன்றே கடைசி.. கேஸ் சிலிண்டர் பயனர்களே கவனம்.. வெளியான அறிவிப்பு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved