கடல்லயே இல்லையாம்.. தாறுமாறாக குறைந்த ஆப்பிள் ஐபோன்களின் விலை!
ஐபோன் 16, 15 ப்ரோ மற்றும் 13 ஆகிய மாடல்களுக்கு தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. ஐபோன் 15 ப்ரோ ரூ. 99,900 ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இது ரூ. 35,099 தள்ளுபடி ஆகும். கூடுதல் வங்கி சலுகைகளுடன் ஐபோன் 13 ரூ. 45,490 விலையில் கிடைக்கிறது.

iPhone Discounts
இந்திய சந்தையில் ஐபோன்களுக்கு அதிக தேவை உள்ளது என்றே கூறலாம். தொடர்ந்து இந்தியர்களால் அதிகளவில் வாங்கப்படும் மொபைல்களில் ஐபோன் முதலிடம் வகித்து வருகிறது. தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மொபைல்கள் குறைந்த விலையில் தள்ளுபடியுடன் கிடைக்கிறது.
iPhone 16
ஐபோன் 16
டைனமிக் ஐலேண்டுடன் வந்த சமீபத்திய ஐபோன் இதுவாகும். இது A18 சிப் மூலம் இயக்கப்படுகிறது. இது 48MP கேமராவைக் கொண்டுள்ளது. ஆற்றலுக்கு, அதன் பேட்டரி 22 மணிநேரம் முழு சார்ஜ் ஆகும். இந்த போனின் விலை ரூ.77,900. இதற்கு 5000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதை நோ-காஸ்ட் EMI உடன் வாங்கலாம்.
iPhone 15 Pro
ஐபோன் 15 ப்ரோ
ஐபோன் 15 ப்ரோ ரிலையன்ஸ் டிஜிட்டலில் ரூ. 99,900 ஆரம்ப விலை. இது ஒரு பெரிய விஷயம் என்றே கூறலாம். இந்த போன் இந்தியாவில் ரூ. 1,34,999 தொடங்கியது. இப்போது வாடிக்கையாளர்கள் எந்தவிதமான விதிமுறைகளும் நிபந்தனைகளும் இல்லாமல் ரூ.35,099 பெரும் தள்ளுபடியைப் பெறுகிறார்கள்.
Apple iPhone Offer
அதுமட்டுமின்றி மொபைல் வாடிக்கையாளர்கள் ப்ரோ பதிப்பை ரூ. 10,000 கூடுதல் வங்கி அட்டை உடன் தள்ளுபடியில் பெறலாம். இதன் விலை ரூ. 89,900. அதாவது போனில் ரூ.45 ஆயிரம் வரை சேமிக்கலாம். மிக குறைந்த விலையில் ஐபோன்கள் வாங்க வேண்டும் என்பவர்களும், அதேசமயத்தில் லேட்டஸ்ட் வெர்சன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களும் மிஸ் செய்யக்கூடாத வாய்ப்பு இதுவாகும்.
iPhone 13
ஐபோன் 13
ஐபோன் 13 சீரிஸ் அதிகம் விற்பனையாகும் ஐபோன் மாடல்களில் ஒன்றாகும். இது 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது A15 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. இது 12 எம்பி பின்புற கேமரா மற்றும் முன் ஃபிளாஷ் உடன் வருகிறது. இதன் விலை ரூ.45,490. நீங்கள் 10 சதவீத கேஷ்பேக் மற்றும் இஎம்ஐ விருப்பங்களுடன் வாங்கலாம்.
ரூ.5 லட்சம் கூட இல்லை.. பேமிலியா அசால்ட்டா டூர் போக ஏற்ற 3 பட்ஜெட் கார்கள்!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.