MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Aadhaar App: உங்க ஆதார் பயோமெட்ரிக்கை பத்திரமாக 'லாக்' செய்வது எப்படி? முழு விவரம் இதோ!

Aadhaar App: உங்க ஆதார் பயோமெட்ரிக்கை பத்திரமாக 'லாக்' செய்வது எப்படி? முழு விவரம் இதோ!

Aadhaar App: ஆதார் செயலியில் உங்கள் கைரேகை மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை பாதுகாப்பாக 'லாக்' செய்வது எப்படி? இந்த செய்தியில் முழுமையாக விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 24 2026, 10:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
ஆதார் செயலி புதிய சாதனை
Image Credit : UIDAI

ஆதார் செயலி புதிய சாதனை

ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஆதார் செயலி (Aadhaar App) தற்போது 4 கோடி பதிவிறக்கங்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. வீட்டில் இருந்தபடியே முகவரி, மொபைல் எண் போன்ற விவரங்களை மாற்றுவது முதல், பயோமெட்ரிக் விவரங்களைப் பூட்டி வைப்பது வரை பல முக்கிய சேவைகளை இந்த ஒரே செயலி மூலம் பெற முடியும்.

மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த செயலியின் முக்கிய அம்சமான பயோமெட்ரிக் லாக்/அன்லாக் வசதியை இதுவரை 1.91 கோடிக்கும் அதிகமான முறை மக்கள் பயன்படுத்தியுள்ளனர். இது ஆதார் பயனர்களின் தரவுப் பாதுகாப்புக்குக் கிடைத்திருக்கும் கூடுதல் பலம் என்றே சொல்லலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
பயோமெட்ரிக் லாக்; ஆதார் பாதுகாப்புக்கு புதிய கவசம்
Image Credit : Gemini

பயோமெட்ரிக் லாக்; ஆதார் பாதுகாப்புக்கு புதிய கவசம்

பயோமெட்ரிக் லாக் என்பது உங்கள் கைரேகை, கருவிழி மற்றும் முக அங்கீகாரம் போன்ற பயோமெட்ரிக் தகவல்களை வேறு யாரும் தவறாகப் பயன்படுத்தாமல் தடுக்கும் ஒரு பாதுகாப்பு ஏற்பாடு ஆகும். உங்கள் ஆதார் எண்ணை வேறு எங்காவது அங்கீகாரத்திற்காகப் பயன்படுத்தும்போது, உங்கள் பயோமெட்ரிக் விவரங்கள் தேவைப்படும். ஆனால், நீங்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி உங்கள் பயோமெட்ரிக்கை 'லாக்' செய்துவிட்டால், வேறு யாராலும் அதை அங்கீகரிக்க முடியாது. அப்படி யாராவது முயற்சி செய்தால், அவர்களுக்கு '330' என்ற பிழைக் குறியீடு (Error Code) மட்டுமே திரையில் தோன்றும். இதன் மூலம் உங்கள் அனுமதியின்றி உங்கள் ஆதார் தவறாகப் பயன்படுத்தப்படுவது முற்றிலும் தடுக்கப்படுகிறது.

Related Articles

Related image1
Aadhaar Users Alert: இன்று முதல் இந்த ஆப் செயல்படாது.. ஆதார் பயனர்களுக்கு மத்திய அரசின் முக்கிய எச்சரிக்கை
Related image2
Aadhaar Card Update : ஆதார் முகவரியை ஈசியா மாத்தறது எப்படி? இதோ சூப்பர் டிரிக்!
33
ஆதார் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி?
Image Credit : Insatgram

ஆதார் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி?

இந்த வசதியைப் பெறுவது மிகவும் எளிது. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஐபோனில் ஆப்பிள் ஆப் ஸ்டோருக்குச் சென்று, 'Aadhaar (by UIDAI)' எனத் தேடி செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். செயலியை நிறுவிய பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் மற்றும் MPIN-ஐ உள்ளிட்டு உள்நுழைய வேண்டும். 

செயலியின் முகப்புத் திரையில் 'Biometrics Unlocked' என்ற ஆப்ஷன் தெரியும், அதை கிளிக் செய்து 'Confirm Biometrics Lock' என்பதைத் தட்டினால் போதும், உங்கள் பயோமெட்ரிக் விவரங்கள் உடனடியாகப் பூட்டப்படும். மீண்டும் தேவைப்படும்போது, இதே செயலியில் 'Biometrics Locked' ஐகானைத் தட்டி, 'Confirm Unlock Biometrics' கொடுத்தால், தற்காலிகமாகத் திறந்து கொள்ளலாம்.

மொபைல் எண்ணை நீங்கள் இழந்தால்?

ஒரு முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்; இந்த செயலியுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணையோ அல்லது போனையோ நீங்கள் இழந்தால், அதை மீட்டெடுக்கும் வரை செயலி மூலம் ஆதார் சேவைகளைப் பயன்படுத்த முடியாது. ஆதாருடன் மொபைல் எண்ணை பதிவு செய்துள்ள அனைத்து இந்தியக் குடிமக்களும் இந்த பயோமெட்ரிக் லாக் வசதியைப் பயன்படுத்தலாம்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஆதார் அட்டை
தொழில்நுட்பம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
மொபைலில் டெலிட் ஆன போட்டோவை திரும்பப் பெறுவது எப்படி? சிம்பிள் டிப்ஸ்!
Recommended image2
Vivo T5 Lite: 6500mAh பேட்டரி, 50MP கேமரா.. விவோ டி5 லைட் மொபைலுக்கு ரூ.1,500 தள்ளுபடி!
Recommended image3
கூகுள் அக்கவுன்ட் பாஸ்வேர்ட் மறந்துடுச்சா? இந்த ஒரு ட்ரிக் தெரிஞ்சா போதும் ஈஸியா லாக் இன் பண்ணலாம்!
Related Stories
Recommended image1
Aadhaar Users Alert: இன்று முதல் இந்த ஆப் செயல்படாது.. ஆதார் பயனர்களுக்கு மத்திய அரசின் முக்கிய எச்சரிக்கை
Recommended image2
Aadhaar Card Update : ஆதார் முகவரியை ஈசியா மாத்தறது எப்படி? இதோ சூப்பர் டிரிக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved