MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • அடிக்கடி போன் சார்ஜ் போடுறீங்களா? வருஷத்துக்கு எவ்ளோ செலவாகுது தெரியுமா? இதோ ஆச்சரிய கணக்கீடு!

அடிக்கடி போன் சார்ஜ் போடுறீங்களா? வருஷத்துக்கு எவ்ளோ செலவாகுது தெரியுமா? இதோ ஆச்சரிய கணக்கீடு!

Smartphone charging cost: நேரம் கிடைக்கும்போதெல்லாம் போனை சார்ஜ் செய்கிறீர்களா? ஒருமுறை போன் சார்ஜ் செய்ய எவ்வளவு செலவாகும் என்று தெரியுமா? இந்த கணக்கை பார்த்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 31 2026, 01:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
போன் சார்ஜ் போடும் கரண்ட் பில் கணக்கீடு
Image Credit : Gemini AI

போன் சார்ஜ் போடும் கரண்ட் பில் கணக்கீடு

மொபைல் போன் இல்லாமல் நம்மால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது. எங்கு சென்றாலும் சார்ஜரை எடுத்துச் செல்கிறோம். ஆனால், ஒருமுறை போனை சார்ஜ் செய்ய எவ்வளவு செலவாகும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஒரு சாதாரண சார்ஜரின் திறன் 5 முதல் 20 வாட்ஸ் வரை இருக்கும். இதில் 5 வாட்ஸ் சார்ஜர் மெதுவாகவும், 20 வாட்ஸ் சார்ஜர் வேகமாகவும் போனை சார்ஜ் செய்யும்.

நீங்கள் 10 வாட்ஸ் சார்ஜரை பயன்படுத்துகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். போன் சார்ஜ் ஆக 2 மணிநேரம் ஆகிறது என்றால், 10 வாட்ஸ் X 2 மணிநேரம் = 20 வாட்ஸ்-மணிநேரம். அதாவது 0.02 யூனிட் கரண்ட் செலவாகும். தினமும் ஒருமுறை போனை சார்ஜ் செய்தால் 0.02 யூனிட் மின்சாரம் செலவாகிறது. இதன்படி பார்த்தால், ஒரு வருடத்திற்கு மொத்தம் 0.02 × 365 = 7.30 யூனிட் கரண்ட் செலவாகும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஒரு வ்ருஷத்துக்கு இவ்வளவு செலவா?
Image Credit : Asianet News

ஒரு வ்ருஷத்துக்கு இவ்வளவு செலவா?

ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை 10 ரூபாய் என வைத்துக்கொள்வோம். ஒரு வருடத்திற்கு போன் சார்ஜ் செய்ய 73 ரூபாய் செலவாகும். இதுவே 20 வாட்ஸ் சார்ஜர் பயன்படுத்தினால், வருடத்திற்கு சுமார் 73 × 2 = 146 ரூபாய் வரை செலவாகும். போன் முழுமையாக சார்ஜ் ஆன பிறகு, பிளக்கில் இருந்து சார்ஜரை கழற்றி விடுங்கள். அப்படியே விட்டால் தேவையில்லாமல் கரண்ட் செலவாகும். வயர் அறுந்திருந்தால் விபத்துகளும் நடக்கலாம்.

34
100% சார்ஜ் ஆன பிறகும் மின்சாரம் உறிஞ்சும்
Image Credit : AI

100% சார்ஜ் ஆன பிறகும் மின்சாரம் உறிஞ்சும்

மொபைல் போனை இரவு முழுவதும் சார்ஜ் போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால், போன் 100% சார்ஜ் ஆன பிறகும் பிளக் ஆன் செய்யப்பட்டிருந்தால், அது 'ட்ரிக்கிள் சார்ஜிங்' முறையில் தொடர்ந்து சிறிதளவு மின்சாரத்தை உறிஞ்சிக்கொண்டே இருக்கும். இதனால் மின்சாரம் வீணாவது மட்டுமின்றி, பேட்டரியின் வெப்ப நிலை உயர்ந்து அதன் ஆயுட்காலமும் குறையும். பேட்டரியின் ஆரோக்கியத்தை நீண்ட காலம் பாதுகாக்க, சார்ஜ் அளவை எப்போதும் 20% முதல் 80% வரை பராமரிப்பதே சிறந்த வழிமுறையாகும்.

மேலும், ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் (Lithium-ion) பேட்டரிகள் அதிக வெப்பத்தால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை. எனவே, போன் சார்ஜ் ஆகும்போது கேமிங் விளையாடுவது அல்லது வீடியோ பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல, மலிவு விலை மற்றும் தரமற்ற சார்ஜர்களைப் பயன்படுத்துவது மின் கசிவு மற்றும் போன் வெடிப்பு போன்ற ஆபத்துகளுக்கு வழிவகுக்கும். எப்போதும் நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட போலி அற்ற சார்ஜர்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

44
போன் சார்ஜ் போடும்போது இதை செய்யுங்க‌
Image Credit : our own

போன் சார்ஜ் போடும்போது இதை செய்யுங்க‌

மின்சாரத்தை சேமிப்பது மட்டுமின்றி, பேட்டரியை பாதுகாக்கவும் சில எளிய வழிகள் உள்ளன. போனை சார்ஜ் செய்யும்போது அதன் பேக் கவரை கழற்றி வைப்பது நல்லது. ஏனெனில் சார்ஜ் ஆகும்போது உருவாகும் வெப்பம் வெளியேறாமல் கவருக்குள்ளேயே தங்கினால், அது பேட்டரியின் திறனைக் குறைத்துவிடும்.

அதேபோல், போனை சார்ஜ் போடும்போது "ஏரோப்ளேன் மோட்" ஆன் செய்து வைத்தால், பின்னணியில் இயங்கும் நெட்வொர்க் பயன்பாடுகள் தடுக்கப்பட்டு போன் இன்னும் வேகமாகவும், குறைந்த மின் நுகர்விலும் சார்ஜ் ஆகும். கணினி அல்லது லேப்டாப்பில் உள்ள USB போர்ட் மூலம் போனை சார்ஜ் செய்வதை விட, நேரிடையாக சுவர் சாக்கெட்டில் சார்ஜ் செய்வதே போனுக்கும் பேட்டரிக்கும் பாதுகாப்பானது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
திறன் பேசி
தொழில்நுட்பம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
கருவில் கண் பார்வை எப்படி உருவாகிறது? வைட்டமின் ஏ-வின் 30 ஆண்டு கால புதிருக்கு கிடைத்தது விடை!
Recommended image2
வாட்ஸ்அப் குரூப்பில் இனி இந்த 4 மாற்றங்கள்: புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம்!
Recommended image3
Best Soundbars: போட் டூ ஜெப்ரானிக்ஸ் வரை... ரூ.5,000-க்குள் டால்பி ஆடியோ, 5.1 சரவுண்ட் தரும் டாப் 5 சவுண்ட்பார்கள்!
Related Stories
Recommended image1
Indian Railways: ரயில்களில் போன் சார்ஜ் போட தடை..? சார்ஜிங் போர்ட்களை அனைத்து வைக்க முடிவு..
Recommended image2
100% சார்ஜ் ஆன பிறகும் ஸ்மார்ட்போன் பிளக்கில் இருந்தால் வெடிக்குமா? பலரும் சொல்லாத உண்மை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved