- Home
- இந்தியா
- Indian Railways: ரயில்களில் போன் சார்ஜ் போட தடை..? சார்ஜிங் போர்ட்களை அனைத்து வைக்க முடிவு..
Indian Railways: ரயில்களில் போன் சார்ஜ் போட தடை..? சார்ஜிங் போர்ட்களை அனைத்து வைக்க முடிவு..
Indian Railways: ரயில்களில் இரவு நேரங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு சார்ஜிங் பாயிண்ட்களை அனைத்து வைக்க அனைத்து கோட்டங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் இது அமலுக்கு வரவுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது

ரயிலில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதி..
ரயிலில் இரவு நேரத்தில் செல்போன் சார்ஜ் செய்யத் திட்டமிட்டிருப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ரயில் பெட்டிகளில் உள்ள மொபைல் சார்ஜிங் பாயிண்ட்களை இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை கட்டாயம் அணைத்து வைக்க வேண்டும் என ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் ரயிலில் பவர் பேங்க் வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த உத்தரவு மீண்டும் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது.
எதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
ரயில்களில் செல்போன், மடிக்கணினி, பவர் பேங்க் போன்ற மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்வதற்காகப் பயணிகளுக்கு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், மின்னணு சாதனங்களில் ஏற்படும் கோளாறுகள் சில நேரங்களில் தீ விபத்துக்கு வழிவகுக்கலாம்.
இந்தப் பின்னணியில், சமீபத்தில் நடந்த பவர் பேங்க் வெடிப்புச் சம்பவம் மீண்டும் பாதுகாப்பு தொடர்பான கவனத்தை ஏற்படுத்தியுள்ளது
கடந்த அக்டோபர் 25 அன்று மும்பை–ஹவுரா மெயில் (ரயில் எண் 12809) ரயிலில் ஒடிசா மாநிலம் பண்டாமுண்டா பகுதியில் அதிகாலை நேரத்தில் பயணி ஒருவர் தனது பவர்பேங்க்கை சார்ஜ் செய்த நிலையில் உறங்கியுள்ளார். அப்போது திடீரென பவர்பேங்க் வெடித்து ரயில் பெட்டிக்குள் புகை பரவியுள்ளது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஊடியர்கள் உடனடியாக பிரச்சினையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதன் தொடர்ச்சியாக ரயில் சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக சென்றது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இரவு நேரத்தில் சார்ஜிங் பாயிண்ட்களை அணைத்து வைப்பதற்கான நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
செல்போன் மட்டும்தானா? எந்தெந்த சாதனங்களை சார்ஜ் செய்ய முடியாது?
இந்த நேரத்தில் ரயில் பெட்டிகளில் உள்ள சார்ஜிங் பாயிண்ட்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்படுவதால், அவற்றைப் பயன்படுத்தி சார்ஜ் செய்யும் வசதி கிடைக்காது.
• செல்போன்கள்
• மடிக்கணினிகள்
• பவர் பேங்க்கள்
• சார்ஜ் செய்யக்கூடிய பிற மின்னணு சாதனங்கள்
இங்கு முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டியது, சாதனங்களை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டதாக அல்ல; குறிப்பிட்ட நேரத்தில் ரயிலின் சார்ஜிங் பாயிண்ட்களைப் பயன்படுத்த முடியாது என்பதுதான்.
ரயிலில் பயணம் செய்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
1. புறப்படுவதற்கு முன்பே சார்ஜ் செய்யுங்கள்
இரவு நேரப் பயணம் என்றால், ரயிலில் ஏறுவதற்கு முன்பே செல்போனை முழுமையாகவோ தேவையான அளவுக்கோ சார்ஜ் செய்துகொள்ளுங்கள்.
2. பவர் பேங்கில் போதுமான மின்சாரம் வைத்திருங்கள்
பயணத்தின்போது அவசரத் தேவைக்கு உதவும் வகையில் முன்கூட்டியே சார்ஜ் செய்துகொள்ளுங்கள். பவர் பேங்கை இரவில் சார்ஜில் இணைத்துவிட்டு உறங்குவதைத் தவிர்க்கவும்.
3. சேதமடைந்த சாதனங்களைப் பயன்படுத்தாதீர்கள்
பேட்டரி வீங்கியிருந்தாலோ, சாதனம் வழக்கத்திற்கு மாறாகச் சூடானாலோ அல்லது சேதமடைந்திருந்தாலோ சார்ஜ் செய்வதைத் தவிர்க்கவும்.
4. பயணத்தின்போது சார்ஜிங் வசதியை முன்கூட்டியே திட்டமிடுங்கள்
நீண்ட தூரப் பயணமாக இருந்தால், இரவு நேரத் தடையை மனதில் வைத்து செல்போன் பயன்பாட்டைத் திட்டமிடுங்கள்.

