"டூயட்" பாடும் Flipkart & Oppo! பம்பர் தள்ளுபடியில் இயர்பட்ஸ் வாங்கலாம் வாங்க!
ஃபிளிப்கார்ட்டில் ஒப்போ என்கோ பட்ஸ் 2, பட்ஸ் 3, மற்றும் ஏர் 2i-க்கு கிடைக்கும் தள்ளுபடிகள். சிறந்த சலுகைகள், விலை மற்றும் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

Flipkart இயர்பட்ஸ் இல்லாதவர்களே இல்லை
இன்றைய காலகட்டத்தில் இயர்பட்ஸ் இல்லாதவர்களே இல்லை எனலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். நீங்களும் புதிய இயர்பட்ஸ் வாங்க திட்டமிட்டிருந்தால், ஒப்போ பிராண்ட் சிறந்த தேர்வாக அமையும். தற்போது, ஃபிளிப்கார்ட்டில் ஒப்போ இயர்பட்ஸ்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. உங்கள் பணத்தைச் சேமிக்க உதவும் சில சிறந்த சலுகைகளை இங்கு பார்க்கலாம்.
ஒப்போ என்கோ பட்ஸ் 2
ரூ. 3,999 மதிப்புள்ள இந்த ஒப்போ இயர்பட்ஸை ஃபிளிப்கார்ட்டில் 60% தள்ளுபடியுடன் ரூ. 1,599-க்கு வாங்கலாம். முழு தொகையையும் ஒரே நேரத்தில் செலுத்த விரும்பாதவர்கள், மாதத்திற்கு ரூ. 79 வீதம் 24 மாதங்களுக்கு EMI வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இயர்பட்ஸ் 28 மணிநேர பேட்டரி ஆயுள், 1.5 மணிநேரத்தில் முழு சார்ஜ், எக்கோ லைவ் சவுண்ட் எஃபெக்ட், AI டீப் நாய்ஸ் கேன்சலேஷன், அல்ட்ரா லோ லேட்டன்சி கேம் மோட் மற்றும் IPX4 வாட்டர்-ரெசிஸ்டண்ட் ரேட்டிங் போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
ஒப்போ என்கோ பட்ஸ் 3
நீங்கள் ஒரு பிரீமியம் இயர்பட்ஸ் வாங்க விரும்பினால், இந்த ஒப்போ தயாரிப்பை தேர்வு செய்யலாம். இதன் அசல் விலை ரூ. 7,999 ஆகும். இருப்பினும், ஃபிளிப்கார்ட்டில் 37% தள்ளுபடியுடன் ரூ. 4,999-க்கு வாங்கலாம். இங்கு மாதத்திற்கு ரூ. 834 வீதம் 6 மாதங்களுக்கு EMI வசதியும் வழங்கப்படுகிறது. இதில் 5.3 ப்ளூடூத் வெர்ஷன், 30 மணிநேர பேட்டரி ஆயுள், ஸ்பெஷல் சவுண்ட் எஃபெக்ட், 47 ms அல்ட்ரா-லோ லேட்டன்சி கேமிங் மோட், IP55 டஸ்ட்ப்ரூப் மற்றும் வாட்டர்ப்ரூப் ரேட்டிங், பல டிவைஸ்களை இணைக்கும் வசதி போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன.
ஒப்போ என்கோ ஏர் 2i
மூன்லைட் நிறத்தில் உள்ள ஒப்போவின் இந்த இயர்பட்ஸ், பிளிப்கார்ட்டில் 55% தள்ளுபடியுடன் ரூ. 1,799-க்கு கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 3,999 ஆகும். இதற்கும் EMI விருப்பம் உண்டு. சிறப்பம்சங்களைப் பற்றி பேசும்போது, இந்த இயர்பட்ஸில் AI டீப் நாய்ஸ் கேன்சலேஷன், 28 மணிநேர மியூசிக் நேரம், 5.2 ப்ளூடூத் லேட்டன்சி, 94ms கேமிங் மோட், டபுள்-டேப் மூலம் கேமராவைக் கட்டுப்படுத்தும் வசதி, சிம்பிள் டச் கண்ட்ரோல் மற்றும் IPX4 வாட்டர்-ரெசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் உள்ளன.
குறிப்பு:
இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் இணையதளத்தில் இருந்து பெறப்பட்டவை. எந்தவொரு கட்டணத்தையும் செலுத்துவதற்கு முன், அதிகாரப்பூர்வ இணையதளத்தை சரிபார்க்கவும்.