தண்ணீரில் போன் விழுந்துருச்சா.. செலவு இல்லாமல் மொபைலை சரி செய்யலாம்!
ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால், உடனடியாக செய்ய வேண்டிய எளிய வழிமுறைகளை பார்க்கலாம். உங்கள் போனை பெரிய சேதத்திலிருந்து காப்பாற்றி, தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க உதவும்.

போன் தண்ணீரில் விழுந்தால்
இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் என்பது அத்தியாவசியமான ஒரு பொருளாக மாறிவிட்டது. ஆனால் ஒரு சிறிய கவனக்குறைவால் கூட, போன் தண்ணீரில் விழுந்து பெரிய பிரச்சனையாக மாறலாம். தண்ணீரில் விழுந்த உடன் போன் ஆகிவிடுவது, திரை வேலை செய்யாதது, சார்ஜ் ஆகாதது போன்ற பிரச்சனைகள் பொதுவாக ஏற்படும். இப்படி நடந்தால் பலரும் உடனடியாக சர்வீஸ் சென்டரை நாடுவார்கள். ஆனால் சரியான நேரத்தில் சரியான முறையை பின்பற்றினால், வீட்டிலேயே போனை பாதுகாக்க முடியும்; தேவையற்ற செலவையும் தவிர்க்கலாம்.
போன் தண்ணீரில் விழுந்தவுடன் செய்ய வேண்டிய முதல் வேலை, அதை உடனே வெளியே எடுப்பதே. போன் ஆனில் இருந்தால், ஒரு நொடிக்கூட தாமதிக்காமல் ஆஃப் செய்ய வேண்டும். சார்ஜர், இயர்போன், கேபிள் போன்ற இணைப்புகள் இருந்தால் உடனடியாக அகற்ற வேண்டும். இதனால் உள்ளே உள்ள சர்க்யூட் பகுதிகளில் ஷார்ட் சர்க்யூட் ஏற்படும் அபாயம் குறையும். போன் எவ்வளவு விரைவாக செய்யப்படுகிறதோ, அவ்வளவு சேதம் குறைவாக இருக்கும்.
நனைந்த போன் சரி செய்வது
பின்னர் போனின் வெளிப்புறத்தில் இருக்கும் தண்ணீரை மென்மையான துணி அல்லது டிஷ்யூ மூலம் துடைக்க வேண்டும். பலர் ஹேர் டிரையரைப் பயன்படுத்துவார்கள்; ஆனால் அதிக வெப்பம் போனின் உள்ளமைப்பு பாகங்களை சேதப்படுத்தும். அதனால், காற்றோட்டம் உள்ள உலர்ந்த இடத்தில் இயல்பாக உலர விடுவது தான் சிறந்தது. நேரடி வெயிலில் வைப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அரிசியில் போனை வைப்பது ஈரத்தை உறிஞ்ச உதவலாம். ஆனால் இது முழுமையான தீர்வு அல்ல. சிறிதளவு தண்ணீர் பட்டிருந்தால் மட்டுமே இது தற்காலிக உதவியாக இருக்கும்.
போன் உலர்ந்த பிறகும் உடனடியாக சார்ஜ் போடக் கூடாது. குறைந்தது 24 முதல் 48 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். ஈரப்பதம் உள்ள நிலையில் சார்ஜ் செய்தால் பேட்டரி மற்றும் மதர்போர்டு சேதமடையும். போன் ஆன் ஆகவில்லை, கேமராவில் நீர் துளிகள் தெரிந்தால், ஸ்பீக்கரில் சத்தம் வரவில்லை என்றால், சர்வீஸ் சென்டரை அணுகுவது அவசியம். தண்ணீர் சேதம் மெதுவாக உள்ளே கரைப்பு (அரிப்பு) ஏற்படுவதால், தாமதிக்காமல் சரியான பரிசோதனை செய்வதே போனை முழுமையாக காப்பாற்றும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

