MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • இவரை தெரியுமா? வாட்ஸ்ஆப்பில் வரும் ஒற்றைப் புகைப்படம்... க்ளிக் செய்தால் ஒட்டுமொத்த பணமும் அவுட்!

இவரை தெரியுமா? வாட்ஸ்ஆப்பில் வரும் ஒற்றைப் புகைப்படம்... க்ளிக் செய்தால் ஒட்டுமொத்த பணமும் அவுட்!

முன்பின் தெரியாத எண்களிலிருந்து வாட்ஸ்ஆப்பில் வரும் மங்கலான புகைப்படங்களைப் பதிவிறக்கம் செய்வதன் மூலம் பயனர்களின் வங்கிக் கணக்கில் உள்ள ஒட்டுமொத்த பணத்தையும் திருடும் அதிநவீன சைபர் மோசடி குறித்து சைபர் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Sep 23 2026, 02:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வங்கிக் கணக்கை காலி செய்யும் புதிய மால்வேர் மோசடி
Image Credit : Chatgpt

வங்கிக் கணக்கை காலி செய்யும் புதிய மால்வேர் மோசடி

முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து வாட்ஸ்ஆப்பில் வரும் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்வதன் மூலம், ஸ்மார்ட்போன்களில் தீம்பொருளை (மால்வேர்) நிறுவி, வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை முழுமையாகத் திருடும் புதிய வகை சைபர் மோசடி குறித்து சைபர் பாதுகாப்புத் துறை தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
வாட்ஸ்ஆப்பில் வரும் மங்கலான புகைப்படங்களை கிளிக் செய்யாதீர்கள்
Image Credit : chatgpt

வாட்ஸ்ஆப்பில் வரும் மங்கலான புகைப்படங்களை கிளிக் செய்யாதீர்கள்

கடந்த சில மாதங்களாக இணையக் குற்றவாளிகள் அப்பாவி பொதுமக்களையும் அவர்களின் வங்கிக் கணக்குகளையும் குறிவைத்து அதிநவீன நுணுக்கமான மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இந்திய அளவிலும் உலக அளவிலும் உள்ள வாட்ஸ்ஆப் பயனர்களைக் குறிவைத்து ஒரு புதிய மோசடி அரங்கேறி வருகிறது.

வழக்கமாக எப்படி இருக்கிறீர்கள்? நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன் என்பது போன்ற நலம் விசாரிக்கும் தகவலுடன், இவரைத் தெரியுமா? என்ற கேள்வியோடு ஒரு மங்கலான புகைப்படம் வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்படுகிறது.

இதுவரை சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வுகளில் சந்தேகத்திற்குரிய லிங்குகளை (links) கிளிக் செய்ய வேண்டாம் என்று மட்டுமே கூறப்பட்டு வந்ததால், இது வெறும் புகைப்படம்தானே என்று நினைத்து பலரும் ஆர்வத்தில் அதைத் திறந்து பார்க்க முயல்கின்றனர். ஆனால், அந்தப் புகைப் படத்தை கிளிக் செய்தால், பயனர்களின் வங்கிக் கணக்கில் ஒற்றை ரூபாய் கூட மிச்சமில்லாமல் திருடப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்படுகிறது.

34
மோசடி எவ்வாறு அரங்கேறுகிறது?
Image Credit : Chatgpt

மோசடி எவ்வாறு அரங்கேறுகிறது?

அறிமுகமில்லாத புதிய எண்ணிலிருந்து வாட்ஸ்ஆப் எண்ணுக்கு நலம் விசாரிப்பது போலவோ, வாழ்த்துச் செய்தி, மீம், விடுமுறைக் கொண்டாட்டம் அல்லது விளம்பரம் போன்ற வடிவிலோ ஒரு மங்கலான புகைப்படம் வரும். அந்தப் புகைப்படத்தைப் பதிவிறக்கம் செய்ய கிளிக் செய்தவுடன், பயனருக்குத் தெரியாமலேயே ஒரு ஆபத்தான மால்வேர் அல்லது மோசடி ஆப் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் ஆகிவிடும்.

அவ்வாறு ஊடுருவும் தீம்பொருள், செல்போனில் உள்ள முக்கிய தகவல்கள் மோசடியாளர்களுக்கு அனுப்பத் தொடங்கும். மேலும், ஸ்மார்ட்போனில் உள்ள வங்கிச் செயலிகளுக்குள் (Banking Apps) ஊடுருவி, கடவுச்சொற்களைத் (Passwords) திருடி, கணக்கில் உள்ள பணத்தை உடனடியாகப் பரிமாற்றம் செய்ய மோசடியாளர்களுக்கு வழிவகுக்கும்.

எனவே, முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் தகவல்கள், லிங்குகள், புகைப்படங்கள் அல்லது கிளிக் செய்யும் வடிவில் வரும் எந்தவொரு பைலையும் எக்காரணம் கொண்டும் திறக்கவோ கிளிக் செய்யவோ வேண்டாம் என்று பொதுமக்களுக்குக் கண்டிப்பான அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

44
மோசடியைத் தவிர்க்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
Image Credit : Chatgpt

மோசடியைத் தவிர்க்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

வாட்ஸ்ஆப் செயலியில் Settings பகுதிக்குச் சென்று, Storage and Data என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். அதில் உள்ள Media auto-download வசதியை முழுமையாக ஆஃப் (Off) செய்ய வேண்டும். மொபைல் டேட்டா (When using mobile data), வை-ஃபை (When connected on Wi-Fi), மற்றும் ரோமிங் (When roaming) என அனைத்து நிலைகளிலும் படங்கள் தானாகப் பதிவிறக்கம் ஆவதை அணைத்து வைக்கவும்.

ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தும் முதியவர்கள், தொழில்நுட்ப அறிவு குறைவாக உள்ளவர்கள் மற்றும் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கும் இந்த ஆபத்து மற்றும் தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
தகிக்கும் பூமி... உலகை மிரட்டும் 'சூப்பர் எல் நினோ': 4.51 லட்சம் வெப்ப மரணங்கள் நிகழும் என பகீர் எச்சரிக்கை!
Recommended image2
TRAI New Rules: மொபைல் ரீசார்ஜில் பெரிய மாற்றம்.. ஜியோ, ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்
Recommended image3
12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவு: செப்.23 ஈக்வினாக்ஸ் இந்தியாவில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் என்ன?
Related Stories
Recommended image1
தகிக்கும் பூமி... உலகை மிரட்டும் 'சூப்பர் எல் நினோ': 4.51 லட்சம் வெப்ப மரணங்கள் நிகழும் என பகீர் எச்சரிக்கை!
Recommended image2
TRAI New Rules: மொபைல் ரீசார்ஜில் பெரிய மாற்றம்.. ஜியோ, ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved