MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தகிக்கும் பூமி... உலகை மிரட்டும் 'சூப்பர் எல் நினோ': 4.51 லட்சம் வெப்ப மரணங்கள் நிகழும் என பகீர் எச்சரிக்கை!

தகிக்கும் பூமி... உலகை மிரட்டும் 'சூப்பர் எல் நினோ': 4.51 லட்சம் வெப்ப மரணங்கள் நிகழும் என பகீர் எச்சரிக்கை!

தீவிரமடைந்து வரும் ‘எல் நினோ’ (El Nino) வானிலை மாற்றத்தால் செப்.2026 முதல் பிப்.2027 வரை உலகளவில் சுமார் 4,51,000 கூடுதல் வெப்ப மரணங்கள் நிகழலாம் என கிளைமேட் இம்பாக்ட் லேப் (Climate Impact Lab) எச்சரித்துள்ளது.

2 Min read
Author : Meenakshisundaram
Published : Sep 23 2026, 02:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
உலகளவில் கோரத்தாண்டவம் ஆடும் சூப்பர் எல் நினோ!
Image Credit : Chatgpt

உலகளவில் கோரத்தாண்டவம் ஆடும் சூப்பர் எல் நினோ!

பூமி இதுவரை கண்டிராத ஒரு கொடூரமான வெப்பப் பிடிக்குள் மெல்ல மெல்லச் சிக்கி வருகிறது. பசிபிக் பெருங்கடலில் விஸ்வரூபம் எடுத்து வரும் ‘எல் நினோ’ (El Nino) வானிலை மாற்றம், அடுத்த சில மாதங்களில் உலகை ஒரு தகிக்கும் அடுப்பாக மாற்றப்போகிறது என்ற பேரதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது சர்வதேச முன்னணி ஆய்வுக் கூட்டமைப்பான ‘கிளைமேட் இம்பாக்ட் லேப்’ (Climate Impact Lab).

செப்.2026 முதல் பிப்.2027 வரையிலான காலகட்டத்தில் மட்டும், வழக்கத்திற்கு மாறாகக் கொளுத்தப் போகும் அனல் காற்றில் சிக்கி சுமார் 4.51 லட்சம் மனித உயிர்கள் கூடுதலாகப் பறிபோகும் என இந்த ஆய்வு எச்சரிக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
அடுத்த 6 மாதங்களில் 4.5 லட்சம் பேர் பலியாகும் அபாயம்
Image Credit : Chatgpt

அடுத்த 6 மாதங்களில் 4.5 லட்சம் பேர் பலியாகும் அபாயம்

இன்னும் 20 ஆண்டுகள் கழித்து பூமி எவ்வளவு கொடுமையாகத் தகிக்கப் போகிறதோ, அந்தப் பயங்கரத்தை இப்போதே நாம் அனுபவிக்கத் தொடங்கிவிட்டோம். அதனால்தான் ஆய்வாளர்கள் இந்த நிகழ்வை எதிர்காலத்திலிருந்து வந்த அஞ்சல் அட்டை (Postcard from the future) என்று வர்ணிக்கின்றனர்.

வரலாறு காணாத ஆகஸ்ட்: 2026 ஆகஸ்ட் மாதம், பூமியின் வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆகஸ்ட் மாதமாகப் பதிவாகி உலகை மிரட்டியுள்ளது (சராசரி வெப்பநிலை 16.96°C). தொழில் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தை விட இது 1.65°C அதிகம். புவி வெப்பமயமாதலும் எல் நினோவும் கைகோர்த்து ஆடும் இந்த ருத்ரதாண்டவமே இந்தச் சாதனை வெப்பத்திற்கு காரணம் என்கிறது ஐரோப்பாவின் ‘கோப்பர்நிக்கஸ்’ மையம்.

35
சர்வதேச ஆய்வறிக்கை வெளியிட்ட எச்சரிக்கை!
Image Credit : Chatgpt

சர்வதேச ஆய்வறிக்கை வெளியிட்ட எச்சரிக்கை!

கார்பன் உமிழ்வுக்குக் குறைவாகக் காரணமான வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளே இந்த இயற்கைச் சீற்றத்தின் கோரப் பிடியில் முதன்மையாகச் சிக்கவுள்ளன. ஆப்ரிக்காவின் சாஹேல் பகுதி: நைஜீரியாவில் 31,400, சூடானில் 17,500 உட்பட இப்பகுதியில் மட்டும் 66,800 பேர் பலியாகும் அபாயம்.

இந்தோனேசியாவில் 19,300; பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளில் இணைந்து 19,400 உயிர்கள். கடுமையான அனல் காற்றுக்கு இந்தியாவில் 15,800 பேரும், பிரேசிலில் 13,300 பேரும் பலியாகக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

45
உலகளவில் 4.5 லட்சம் மரணங்களை ஏற்படுத்தப்போகும் 'சூப்பர் எல் நினோ'!
Image Credit : Chatgpt

உலகளவில் 4.5 லட்சம் மரணங்களை ஏற்படுத்தப்போகும் 'சூப்பர் எல் நினோ'!

பயப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், எல் நினோ இன்னும் அதன் முழு வீரியத்தையே காட்டத் தொடங்கவில்லை. வரும் நவம்பர் – டிசம்பர் மாதங்களில்தான் இதன் தாக்கம் உச்சத்தை தொடும் என்றும், பிப்ரவரி 2027 வரை இது நீடிப்பது 100% உறுதி என்றும் உலக வானிலை அமைப்பு (WMO) எச்சரித்துள்ளது.

பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட 1.8°C முதல் 3°C வரை எகிறிப் போயுள்ளதாக அமெரிக்காவின் NOAA அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. வட அரைக்கோள நாடுகளான இந்தியா, பாகிஸ்தானில் 2027-ஆம் ஆண்டின் கோடைக்காலம் தொடங்கும் போது, இந்த வெப்ப மரணங்களின் எண்ணிக்கை இன்னும் பலமடங்கு உயரும் என்ற கசப்பான உண்மையையும் ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர்.

55
உலகையே நடுங்க வைக்கும் 'சூப்பர் எல் நினோ' ஆய்வு முடிவு!
Image Credit : Chatgpt

உலகையே நடுங்க வைக்கும் 'சூப்பர் எல் நினோ' ஆய்வு முடிவு!

1996 முதல் 2025 வரையிலான 30 ஆண்டுகால இயல்பான சராசரியோடு ஒப்பிட்டு, அறிவியல் பூர்வமாகத் துல்லியமாகக் கணக்கிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை, உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட அவசர அபாய மணி.

பொதுமக்களுக்கு முன்கூட்டியே வெப்ப எச்சரிக்கைகளை வழங்குவது, ஆங்காங்கே குளிர்விப்பு மையங்கள் (cooling centres) மற்றும் குடிநீர் பந்தல்களை அமைப்பது, சுட்டெரிக்கும் வெயிலில் உழைக்கும் தொழிலாளர்களுக்குப் பணிப் பாதுகாப்பு தருவது, மற்றும் மருத்துவமனைகளைத் தயார் நிலையில் வைப்பது போன்ற போர்க்கால நடவடிக்கைகளை அரசுகள் உடனடியாக எடுக்காவிட்டால், இந்த கொடும் வெப்ப அலை லட்சக்கணக்கான மனித உயிர்களைச் சத்தமில்லாமல் காவு வாங்கிவிடும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
அறிவியல்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
TRAI New Rules: மொபைல் ரீசார்ஜில் பெரிய மாற்றம்.. ஜியோ, ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்
Recommended image2
12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவு: செப்.23 ஈக்வினாக்ஸ் இந்தியாவில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் என்ன?
Recommended image3
சினிமா, படிப்பு, கேமிங்: விலையோ கம்மி... பேட்டரி தாறுமாறு; 2026-ன் டாப் 5 பட்ஜெட் டேப்லெட்ஸ்!
Related Stories
Recommended image1
12 மணி நேரம் பகல், 12 மணி நேரம் இரவு: செப்.23 ஈக்வினாக்ஸ் இந்தியாவில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் என்ன?
Recommended image2
வெறும் 2% போதும், 200 வருஷத்துக்கு பெட்ரோல், டீசல் தேவையே இல்ல... உலகையே ஆளப்போகும் 'தங்க ஹைட்ரஜன்'!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved