உஷார்! உங்கள் போனில் இந்த 3 ஆப் இருக்கா? உடனே டெலீட் பண்ணுங்க!
ஷார்! உங்கள் போனில் இந்த 3 ஆப் இருக்கா? Android AnyDesk, TeamViewer செயலிகள் மூலம் மோசடி நடப்பதாக எச்சரிக்கை. ஸ்கேமர்களிடமிருந்து தப்பிக்க இந்த ஆப்ஸை உடனே டெலீட் செய்யவும்.

Android
ஸ்மார்ட்போன் பயனர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள மூன்று பிரபலமான செயலிகள் (Apps) குறித்துத் தீவிர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலிகள் உங்கள் போனை ஹேக்கர்கள் முலுக் கட்டுப்பாட்டில் எடுக்க அனுமதிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஆபத்தான அந்த 3 செயலிகள் எவை?
பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கும் அந்த மூன்று செயலிகள்:
1. AnyDesk (எனி டெஸ்க்)
2. TeamViewer (டீம் வியூவர்)
3. QuickSupport (குவிக் சப்போர்ட்)
உண்மையில் இவை சட்டப்பூர்வமான மற்றும் பயனுள்ள செயலிகள்தான். ஆனால், சைபர் குற்றவாளிகள் (Scammers) இவற்றைத் தவறாகப் பயன்படுத்திப் பயனர்களின் வங்கிக் கணக்குகளைக் காலி செய்து வருகின்றனர்.
மோசடி நடப்பது எப்படி?
வங்கி அதிகாரி போலவோ அல்லது கஸ்டமர் கேர் போலவோ பேசும் மோசடி நபர்கள், "உங்கள் KYC அப்டேட் செய்ய வேண்டும்" அல்லது "பணம் ரீஃபண்ட் ஆகவில்லை" என்று கூறி உங்களை நம்ப வைப்பார்கள். இந்தப் பிரச்சனையைச் சரிசெய்ய, மேலே உள்ள செயலிகளில் ஒன்றை இன்ஸ்டால் செய்யச் சொல்வார்கள்.
நீங்கள் செயலியை இன்ஸ்டால் செய்து, அதில் வரும் 'Access Code'-ஐ அவர்களிடம் பகிர்ந்தால் போதும், அவர்கள் உங்கள் போனைத் தங்கள் இடத்திலிருந்தே முழுமையாக இயக்க முடியும். உங்கள் மெசேஜ், வங்கிச் செயலிகள், கேலரி என அனைத்தையும் அவர்கள் பார்க்கவும் கட்டுப்படுத்தவும் முடியும்.
பயனர்கள் செய்ய வேண்டியது என்ன?
• தேவையில்லையெனில் நீக்கவும்: நீங்கள் ஐடி (IT) துறையில் இல்லை என்றால் அல்லது இந்தச் செயலிகளின் பயன்பாடு உங்களுக்குத் தெரியாது என்றால், உடனடியாக இவற்றை உங்கள் போனில் இருந்து நீக்கிவிடுவது நல்லது.
• யாரையும் நம்பாதீர்கள்: வங்கி அதிகாரிகளோ அல்லது அரசு ஊழியர்களோ ஒருபோதும் உங்களை 'Screen Sharing' செயலிகளை டவுன்லோட் செய்யச் சொல்ல மாட்டார்கள்.
• கோடு பகிர வேண்டாம்: எந்தக் காரணத்தைக் கொண்டும் உங்கள் போன் திரையில் வரும் எண்களையோ அல்லது OTP-யையோ யாருடனும் பகிராதீர்கள்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

