- Home
- டெக்னாலஜி
- 80 மணி நேர பேட்டரி லைஃப், 52dB நாய்ஸ் கேன்சலேஷன்... பட்ஜெட் விலையில் ஹூவாய் ஃப்ரீபட்ஸ் அறிமுகம்!
80 மணி நேர பேட்டரி லைஃப், 52dB நாய்ஸ் கேன்சலேஷன்... பட்ஜெட் விலையில் ஹூவாய் ஃப்ரீபட்ஸ் அறிமுகம்!
ஹூவாய் (Huawei) நிறுவனம் நீண்ட பேட்டரி பேக்கப் மற்றும் நவீன ஆடியோ அம்சங்களுடன் கூடிய தனது புதிய ‘ஃப்ரீபட்ஸ் எஸ்இ 5 மேக்ஸ்’ (FreeBuds SE 5 Max) வயர்லெஸ் இயர்பட்ஸை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹூவாய்யின் 'ஃப்ரீபட்ஸ் எஸ்இ 5 மேக்ஸ்' அறிமுகம்!
நீண்ட பேட்டரி பேக்கப் தரும் வயர்லெஸ் இயர்பட்ஸ் (TWS) சந்தையில் பல நிறுவனங்கள் போட்டி போட்டு வரும் நிலையில், ஹூவாய் (Huawei) நிறுவனம் தனது புதிய 'ஃப்ரீபட்ஸ் எஸ்இ 5 மேக்ஸ்' (FreeBuds SE 5 Max) இயர்பட்ஸை அறிமுகம் செய்து தொழில்நுட்ப உலகைக் கவனிக்க வைத்துள்ளது.
அதிநவீன 52dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC), ஹை-ரெஸ் எல்டிஏசி (LDAC) ஆடியோ சப்போர்ட், மல்டி-பாயிண்ட் கனெக்டிவிட்டி மற்றும் சார்ஜிங் கேஸுடன் சேர்த்து மொத்தம் 80 மணி நேர பேட்டரி ஆயுள் போன்ற பிரிமியம் அம்சங்களை உள்ளடக்கிய இந்த இயர்பட்ஸ், வெறும் 8,580 ஜப்பானிய யென் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,700 / $56) என்ற பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ளது.
அசத்தலான பேட்டரி பேக்கப் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்
முந்தைய மாடலான ‘ஃப்ரீபட்ஸ் எஸ்இ 4 ஏஎன்சி’ இயர்பட்ஸ் 50 மணி நேர பேட்டரி பேக்கப் மட்டுமே வழங்கிய நிலையில், புதிய எஸ்இ 5 மேக்ஸ் அதைவிடக் கூடுதலாக 80 மணி நேர பயன்பாட்டை வழங்குகிறது. ஏ.என்.சி இல்லாத போது (ANC Off) இயர்பட்ஸை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் தொடர்ந்து 10 மணி நேரமும், சார்ஜிங் கேஸுடன் சேர்த்து மொத்தம் 80 மணி நேரமும் பயன்படுத்த முடியும். ஏஎன்சி உள்ள போது (ANC On) ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 மணி நேரமும், சார்ஜிங் கேஸுடன் சேர்த்து மொத்தம் 57 மணி நேரமும் பிளேபேக் கிடைக்கும். வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 4 மணி நேரம் தொடர்ந்து பாட்டு கேட்கும் வசதியும் இதில் உள்ளது.
52dB நாய்ஸ் கேன்சலேஷன் & ஆடியோ சிறப்பம்சங்கள்
சுற்றுப்புற இரைச்சலைத் தடுக்கும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பத்தை ஹூவாய் நிறுவனம் இதில் மேம்படுத்தி உள்ளது. பயனர்கள் தேர்வு செய்யும் வகையில் 4 மோடுகளுடன் கூடிய 52dB நாய்ஸ் ரிடக்ஷன் திறன் இதில் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 10 மி.மீ டைனமிக் டிரைவர்களுடன் வரும் இந்த இயர்பட்ஸ், தரமான இசை அனுபவத்திற்காக 'LDAC' ஆடியோ கோடெக்கை ஆதரிக்கிறது. மேலும், பயனர்கள் தங்களுக்கு விருப்பமான வகையில் இசையின் சமநிலையை மாற்றியமைக்க 'Huawei Audio Connect' செயலியில் 10-பேண்ட் ஈக்வலைசர் (Equalizer) வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களுடன் இணைத்துக்கொள்ளும் 'மல்டி-பாயிண்ட் கனெக்டிவிட்டி' வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்
ஹூவாய் நிறுவனம் இந்த ‘ஃப்ரீபட்ஸ் எஸ்இ 5 மேக்ஸ்’ மாடலை நவ.6 அன்று ஜப்பானில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இதன் வெள்ளை நிற மாடல் 'யோடோபாஷி கேமரா' (Yodobashi Camera) போன்ற முன்னணி சில்லறை விற்பனையாளர்கள் மூலம் ஜப்பானில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் கருப்பு மற்றும் நீல நிற (Black & Blue) வேரியன்ட்கள் நவ.20 முதல் விற்பனைக்கு வரவுள்ளன.
ஐரோப்பிய சந்தையான ஜெர்மனியில் இதன் விலை €79 என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், நவ.10 முதல் 30 வரையிலான அறிமுகச் சலுகைக் காலத்தில் €49 (சுமார் $52) சலுகை விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்திலும் (UK) இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இது பட்டியலிடப்பட்டுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் எல்டிஏசி சப்போர்ட், மல்டி-பாயிண்ட் இணைப்பு மற்றும் பிரமாண்டமான 80 மணி நேர பேட்டரி லைஃப் தருவதால், பட்ஜெட் இயர்பட்ஸ் பிரிவில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.













