ஒரு நாளுக்கு ரூ.5 கூட இல்லை… 300 நாளைக்கு கவலை இல்ல.. பிஎஸ்என்எல் சூப்பர் பிளான்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ப்ரீபெய்ட் பிளான் மூலம் 300 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது, இது சிம்-ஐ ஆக்டிவாக வைத்திருக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது. இந்த திட்டம் பற்றிய விவரங்களை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

பிஎஸ்என்எல் 300 நாள் வேலிடிட்டி
குறைந்த செலவில் நீண்ட கால வேலிடிட்டி தேடுபவர்களுக்கு பிஎஸ்என்எல் ஒரு சிறந்த ரீசார்ஜ் பிளானை வழங்குகிறது. ரூ.1499 விலையில் கிடைக்கும் இந்த ப்ரீபெய்ட் பிளான், 300 நாட்கள் வரை செல்லுபடியாகும் என்பதால், சிம்-ஐ ஆக்டிவாக வைத்திருப்பவர்களுக்கு மிகவும் உகந்ததாக உள்ளது. டேட்டா, கால், எஸ்எம்எஸ் என தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் இந்த ஒரே பிளான் வழங்குகிறது.
பிஎஸ்என்எல்-ன் ரூ.1499 பிளான் குறிப்பாக குறைந்த பயன்பாடு கொண்ட பயனர்களின் மனதில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பிளானில், மொத்தம் 32ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா வழங்கப்படுகிறது. இந்த வரம்பை கடந்த பிறகு, டேட்டா முழுமையாக நிறுத்தப்படாது; ஆனால் வேகம் 40kbps ஆக குறைக்கப்படும். இதனால் வாட்ஸ்அப் மெசேஜ், அடிப்படை இணைய பயன்பாடுகளை பயன்படுத்த முடியாது, ஆனால் வீடியோ ஸ்ட்ரீமிங் போன்ற அதிக டேட்டா பயன்பாடு சாத்தியமில்லை.
டேட்டாவுடன் சேர்த்து, இந்த பிளானில் அன்லிமிட்டெட் வோய்ஸ் கால் வசதியும் வழங்கப்படுகிறது. இந்தியா எந்த நெட்வொர்க்குக்கும் அழைப்புகளை இலவசமாக செய்யலாம். மேலும், தினமும் 100 SMS அனுப்பும் வசதியும் இதில் அடங்கும். இதனால், தினசரி தொடர்பு தேவைகளுக்கு இந்த பிளான் போதுமானதாக இருக்கும்.
பிஎஸ்என்எல் ரீசார்ஜ்
இந்த பிளானின் முக்கிய சிறப்பு அதன் வேலிடிட்டி. ரூ.1499 ரீசார்ஜ் செய்தால், 300 நாட்கள் வரை எந்த ரீசார்ஜ் கவலையும் இல்லாமல் பயன்படுத்தலாம். இதனை தினசரி செலவாகக் கணக்கிட்டால், ஒரு நாளுக்கு சுமார் ரூ.4.99 மட்டுமே ஆகும். இதே சமயம், பிஎஸ்என்எல் நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய 4G டவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை மற்றும் 5G-க்கு தயாராக உள்ளன.
போட்டியாளர்களை ஒப்பிட்டுப் பார்த்தால், Airtel-ன் குறைந்த விலை ஆண்டு பிளான் ரூ.1849 ஆகும். இந்த பிளானில் கால் மற்றும் SMS மட்டுமே கிடைக்கும்; டேட்டா வசதி இல்லை. மேலும், ரூ.1798 மற்றும் ரூ.1729 போன்ற பிளான்கள் இருந்தாலும், அவை 84 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி வழங்குகின்றன. இந்த நிலையில், குறைந்த விலையில் நீண்ட கால பயன்கள் தரும் பிஎஸ்என்எல் ரூ.1499 பிளான் பலருக்கும் சிறந்த தேர்வாக இருக்கும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

