BSNL: இனி அனைத்து வீடுகளிலும் பிஎஸ்என்எல் சிம்; 4G நெட்வொர்க் குறித்து குட் நியூஸ்!
இந்தியாவில் மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டங்களை செயல்படுத்தி வரும் பிஎஸ்என்எல், 4ஜி நெட்வொர்க் வழங்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக குட் நியூஸ் வெளியாகியுள்ளது.

BSNL: இனி அனைத்து வீடுகளிலும் பிஎஸ்என்எல் சிம்; 4G நெட்வொர்க் குறித்து குட் நியூஸ்!
இந்தியாவில் ஜியோ, வோடோபோன் ஐடியா, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிறுவனங்கள் 4ஜி, 5ஜி என சென்றிருக்கும் நிலையில், மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னும் 3ஜி சேவயை தான் வழங்கி வருகிறது. ஆனாலும் மலிவு விலையில் சேவை வழங்கி வருவதால் பிஎஸ்என்எல் பக்கம் ஏராளமான வாடிக்கையாளர்கள் சாய்ந்து வருகின்றனர்.
அதே வேளையில் 4ஜி சேவை எப்போது என பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ஏங்கித் தவித்து வரும் நிலையில், 4ஜி சேவையை கொண்டு வரும் பணியில் பிஎஸ்என்எல் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவை வரும் மார்ச் மாதத்துக்குள் வழங்கப்படும் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் 4ஜி சேவை நாடு முழுவதும் முழுமையாக கொண்டு வரப்படும் எனவும் பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிஎஸ்என்எல் 4G நெட்வொர்க்
4ஜி நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதற்காக இந்தியாவின் பல்வேறு இடங்களில் டவர்களை நிறுவி வருகிறது. ஆகஸ்ட் 2024க்குள் 30,000க்கும் மேற்பட்ட 4ஜி டவர்களை பிஎஸ்என்எல் இலக்கு நிர்ணயித்திருந்தது. அவற்றில் இதுவரை 15,000 நிறுவப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் அதன் 4ஜி கவரேஜ் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, 2025ம் ஆண்டின் இறுதிக்குள் 20,000க்கும் மேற்பட்ட புதிய 4ஜி டவர்களை நிறுவ பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.
BSNL: வெறும் ரூ.4க்கு அன்லிமிடட் கால்ஸ் - இந்தியாவின் சிறந்த ரீசார்ஜ் திட்டம் பற்றி தெரியுமா?
பிஎஸ்என்எல் பிளான்கள்
நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் கிராமங்களிலும் 4ஜி டவர்கள் நிறுவப்பட உள்ளன. இந்தியாவின் முக்கியமான 15 நகரங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை கொண்டு வர உள்ளதால் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சுனில் மிட்டலின் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் கடும் சவாலை எதிர்கொள்ள இருக்கின்றன. இப்போதே மலிவு விலை திட்டங்கள் காரணமாக சாரை சாரையாக வாடிக்கையாளர்கள் செல்லும் நிலையில், பிஎஸ்என்எல் 4ஜி சேவை கொண்டு வந்தால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும்.
பிஎஸ்என்எல் சிம்
4ஜி நெட்வொர்க்கை கொண்டு வருவதற்காக பல்வேறு இடங்களில் 3G நெட்வொர்க்கை பிஎஸ்என்எல் நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக பிஎஸ்என்எல் 3ஜி சிம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு காலிங் வசதி மட்டுமே கிடைக்கும். டேட்டா வசதி கிடைக்காது. 4ஜி நெட்வொர்க்கை முழுமையாக மேம்படுத்துவதற்காக பெரும்பாலான மாவட்டங்களில் 3ஜி நெட்வொர்க் துண்டிக்கப்பட்டுள்ளது.
3G நெட்வொர்க் வேலை செய்வதை நிறுத்தினால், புதிய 4G சிம் உங்களுக்கு கிடைக்கும். பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அருகிலுள்ள வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு சென்று பழைய 3ஜி சிம் கார்டுகளை கொடுத்து விட்டு புதிய 4ஜி சிம் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
இதற்காக வாடிக்கையாளர்கள் தங்களது புகைப்பட அடையாள அட்டையை மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். 2017ஆம் ஆண்டுக்கு முன் வழங்கப்பட்ட சிம் மாற்றப்பட்டு வருகின்றன. இதற்கு எந்த கட்டணமும் விதிக்கப்படாது.
Vivo V50: பட்ஜெட் விலையில் களமிறங்கும் விவோ ஸ்மார்ட்போன்; என்னென்ன சிறப்பம்சங்கள்?