வெறும் ரூ.9-க்கு 100GB டேட்டா + அன்லிமிடெட் அழைப்பு.. பிஎஸ்என்எல்லின் புதிய பிளான்
பிஎஸ்என்எல் மாணவர்களுக்காக 'மாணவர் ஸ்பெஷல்' என்ற ரூ.251 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் 28 நாட்களுக்கு 100GB அதிவேக டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கும்.

பிஎஸ்என்எல் மாணவர் சலுகை
பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு பம்பர் சலுகையை அறிவித்துள்ளது. இது மாணவர்களுக்கு ஏற்ற திட்டமாக உள்ளது. மாணவர்கள் குழந்தைகள் தின சிறப்பு ரீசார்ஜ் திட்டத்தில் வெறும் ரூ.8-9 செலவில் அதிவேக இணையம், வரம்பற்ற அழைப்புகளைப் பெறலாம்.
மாணவர் ஸ்பெஷல்
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், 'மாணவர் ஸ்பெஷல்' என்ற ரூ.251 திட்டத்தை அறிவித்துள்ளது. 'படியுங்கள், விளையாடுங்கள், பிஎஸ்என்எல் உடன் இணைந்திருங்கள்' என ட்விட்டரில் கூறியுள்ளது. இந்தத் திட்டம் ஒரு மாதத்திற்கு மட்டுமே கிடைக்கும். இந்த பிஎஸ்என்எல் திட்டம் பற்றி முழுமையாக பார்க்கலாம்.
ரூ.251 ரீசார்ஜ் பிளான்
ரூ.251 ரீசார்ஜில் 28 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள், 100GB அதிவேக டேட்டா மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் கிடைக்கும். இந்தத் திட்டம் புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும். இந்த மாணவர் திட்டம் மூலம் உள்நாட்டு BSNL 4G நெட்வொர்க்கை பெறலாம் என சிஎம்டி ஏ.ராபர்ட் ஜே. ரவி கூறினார்.
குறைந்த விலை பிளான்
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், 4ஜி தொழில்நுட்பத்தை உருவாக்கிய 5வது நாடாக இந்தியா உள்ளது. அதிக டேட்டா தேவைப்படும் மாணவர்களுக்கு இது பட்ஜெட் ஃப்ரெண்ட்லி சலுகை என ராபர்ட் ஜே. ரவி கூறினார். இந்தத் திட்டம் டிசம்பர் 14 வரை மட்டுமே கிடைக்கும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

