- Home
- டெக்னாலஜி
- பிஎஸ்என்எல் சிம் வச்சிருக்கீங்களா? மொபைலில் 450+ டிவி சேனல்கள் இலவசம்; என்ஜாய் பண்ணுங்க!
பிஎஸ்என்எல் சிம் வச்சிருக்கீங்களா? மொபைலில் 450+ டிவி சேனல்கள் இலவசம்; என்ஜாய் பண்ணுங்க!
நீங்கள் பிஎஸ்என்எல் சிம் வைத்திருந்தால் உங்கள் மொபைலிலேயே 400க்கும் மேற்பட்ட டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி சேனல்களை இலவசமாக கண்டு ரசிக்கலாம். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

பிஎஸ்என்எல் சிம் வச்சிருக்கீங்களா? மொபைலில் 450+ டிவி சேனல்கள் இலவசம்; என்ஜாய் பண்ணுங்க!
இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்லும் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. இதில் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் தனியார் நிறுவனங்களை விட குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பக்கம் சாய்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே பிஎஸ்என்எல், இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம் ஒருங்கிணைப்பாளரான OTTplay உடன் இணைந்து, BSNL இன்டர்டெயின்மென்ட் (BiTV) என்ற புதுமையான இணைய தொலைக்காட்சி சேவையை அறிமுகப்படுத்தி இருந்தது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நேரடி நேரடி-மொபைல் டிவி சேவையான BiTV , கடந்த மாதம் புதுச்சேரியில் சோதனை முறையில் அறிமுகப்பட்டுத்தப்பட்டு இருந்தது.
பிஎஸ்என்எல் இணைய தொலைக்காட்சி சேவை
இந்நிலையில், BiTV சேவையை இப்போது இந்தியா முழுவதும் பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் சேவை இந்தியா முழுவதும் உள்ள BSNL மொபைல் பயனர்களுக்கு பிரீமியம் உட்பட 450க்கும் மேற்பட்ட நேரடி டிவி சேனல்களுக்கான இலவச அணுகலை வழங்குகிறது. இதன்மூலம் பிஎஸ்என்எல் பயனர்கள் இப்போது தங்களுடைய ஸ்மார்ட்போன்களில் 450க்கும் மேற்பட்ட சேனல்களை இலவசமாக கண்டுகளிக்க முடியும்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் BiTV மூலம் பிஎஸ்என்எல் சிம் வைத்திருப்பவர்கள் OTT இயங்குதளங்களான பக்திஃபிளிக்ஸ், ஷார்ட்ஃபண்ட்லி, காஞ்சா லங்கா, ஸ்டேஜ், OM TV, Playflix, Fancode, Distro, Hubhopper மற்றும் Runn TV ஆகியவற்றுடன் 450க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள், பிளாக்பஸ்டர் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் ஆகியவற்றை எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக பார்த்து மகிழலாம்.
சேட்டிலைட் வீடியோ கால்; வோடாஃபோன் செய்த சாதனை - இனி எல்லாமே மாறப்போகுது
பிஎஸ்என்எல் பயனர்களுக்கு இலவசம்
DTH சந்தாக்கள் தொடர்ந்து குறைந்து வருவதால், ஸ்மார்ட்போன்களின் வாயிலாக நேரடியாக லைவ் சேனல்களை பயனர்களை பார்ப்பதற்கு வசதியாக இந்த BiTV சேவை கொண்டு வரப்பட்டுள்ளதாக பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. பிஎஸ்என்எல் சிம் கார்டு உள்ளவர்களுக்கு இந்த சேவை முற்றிலும் இலவசம் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
''BiTV சேவை பிஎஸ்என்எல்லின் டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கான அர்ப்பணிப்புக்கான ஒரு சான்றாகும், இந்த புதிய சேவையின் மூலம் புரட்சியை ஏற்படுத்தும் முதல் தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களில் ஒன்றாக பிஎஸ்என்எல் மாறியுள்ளது'' என்று இந்த சேவையின் தொடக்க விழாவில் பிஎஸ்என்எல் சிஎம்டி ராபர்ட் ஜே ரவி ஐடிஎஸ் தெரிவித்துள்ளார்.
பிஎஸ்என்எல் சிம்
இது மட்டுமிம்ன்றி, பல மாநிலங்களில் உள்ள அதன் பிராட்பேண்ட் பயனர்களுக்காக இணைய நெறிமுறை அடிப்படையிலான IFTV சேவையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது, கூடுதல் செலவுகள் அல்லது செட்-டாப் பாக்ஸ் தேவையில்லாமல் 500க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களை பார்க்கும் வசதியை இந்த IFTV சேவை வழங்குகிறது. இந்த சேவை அண்மையில் தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகியவற்றுடன் குஜராத் தொலைத்தொடர்பு வட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரூ.16,0000 கூட இல்லை; பட்ஜெட் விலையில் கிடைக்கும் டாப் 5 டேப்லெட்டுகள்; செம சான்ஸ்!