- Home
- டெக்னாலஜி
- BSNL: வெறும் 1 ரூபாய்க்கு 1 ஜிபி டேட்டா! ஜாலியா ஐபிஎல் பார்க்கலாம்! கலக்கும் பிஎஸ்என்எல்!
BSNL: வெறும் 1 ரூபாய்க்கு 1 ஜிபி டேட்டா! ஜாலியா ஐபிஎல் பார்க்கலாம்! கலக்கும் பிஎஸ்என்எல்!
ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்களுக்காக 1 ரூபாய்க்கு 1 ஜிபி டேட்டா வழங்கும் பிளானை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

BSNL IPL Cricket Plan: மத்திய அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கான மொபைல் நெட்வொர்க்கை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. அதே நேரத்தில் புதிய ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் சலுகைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடந்து வருகிறது. பல கோடிக்கணக்கான ரசிகர்கள் மொபைல் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட்டை பார்த்து வரும் நிலையில், இதற்கு அதிக டேட்டா தேவைப்படுகிறது.
BSNL IPL Cricket Plan
இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்விக்கும்விதமாக சூப்பரான ரீசார்ஜ் திட்டம் ஒன்றை பிஎஸ்என்எல் கொண்டு வந்துள்ளது. அதாவது பிஎஸ்என்எல் ரூ.251 என்ற விலையில் கவர்ச்சிகரமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரூ.251 ப்ரீபெய்ட் திட்டம் 60 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும். மொத்தமாக 251 ஜிபி டேட்டா கிடைக்கும். அதாவது வெறும் 1 ரூபாய்க்கு 1ஜிபி டேட்டா உங்களுக்கு கிடைக்கிறது. இந்த அடிமட்ட விலைக்கு இப்படி டேட்டாவை அள்ளிக்கொடுக்க எந்த ஒரு தனியார் நிறுவனத்தாலும் முடியாது.
ரூ.75-ல் அன்லிமிடெட் கால், டேட்டா, SMS.. ஜியோ வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதம்
BSNL Recharge Plan
இது முழுமையான டேட்டா பேக் திட்டமாகும். இதில் அன்லிமிடெட் கால்ஸ், எஸ்எம்எஸ் போன்ற வசதிகள் ஏதும் இல்லை. ஐபிஎல் சீசனை முன்னிட்டு கிரிக்கெட் ரசிகர்களை இலக்காகக் கொண்ட இந்தத் திட்டம், மில்லியன் கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை வழங்குகிறது. தடையற்ற மொபைல் டேட்டாவை விரும்புவோர் இந்த ரீசார்ஜ் மூலம் நன்மைகளை அடைய முடியும். டேட்டாவை பற்றி கவலைப்படாமல் ஐபிஎல் போட்டிகளை பார்க்க விரும்புபவர்களுக்கு இது வரப்பிரசாதமான திட்டமாகும்.
BSNL 4G Service
ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, மக்கள் இப்போது அதிகளவில் பிஎஸ்என்எல் பக்கம் திரும்பியுள்ளனர், ஏனெனில் பிஎஸ்என்எல் மலிவான மற்றும் மலிவு விலை திட்டங்களை வழங்குகிறது. அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு, அதிகமான மக்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பிஎஸ்என்எல் 4G நெட்வொர்க்கை விரைவாக விரிவுபடுத்தி வருகிறது.
இதற்காக இந்தியாவின் பல்வேறு இடங்களில் 4ஜி டவர்களை நிறுவி வருகிறது. இதுவரை 75,000க்கும் மேற்பட்ட இடங்களில் 4ஜி டவர்கள் நிறுவப்பட்ட நிலையில், விரைவில் 1 லட்சம் டவர்களை நிறுவ பிஎஸ்என்எல் இலக்கு நிர்ணயித்துள்ளது. நாட்டின் பல்வேறு முக்கியமான நகரங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூ.10-ல் வருடம் முழுக்க சிம் ஆக்டிவாக இருக்கும்; மத்திய அரசின் முடிவு