MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • பிஎஸ்என்எல் செம பிளான்; வெறும் 3 ரூபாய்க்கு 3ஜிபி டேட்டா; 365 நாள் வேலிட்டி; சூப்பர் ஆபர்!

பிஎஸ்என்எல் செம பிளான்; வெறும் 3 ரூபாய்க்கு 3ஜிபி டேட்டா; 365 நாள் வேலிட்டி; சூப்பர் ஆபர்!

பிஎஸ்என்எல் தினமும் 3 ரூபாய்க்கு 3ஜிபி டேட்டா, 365 நாள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் குறித்த முழு விவரங்களை பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar r
Published : Jan 17 2025, 12:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
BSNL

BSNL

பிஎஸ்என்எல்

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன்‍‍‍ஐடியா ஆகிய தனியார் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் மாதாந்திர, வருடாந்திர ரீசார்ஜ் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிறுவனங்கள் சலுகையை வழங்கினாலும் அண்மை காலமாக கட்டணத்தை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள்அரசு தொலைத்தொடர்பு துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) பக்கம் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றனர். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை இந்தியா முழுவதும் கொண்டு வர ரெடியாக உள்ளது. பல்வேறு இடங்களில் 4ஜி சேவைக்கான டவர்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

24
BSNL Budget Recharge Plans

BSNL Budget Recharge Plans

பிஎஸ்என்எல் 365 நாள் திட்டம்

இதனால் பிஎஸ்என்எல் செல்வாக்கு மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிஎஸ்என்எல்லின் மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து பார்ப்போம்.

இந்த சிக்கனமான பிஎஸ்என்எல் திட்டத்தின் விலை ரூ.1,198 ஆகும். இந்த திட்டத்தின்படி 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு மாதமும் 300 நிமிடங்கள் கால்கள் செய்யும் வசதியும் உள்ளது. இதில் உள்ளூர் கால்ஸ் மற்றும் ரோமிங் கால்ஸ்களும் அடங்கும்.

மேலும்  ஒவ்வொரு மாதமும் 3 ஜிபி டேட்டா மற்றும் 30 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இந்த திட்டத்தை தினசரிபடி கணக்கு பார்த்தால் தினமும்  ரூ.3.28 செலவில் நீங்கள் கால்ஸ், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் வசதியை பெறுவீர்கள்.  

34
BSNL Best Plans

BSNL Best Plans

பிஎஸ்என்எல் 425 நாள் திட்டம்

பிஎஸ்என்எல்  ரூ.2,399 விலையில் 425 நாள் திட்டத்தையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் முதலில் 395 நாட்கள் வேலிடிட்டி இருந்த நிலையில், இப்போது வேலிடிட்டி கூடுதலாக நீட்டிக்கப்பட்டு 425 நாள் வேலிடிட்டி பெறலாம். 

இந்த திட்டத்தில் அன்லிமிடெட் கால்ஸ் வசதி வழங்க்கப்படுகிறது.  மேலும் தினசரி 2 ஜிபி மற்றும் 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கும். மொத்தமாக நீங்கள் 850 ஜிபி அதிவேக டேட்டாவை பெற முடியும். டேட்டா முடிவடைந்தாலும் குறைந்த வேகத்தில் இணையத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். 

44
BSNL 4G Service

BSNL 4G Service

4ஜி இணைய சேவை டவர்கள் 

பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி சேவையை கொண்டு வரும் பணியை முழு வீச்சில் தொடங்கியுள்ளது. அதாவது 3 ஜி டவர்களை படிப்படியாக நீக்கி, மிகவும் மேம்பட்ட 4 ஜி நெட்வொர்க்கிற்கு மாறத் தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் 4ஜி சேவை இணைப்பை மேம்படுத்த, 1,00,000 புதிய 4 ஜி டவர்களை நிறுவ பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.

4ஜி சேவை கொண்டு வருவதற்காக ஜனவரி 15 முதல் பிஎஸ்என்எல் 3ஜி சேவையை படிப்படியாக நிறுத்தி வருகிறது. 3ஜி சேவை நிறுத்தப்படுவது மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை பாதிக்கும். ஜூன் மாதத்தில் பிஎஸ்என்எல் தனது 4G சேவையை பான் இந்தியா அளவில் தொடங்க திட்டமிட்டுள்ளது.
 

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)
பி.எஸ்.என்.எல் ரீசார்ஜ் திட்டம்
இந்தியா
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
உங்கள் போனில் இந்த 5 ஓடிடி ஆப்ஸ்கள் இருக்கா? ஆபாச புகாரில் உடனடியாக தூக்கியடித்த அரசு!
Recommended image2
அட்ராசக்கை! பாதி விலையில் பிராண்டட் ஏசிக்களை அள்ளித்தரும் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனை!
Recommended image3
கேமரா, பெர்ஃபார்மென்ஸில் பட்டையை கிளப்பும் 4 ஸ்மார்ட்போன்கள்! iQOO 15R-க்கு செம டஃப் கொடுக்கும் பட்டியல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved