MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • பிஎஸ்என்எல் தரமான சம்பவம்; 14 மாதம் வேலிடிட்டி; கட்டணமில்லை; ஜியோவை தூக்கி சாப்பிடும் ஆஃபர்!

பிஎஸ்என்எல் தரமான சம்பவம்; 14 மாதம் வேலிடிட்டி; கட்டணமில்லை; ஜியோவை தூக்கி சாப்பிடும் ஆஃபர்!

பிஎஸ்என்எல் ஓராண்டு ரீசார்ஜ் திட்டத்தில் 14 மாதங்கள் வேலிட்டியை நீட்டித்துள்ளது. இதற்கு கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

2 Min read
Rayar r
Published : Jan 07 2025, 09:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
BSNL Best Plan

BSNL Best Plan

பிஎஸ்என்எல் திட்டங்கள் 

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன்‍‍‍ஐடியா ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செல்போன் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பதற்காக ஒருபக்கம் பல்வேறு சலுகைகளை வாரி வழங்கினாலும் மறுபக்கம் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி வருகின்றன. அதே வேளையில் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறை நிறுவனமான பிஎஸ்என்எல் குறைந்த விலையில் சூப்பரான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

24
BSNL Recharge Plan

BSNL Recharge Plan

14 மாதம் வேலிடிட்டி நீட்டிப்பு

தனியார் நிறுவனங்கள் 5ஜி சேவை சென்று விட்ட நிலையில், பிஎஸ்என்எல் இன்னும் 4ஜி சேவை ஆரம்பிக்காத நிலையில், பிஎஸ்என்எல் பக்கம் வாடிக்கையாளர்கள் சாய்ந்து வருவதற்கு குறைந்த விலையில் திட்டங்கள் வழங்கி வருவதே காரணாமாகும். இந்நிலையில் பிஎஸ்என்எல் கூடுதலாக எந்த ஒரு கட்டணமும் இன்றி ஒரு பிளானில் 14 மாதம் வேலிடிட்டியை நீட்டித்துள்ளது. எது என்ன திட்டம்? என்பது குறித்து பார்ப்போம்.

அதாவது பிஎஸ்என்எல் ரூ.2,399 என்ற விலையில் செயல்படுத்தி வரும் ரீசார்ஜ் திட்டத்தில் எந்த ஒரு கட்டணமும் இன்றி ஒரு மாதம் வேலிட்டியை நீட்டித்துள்ளது. ரூ.2,399 என்ற விலை கொண்ட இந்த திட்டத்தில் சுமார் 13 மாதங்கள் அதாவது 395 நாட்கள் வேலிடிட்டி வழங்கி வந்தது. இப்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 மாதங்கள் ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. இனிமேல் இந்த ரூ.2,399 திட்டத்தில் 425 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லாவுடன் பிரதமர் மோடி சந்திப்பு; இந்தியாவில் AI புரட்சிக்கு வித்தா?

34
BSNL One Year Plan

BSNL One Year Plan

என்னென்ன நன்மைகள்?

ரூ.2,399 திட்டத்தை பொறுத்தவரை அன்லிமிடெட் கால்ஸ் கிடைக்கும். இதில் உள்ளூர் கால்ஸ்சும், ரோமிங் கால்ஸ்சும் உண்டு. மேலும் 425 நாட்களுக்கும் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். மொத்தமாக 850 ஜிபி டேட்டா வரை பெற முடியும். டேட்டா விரைவில் தீர்ந்து போனாலும் 40kbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டாவை தொடர்ந்து அனுபவிக்க முடியும். இது தவிர தினமும் 100 இலவச எம்எம்எஸ்களும் உங்களுக்கு கிடைக்கும். 

44
Jio One Year Plan

Jio One Year Plan

ஜியோவில் எப்படி?

இதே ஓராண்டு திட்டத்தில் ஜியோவை ஒப்பிட்டு பார்த்தால் ஜியோ ரூ.3,599 கட்டணத்தில் 365 நாட்கள் தான் வேலிடிட்டி வழங்குகிறது. தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்குகிறது. பிஎஸ்என்எல் திட்டத்துடன் ஒப்பிட்டால் இதில் கட்டணமும் அதிகம்; வேலிடிட்டியும் குறைவு. ஆகவே ஓராண்டு திட்டத்தை விரும்புபவர்களுக்கு பிஎஸ்என்எல் நல்ல சாய்ஸ்ஸாக இருக்கும். பிஎஸ்என்எல்லின் இந்த ஆஃபர் ஜனவரி 16ம் தேதி வரை மட்டுமே இருக்கும். ஆகவே லேட் பண்ணாமல் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யுங்கள்.

ரூ.9,999 விலையில் அட்டகாசமான 5ஜி செல்போனை அறிமுகப்படுத்தியது ரெட்மி நிறுவனம்
 

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)
ஜியோ
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏலியன் இருக்கா.? இல்லையா.? நாசா வெளியிட்ட படங்கள்.. ஆடிப்போன விஞ்ஞானிகள்.!!
Recommended image2
16 வயதுக்கு உட்பட்டவர்களின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்படும்.. டிசம்பர் 10 முதல் அமல்
Recommended image3
இந்தியப் பெருங்கடலுக்கு அடியில் கேபிள் போடும் கூகுள்.. கிறிஸ்மஸ் தீவில் புதிய டேட்டா ஹப்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved