- Home
- டெக்னாலஜி
- BSNL: ரூ.100 போதும்! ஒரு வருஷத்துக்கு ரீசார்ஜ் தேவையில்லை! பிஎஸ்என்எல் அட்டகாசமான பிளான்!
BSNL: ரூ.100 போதும்! ஒரு வருஷத்துக்கு ரீசார்ஜ் தேவையில்லை! பிஎஸ்என்எல் அட்டகாசமான பிளான்!
பிஎஸ்என்எல் ரூ.100 செலுத்தினால் ஒரு வருஷத்துக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லாத ஒரு அட்டகாசமான பிளானை கொண்டு வந்துள்ளது.

BSNL recharge plan: பிஎஸ்என்எல் ரூ.1,198 விலையில் 365 நாள் வேலிட்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின்கீழ் மாதம்தோறும் ரூ.100 செலுத்தினால் போதுமானது. இந்தியாவில் ஜியோ, வோடோபோன் ஐடியா, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த நிறுவனங்கள் 4ஜி, 5ஜி என சென்று விட்ட நிலையில், மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் இன்னும் 3ஜி சேவயை தான் வழங்கி வருகிறது. 4ஜி சேவையை முழுமையாக கொண்டுவர ரெடியாகி வருகிறது.
பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டங்கள்
ஆனாலும் மலிவு விலையில் சேவை வழங்கி வருவதால் பிஎஸ்என்எல் பக்கம் ஏராளமான வாடிக்கையாளர்கள் சாய்ந்து வருகின்றனர். இந்நிலையில், பிஎஸ்என்எல் ஆண்டு முழுவதும் வேலிடிட்டி வழங்கும் ஒரு சூப்பரான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. BSNL இன் இந்த ரீசார்ஜ் திட்டம் 1198 ரூபாய்க்கு வருகிறது. இது 365 நாட்கள் செல்லுபடியாகும் திட்டமாகும்.
இந்த பிளானை ஒரு மாதத்துக்கு அதாவது 30 நாட்கள் கணக்கிட்டு பார்த்தால் இந்த ரீசார்ஜ் திட்டத்தின் கீழ், பயனர்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.100 மட்டுமே செலுத்துகின்றனர். இந்த ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்கள் ஒவ்வொரு மாதமும் எந்த நெட்வொர்க்கிலும் 300 இலவச அழைப்பு நிமிடங்களைப் பெறுகிறார்கள். இது இந்தியா முழுவதும் கிடைக்கும். இதனுடன், ஒவ்வொரு மாதமும் 3ஜிபி அதிவேக 3ஜி/4ஜி டேட்டா மற்றும் 30 இலவச எஸ்எம்எஸ்களும் கிடைக்கும்.
எல்லா வீடுகளிலும் நுழைந்த ஏஐ தொழில்நுட்பம்! டிவி, வாக்கும் கிளீனர்களில் டீப்சீக்!
பிஎஸ்என்எல் பட்ஜெட் திட்டங்கள்
பிஎஸ்என்எல்லின் இந்த பிளானில் இலவச தேசிய ரோமிங்கும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்குள் பயணம் செய்யும் போது பயனர்கள் உள்வரும் அழைப்புகளுக்கு எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. நீங்கள் BSNL பயனராக இருந்தால், அழைப்பிற்கான இலவச நிமிடங்கள் முடிந்த பிறகு, வாடிக்கையாளர்களுக்கு உள்ளூர் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.1 மற்றும் STD அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.1.3 வசூலிக்கப்படும். இதேபோல், உள்ளூர் எஸ்எம்எஸ்க்கு ஒரு எஸ்எம்எஸ்-க்கு 80 பைசா மற்றும் தேசிய எஸ்எம்எஸ்ஸுக்கு ரூ.20 வசூலிக்கப்படும்.
பிஎஸ்என்எல் 4ஜி சேவை
சர்வதேச \எஸ்எம்எஸ்களுக்கு வாடிக்கையாளர்கள் ஒரு எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ.6 செலுத்த வேண்டும். டேட்டாவிற்கு வாடிக்கையாளர்களுக்கு ஒரு எம்பிக்கு 25 பைசா வசூலிக்கப்படும். BSNL மற்றொரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் விலை ரூ.797 ஆகும். இந்த ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்களுக்கு 300 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்த நன்மைகள் முதல் 7 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதே நேரத்தில், 2 ஜிபி டேட்டாவின் வரம்பு தீர்ந்த பிறகு, வாடிக்கையாளர்களுக்கு 40 கேபிபிஎஸ் வேகத்தில் இணைய அணுகல் வழங்கப்படுகிறது.
ஸ்மார்ட்வாட்ச் வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்