MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • தினமும் 3GB டேட்டா + அன்லிமிடெட் கால்ஸ்.. ஒரு வருஷத்துக்கு ரீசார்ஜ் கவலையே கிடையாது!

தினமும் 3GB டேட்டா + அன்லிமிடெட் கால்ஸ்.. ஒரு வருஷத்துக்கு ரீசார்ஜ் கவலையே கிடையாது!

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், வருடத்திற்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்யும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகள் கிடைக்கின்றன.

1 Min read
Author : Raghupati R
Published : Apr 04 2026, 10:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வருடத்திற்கு ஒரு ரீசார்ஜ் போதும்
Image Credit : gemini

வருடத்திற்கு ஒரு ரீசார்ஜ் போதும்

இன்றைய வாழ்க்கையில் மொபைல் போன் ஒரு நிமிடமும் இல்லாமல் இருக்க முடியாத அளவுக்கு முக்கியமானதாக மாறிவிட்டது. பேசுவதற்கும், பண பரிவர்த்தனை, ஆன்லைன் ஷாப்பிங், யுபிஐ போன்ற சேவைகளுக்கும் மொபைல் அவசியமாகிறது. ஆனால், இவற்றை எல்லாம் பயன்படுத்த, சரியான ரீசார்ஜ் பிளான் இருக்க வேண்டும். இல்லையெனில், கால்ஸ், இன்டர்நெட், ஓடிபி போன்ற சேவைகள் நிறுத்தப்படும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
தினமும் 3ஜிபி டேட்டா
Image Credit : stockPhoto

தினமும் 3ஜிபி டேட்டா

பொதுவாக பலர் மாதம், 3 மாதம் அல்லது 6 மாதம் என ரீசார்ஜ் செய்து வருகிறார்கள். ஆனால், அந்த செல்லுபடியாகும் போது மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசரம் மற்றும் கவலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க, வருடத்திற்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்வது சிறந்த தேர்வாக கருதப்படுகிறது. இதன் மூலம் நீண்ட கால நிம்மதியும் கிடைக்கும்.

Related Articles

Related image1
சூப்பர் ஆஃபர்.. ரூ.90,000-க்கும் குறைவான விலையில் ஐபோன் ஏர்.. வாங்க 5 காரணங்கள்!
Related image2
இனி சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிக்க வேண்டுமா..? AI-ன் அதிரடி மாற்றங்கள் சொல்லும் உண்மை..!
35
பிஎஸ்என்எல் 365 நாள் பிளான்
Image Credit : Gemini

பிஎஸ்என்எல் 365 நாள் பிளான்

இந்த நிலையில், அரசு தொலைத்தொடர்பு நிறுவனம் பிஎஸ்என்எல், ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் ரூ.2799க்கு 365 நாட்கள் செல்லுபடியாகும் இந்த பிளான், பயனர்களுக்கு மிகுந்த சலுகைகள் வழங்கப்படும். ஒருமுறை ரீசார்ஜ் செய்தால், முழு வருடமும் எந்த பதட்டமும் இல்லாமல் பயன்படுத்தலாம்.

45
ரூ.2799 பிஎஸ்என்எல் ரீசார்ஜ்
Image Credit : Google

ரூ.2799 பிஎஸ்என்எல் ரீசார்ஜ்

இந்த திட்டத்தில் தினமும் 3GB டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100 SMS கிடைக்கும். அதாவது, ஒரு நாளுக்கு சுமார் ரூ.7.66 செலவில் இந்த அனைத்து வசதிகளும் கிடைக்கின்றன. அதிக டேட்டா பயன்படுத்துபவர்களுக்கும், தொடர்ந்து இன்டர்நெட் தேவைப்படுபவர்களுக்கும் இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

55
BSNL அன்லிமிடெட் கால்ஸ்
Image Credit : X

BSNL அன்லிமிடெட் கால்ஸ்

தற்போது ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்களின் நீண்டகால திட்டங்களுடன் ஒப்பிடும்போது, ​​பிஎஸ்என்எல் இந்த குறைந்த விலையில் வழங்குகிறது. போட்டியில் நிலைத்து நிற்க, பிஎஸ்என்எல் தொடர்ந்து புதிய சலுகைகளை கொண்டு வருகிறது. குறைந்த செலவில் அதிக பயன் தேடுபவர்களுக்கு, இந்த 365 நாள் திட்டம் நிச்சயம் ஒரு நல்ல வாய்ப்பாகும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL)
பி.எஸ்.என்.எல் ரீசார்ஜ் திட்டம்
கைபேசி மறுஊட்டம்
மறுஊட்டத் திட்டம்
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.8,999-க்கு மிலிட்டரி கிரேட் மொபைல்.. கீழே விழுந்தாலும் பயமில்லை.. 100 நாள் வரைக்கும் சலுகை வேற இருக்கு
Recommended image2
Recharge Plan Under Rs 200: ரூ.200-க்குள் பெஸ்ட் ரீசார்ஜ் எது? ஜியோ vs ஏர்டெல் - எந்த பிளான் சிறந்தது தெரியுமா?
Recommended image3
WhatsApp Call Recording: வாட்ஸ்அப் கால்களை ரெக்கார்டு செய்யலாமா? பலருக்கும் தெரியாத ரகசியம்!
Related Stories
Recommended image1
சூப்பர் ஆஃபர்.. ரூ.90,000-க்கும் குறைவான விலையில் ஐபோன் ஏர்.. வாங்க 5 காரணங்கள்!
Recommended image2
இனி சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிக்க வேண்டுமா..? AI-ன் அதிரடி மாற்றங்கள் சொல்லும் உண்மை..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved