- Home
- டெக்னாலஜி
- Best AC Under 30000 : 50% தள்ளுபடியில் கிடைக்கும் ஏசி.. உடனே வாங்கி போடுங்க மக்களே.. முழு விபரம்!
Best AC Under 30000 : 50% தள்ளுபடியில் கிடைக்கும் ஏசி.. உடனே வாங்கி போடுங்க மக்களே.. முழு விபரம்!
கோடை வெயில் உச்சத்தில் இருக்கும் நிலையில், ப்ளிப்கார்ட்டில் ரூ.30,000-க்கு குறைவான விலையில் பல இன்வெர்ட்டர் மற்றும் கன்வெர்டிபிள் ஏசி மாடல்கள் தள்ளுபடியில் கிடைக்கின்றன.

குறைந்த விலையில் ஏசி
தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் தீவிரமாக வரும் நிலையில், வீடுகளில் ஏசி (குளிர்சாதனப் பெட்டிகளுக்கான) தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால், குறைந்த செலவில் நல்ல தரமான ஈசியை தேர்வு செய்வதில் பலரும் குழப்பமடைந்து வருகின்றனர். இந்நிலையில், 30 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான விலையில் பல இன்வெர்ட்டர் ஸ்பிலிட் ஈசிகள் ப்ளிப்கார்ட்டில் தள்ளுபடியில் கிடைப்பது வாங்குபவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இன்வெர்ட்டர் ஏசி டீல்
சிறிய அறைகளுக்கு ஏற்ற வகையில் ரியல்மி டெக்லைஃப் நிறுவனத்தின் 1 டன் 3 ஸ்டார் இன்வெர்ட்டர் ஈசி அதிகம் தேடப்படும் மாடல்களில் ஒன்றாக உள்ளது. மொபைல் மூலம் கட்டுப்படுத்தும் வசதி, குறைந்த மின்சார பயன்பாடு மற்றும் நவீன வசதிகள் இதில் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 25 ஆயிரம் ரூபாய் விலையில் இந்த மாடல், முதல் முறையாக ஏசி வாங்க நினைப்பவர்களுக்கு பொருத்தமான தேர்வாக பார்க்கப்படுகிறது.
குறைந்த செலவில் அதிக வசதிகளை வழங்கும் மற்றொரு மாடலாக மார்க் நிறுவனத்தின் 1 டன் ஏசி உள்ளது. சுமார் 23 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கும் இந்த ஈசியில், தேவைக்கேற்ப குளிர்ச்சியை மாற்றிக்கொள்ளும் வசதியும், அறையை வேகமாக குளிர்ச்சியடையச் செய்யும் சிறப்புத் தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளன. இதனால், சிறிய அறைகள் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டுக்கு இது ஏற்றதாகக் கருதப்படுகிறது. இதே நிறுவனத்தின் 1.5 டன் மாடலும் பெரிய அறைகளுக்கான நல்ல தேர்வாக விற்பனையில் கவனம் செலுத்தப்படுகிறது.
ஸ்பிலிட் ஏசி ஆஃபர்
நம்பகமான நிறுவனத்தை விரும்புபவர்களுக்கு ஹையர் நிறுவனத்தின் டிவின் இன்வெர்ட்டர் தொழில்நுட்பம் கொண்ட 1 டன் ஏசி முக்கிய தேர்வாக உள்ளது. குறைந்த சத்தம், சீரான குளிர்ச்சி மற்றும் நீண்டகால கம்ப்ரசர் உத்தரவாதம் போன்ற அம்சங்கள் இதன் சிறப்பாக கூறப்படுகின்றன. மேலும் ஹைசென்ஸ் நிறுவனத்தின் 1.5 டன் மாடலும் குறைந்த விலையில் பெரிய அறைகளுக்கு ஏற்ற தேர்வாக பார்க்கவும்.
மொபைல் கட்டுப்பாடு, விரைவு குளிர்ச்சி, மின்சார சேமிப்பு முறை மற்றும் தேவைக்கேற்ப இயங்கும் வசதிகள் போன்ற அம்சங்கள் தற்போது குறைந்த விலையில் ஏசிகளிலும் கிடைக்கத் தொடங்கியுள்ளன. அதனால், அறையின் அளவு மற்றும் பயன்பாட்டை கருத்தில் கொண்டு சரியான மாடலை தேர்வு செய்வது, கோடை காலத்தில் குளிர்ச்சியையும் மின்சார சேமிப்பையும் ஒரே நேரத்தில் வழங்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

