MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Best 5G Phones: தீபாவளி கிஃப்ட் கொடுக்க ரூ.12,000 பட்ஜெட்டில் 3 சூப்பர் 5G போன்கள் இதோ!

Best 5G Phones: தீபாவளி கிஃப்ட் கொடுக்க ரூ.12,000 பட்ஜெட்டில் 3 சூப்பர் 5G போன்கள் இதோ!

Best 5G Phones Under Rs 12000: தீபாவளிக்கு உறவினர்கள், நண்பர்கள், காதலி அல்லது காதலர்களுக்கு பரிசளிக்க ரூ.12,000 விலையில் 3 சூப்பரான 5ஜி போன்கள் உள்ளன. அது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 28 2026, 04:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தீபாவளி கிஃப்ட் கொடுக்க சூப்பர் 5G போன்கள்
Image Credit : AI

தீபாவளி கிஃப்ட் கொடுக்க சூப்பர் 5G போன்கள்

தீபாவளி பண்டிகைக்கு கொஞ்ச நாட்களே இருக்கும் நிலையில், மக்கள் புத்தாடைகள், பொருட்கள் வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். தீபாவளி காலத்தில் பலர் தங்களது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் எதாவது ஒரு பரிசு கொடுத்து அவர்களை மகிழ்விப்பது வழக்கம். அந்த வகையில், இந்த தீபாவளிக்கு உங்கள் குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு, காதலி அல்லது காதலர்களுக்கு பரிசளிக்க 5G ஸ்மார்ட்போன்கள் ஒரு சிறந்த தேர்வாக அமைகின்றன.

தற்போதைய பண்டிகைக் கால சலுகை விற்பனையில், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சந்தைகளில் ரூ.12,000 முதல் ரூ.15,000 வரையிலான பட்ஜெட்டில் சிறந்த அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் கிடைக்கின்றன. அவற்றில் பரிசளிக்க ஏற்ற 3 முக்கிய போன்களின் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
1. சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1)
Image Credit : CMF by Nothing Twitter

1. சிஎம்எஃப் போன் 1 (CMF Phone 1)

வித்தியாசமான வடிவமைப்பு மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தை விரும்புபவர்களுக்கு 'Nothing' நிறுவனத்தின் சப்-பிராண்டான CMF வெளியீடான CMF Phone 1 ஒரு சிறந்த பரிசாகும். இதன் சிறப்பு ஸ்க்ரூ டிசைன் மற்றும் மாற்றக்கூடிய பேக் பேனல் (Back Panel) போன்றவை சந்தையில் உள்ள மற்ற போன்களை விட இதற்கு மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்தை அளிக்கின்றன.

இந்த போனில் 6.67 இன்ச் Super AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது 120Hz ரிஃப்ரெஷ் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் அதிகபட்ச பிரைட்னஸ் கொண்டது. இதில் MediaTek Dimensity 7300 5G ப்ராசஸர் பொருத்தப்பட்டுள்ளதால், தினசரி பயன்பாடு, மல்டிடாஸ்கிங் மற்றும் கேமிங் ஆகியவற்றிற்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை, பின்புறம் 50MP Sony முதன்மை கேமராவும், முன்புறம் 16MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், நீண்ட நேர பயன்பாட்டிற்கு உதவும் 5000mAh பேட்டரி வசதியும் இதில் உள்ளது. இதன் தோராயமான விலை ரூ.14,999 ஆகும்.

34
2. மோட்டோரோலா மோட்டோ ஜி85 5ஜி (Motorola Moto G85 5G)
Image Credit : Motorola India/X

2. மோட்டோரோலா மோட்டோ ஜி85 5ஜி (Motorola Moto G85 5G)

பிரீமியம் தோற்றம் கொண்ட போனை எதிர்பார்ப்பவர்களுக்கு Motorola Moto G85 5G ஒரு சிறந்த தேர்வாகும். குறைந்த விலையில் ஃபிளாக்ஷிப் போன்களில் காணப்படும் வளைந்த டிஸ்ப்ளே மற்றும் வீகன் லெதர் ஃபினிஷ ஆகிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இந்த போனில் Corning Gorilla Glass 5 பாதுகாப்பு கொண்ட 6.67 இன்ச் 3D கர்வ்டு pOLED (120Hz) டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது Qualcomm Snapdragon 6s Gen 3 ப்ராசஸரில் இயங்குகிறது.

கேமரா பிரிவில், OIS தொழில்நுட்பத்துடன் கூடிய 50MP Sony LYTIA 600 முதன்மை கேமரா, 8MP அல்ட்ரா-வைடு கேமரா மற்றும் தெளிவான படங்களை எடுக்கக்கூடிய 32MP செல்ஃபி கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன. OIS அம்சம் உள்ளதால் வீடியோ மற்றும் புகைப்படங்களில் கேமரா அதிர்வுகள் பெருமளவில் குறைக்கப்படும்.

மேலும், Dolby Atmos சப்போர்ட் கொண்ட ஸ்பீக்கர்கள் மற்றும் 5000mAh பேட்டரி ஆகியவை இதன் கூடுதல் சிறப்பம்சங்களாகும். பண்டிகைக் கால சலுகையில் இதன் விலை ரூ.15,999 ஆகும்.

44
3. விவோ T3x 5G (Vivo T3x 5G)
Image Credit : Vivo website

3. விவோ T3x 5G (Vivo T3x 5G)

வீட்டில் உள்ள பெரியவர்கள், பெற்றோர்கள் மற்றும் அதிக நேரம் மொபைலில் வீடியோ பார்ப்பவர்களுக்கு Vivo T3x 5G மிகவும் ஏற்றது. அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லாத வகையில் இதில் பெரிய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

இந்த போன் 6.72 இன்ச் Full HD+ (120Hz) ஸ்க்ரீன் மற்றும் Qualcomm Snapdragon 6 Gen 1 ப்ராசஸரைக் கொண்டுள்ளது. இதில் உள்ள 6000mAh மெகா பேட்டரி அதிக நேர பேட்டரி லைஃப்பை வழங்குகிறது. மேலும், இதில் கொடுக்கப்பட்டுள்ள 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் போனை விரைவாக சார்ஜ் செய்ய முடியும்.

புகைப்படங்களுக்கு 50MP பின்புற கேமராவும், சிறந்த ஒலி அனுபவத்திற்கு டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் இதில் உள்ளன. இவ்வளவு பெரிய பேட்டரி இருந்தபோதிலும், இந்த போன் சுமார் 7.99 மிமீ தடிமன் மட்டுமே கொண்டு மெலிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.12,499 ஆகும்.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தொழில்நுட்பம்
 
3rd TEST • SA vs AUS
Lunch
SASA
329
AUSAUS
(27.0 ov)90/2
Day 2 - Session 1
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
2100-க்குள் கடல் மட்டம் உயரும் அபாயம்: 2 மடங்கு வேகத்தில் உருகும் அண்டார்டிகா; விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
Recommended image2
18 மணிநேர பேட்டரி பேக்கப், 12 இன்ச் 2K ஸ்கிரீன்: டெஸ்க்டாப் மோட் வசதியுடன் வெளியான எச்.பி டேப்லெட்!
Recommended image3
Driverless Train: டிரைவரே இல்லாமல் சீறிப்பாயும் மெட்ரோ ரயில்கள்! சென்னையில் வரப்போகும் மெகா மாற்றம்!
Related Stories
Recommended image1
Best Phones Under 30000: ரூ.30,000 பட்ஜெட்டில் புதிய போன் வாங்கப் போறீங்களா? இந்த 5 மாடல்களைப் பாருங்க
Recommended image2
Indian Railways: ரயில்களில் போன் சார்ஜ் போட தடை..? சார்ஜிங் போர்ட்களை அனைத்து வைக்க முடிவு..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved