MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு... பணவீக்கத்தை சமாளிக்க குடும்பங்கள் ஃபாலோ செய்ய வேண்டிய 8 டிப்ஸ்!

விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு... பணவீக்கத்தை சமாளிக்க குடும்பங்கள் ஃபாலோ செய்ய வேண்டிய 8 டிப்ஸ்!

விலைவாசி உயர்வால் சேமிப்பு கரைகிறதா? நடுத்தரக் குடும்பங்கள் பணவீக்கத்தை சமாளித்து சேமிப்பை உயர்த்த உதவும் 8 முக்கிய நிதி மேலாண்மை வழிகாட்டுதல்களைப் பற்றி பார்ப்போம். முதலீடு முதல் செலவுக் கட்டுப்பாடு வரையிலான எளிய நிதி வழிகாட்டுதல் இதோ!

2 Min read
Author : Meenakshisundaram
Published : Sep 17 2026, 01:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
பணவீக்கத்தை சமாளித்து நிதிநிலையைப் பாதுகாப்பது எப்படி?
Image Credit : chatgpt

பணவீக்கத்தை சமாளித்து நிதிநிலையைப் பாதுகாப்பது எப்படி?

நடுத்தர குடும்பங்களுக்கு பணவீக்கம் என்பது வெறும் விலைவாசி உயர்வு மட்டுமல்ல; வருமானம் உயர்வதைவிட செலவுகள் அதிவேகமாக அதிகரிப்பதால் சேமிப்பும் முதலீடும் பெருமளவில் பாதிக்கப்படுவதுதான் பிரதான பிரச்னையாக உள்ளது.

வருமானம் அதிகரிக்காமல் செலவுகள் மட்டுமே அதிகரிக்கும்போது சமூக ஏற்றத்தாழ்வுகள் தீவிரமடைந்து பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகள் அதிக கடனாளிகளாகவும் மாறும் சூழல் உருவாகிறது. இந்த விலைவாசி உயர்விலிருந்து குடும்பத்தின் நிதிநிலையைப் பாதுகாக்க பின்பற்ற வேண்டிய 8 முக்கிய வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
பணவீக்கத்தை வீழ்த்தி பணக்காரர் ஆவது எப்படி?
Image Credit : Chat GPT

பணவீக்கத்தை வீழ்த்தி பணக்காரர் ஆவது எப்படி?

சூப்பர் மார்க்கெட் மற்றும் மால் கலாசாரத்தால் பலரும் வாங்கும் பொருட்களின் விலையைக் கவனிப்பதே இல்லை. ஒரு பொருளின் விலை தெரிந்தால்தான் அது உயர்ந்துள்ளதா என்பதை அறிந்து செலவைக் கட்டுப்படுத்த முடியும்.

கடந்த 6 மாத வங்கி மற்றும் யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து செலவுகளைப் பட்டியலிட வேண்டும். மளிகை, வாடகை, கல்வி, மருத்துவம், போக்குவரத்து போன்ற அத்தியாவசிய செலவுகள் எவை, ஷாப்பிங், சினிமா, உணவகம் போன்ற ஆசைக்கான செலவுகள் எவை எனப் பிரித்து தேவையற்ற செலவுகளைக் குறைக்க வேண்டும்.

36
பணவீக்கத்தை சமாளிக்க சூப்பர் ஃபைனான்ஸ் டிப்ஸ்!
Image Credit : Gemini

பணவீக்கத்தை சமாளிக்க சூப்பர் ஃபைனான்ஸ் டிப்ஸ்!

அடுத்த 12 மாதங்களில் வரக்கூடிய இன்ஷூரன்ஸ் பிரீமியம், பள்ளிக் கட்டணம், பண்டிகைச் செலவுகள் போன்ற தவிர்க்க முடியாத தேவைகளைக் கணக்கிட்டு, மாதந்தோறும் ஒரு சிறு தொகையை அதற்காகத் தனியாக ஒதுக்கிச் சேமிக்க வேண்டும்.

ஊதியம் 10% உயர்ந்தால் உடனடியாக வாழ்க்கைத் தரத்திற்கான செலவுகளையும் உயர்த்த வேண்டியதில்லை. கூடுதல் வருமானத்தை எஸ்.ஐ.பி (SIP), ஓய்வூதியத் திட்டம் அல்லது அவசரகால நிதிக்கு ஒதுக்குவது எதிர்காலத்திற்குப் பயனளிக்கும்.

46
இன்றைய சூழலில் பணத்தைப் பெருக்க 8 வழிகள்
Image Credit : Google

இன்றைய சூழலில் பணத்தைப் பெருக்க 8 வழிகள்

பணவீக்கத்தால் பணத்தின் வாங்கும் சக்தி குறைந்து கொண்டே செல்வதால், அதனை ஈடுசெய்ய முதலீடு அவசியம். தனிநபரின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், பிபிஎஃப் (PPF), தங்கம் ஆகியவற்றில் கலவையாக முதலீடு செய்யலாம்.

குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் ஓய்வுக்காலத்திற்கு இப்போதே திட்டமிட வேண்டும். பணவீக்க காலத்தில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கக்கூடும் என்பதால், அதிக வட்டி கொண்ட பர்சனல் லோன் மற்றும் கிரெடிட் கார்டு கடன்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.

56
விலைவாசி உயர்வை விரட்டியடிக்கும் வழிகள்!
Image Credit : Google

விலைவாசி உயர்வை விரட்டியடிக்கும் வழிகள்!

மொபைல் ரீசார்ஜ் மற்றும் ஓடிடி (OTT) கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளதால், பயன்பாட்டைச் சரியாக நிர்வகிக்க வேண்டும். அவசியமில்லாத சந்தாக்களை உடனடியாக ரத்து செய்துவிட்டு தேவைக்கேற்ப மட்டுமே செலவிட வேண்டும்.

மருத்துவச் செலவுகள் விண்ணளவுக்கு உயர்ந்துவிட்டதால் உடலை ஆரோக்கியமாகப் பராமரிப்பது கட்டாயமாகும். அதேபோல், வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் வீட்டுச் சாதனங்களை முறையாகப் பராமரிப்பதன் மூலம் பெரிய அளவிலான திடீர் செலவுகளைத் தவிர்க்கலாம்.

66
பணவீக்கத்திலிருந்து தப்பிக்க பக்காவான பிளான்!
Image Credit : Getty

பணவீக்கத்திலிருந்து தப்பிக்க பக்காவான பிளான்!

இன்றைய சமூகச் சூழலில் பொருளாதாரப் பலம் இருந்தால்தான் மரியாதை கிடைக்கும்; பணமின்மை பல நெருக்கடிகளை உருவாக்கும் என்பதால் பணத்தை வீணாக்காமல் நிதி ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பது அவசியமாகிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

M
Meenakshisundaram
மீடியா துறையில் 5+ ஆண்டுகள் அனுபவம் கொண்ட மீனாட்சிசுந்தரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ், சன் நியூஸ், தந்தி டிவி, பாலிமர் நியூஸ் உள்ளிட்ட முன்னணி செய்தி நிறுவனங்களில் திறம்பட பணியாற்றியவர். பிரேக்கிங் நியூஸ், ஆழமான ஆய்வுக் கட்டுரைகளில் தனித்துவ முத்திரை பதித்த இவர், தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சீனியர் சப்-எடிட்டராகப் பொறுப்பு வகிக்கிறார். அறிவியல், புதிய டெக்னாலஜி, வணிகம், அரசியல் மற்றும் குற்றப் பின்னணி சார்ந்த விவகாரங்களை எளிய நடையில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வணிகம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Lenovo IdeaPad Vibe: 2.1K OLED ஸ்கிரீன், 24GB ரேம்; பிரீமியம் லேப்டாப்களை மிரட்டும் லெனோவாவின் புதிய லேப்டாப்!
Recommended image2
கருவில் கண் பார்வை எப்படி உருவாகிறது? வைட்டமின் ஏ-வின் 30 ஆண்டு கால புதிருக்கு கிடைத்தது விடை!
Recommended image3
வாட்ஸ்அப் குரூப்பில் இனி இந்த 4 மாற்றங்கள்: புதிய சிறப்பம்சங்கள் என்னென்ன? முழு விவரம்!
Related Stories
Recommended image1
Land : இன்று ஒரு சென்ட் நிலம் வாங்கினால் 10 வருஷத்துல எவ்வளவு மதிப்பு வரும்? வாங்கும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க!
Recommended image2
8th Pay Commission: சம்பளம் இரட்டிப்பாக சான்ஸ்.! கடைநிலை ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! கோரிக்கைகளுக்கு செவி சாய்த்ததா மத்திய அரசு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved