- Home
- டெக்னாலஜி
- Amazon Tablet Offers : ரூ.16,999க்கு OnePlus Pad.. iPad முதல் Xiaomi Pad வரை செம்ம ஆஃபர்.. அதிரடி விலை குறைப்பு
Amazon Tablet Offers : ரூ.16,999க்கு OnePlus Pad.. iPad முதல் Xiaomi Pad வரை செம்ம ஆஃபர்.. அதிரடி விலை குறைப்பு
Amazon Great Summer Sale 2026 இந்தியாவில் தொடங்கியுள்ள நிலையில், ஒன்பிளஸ், ஜியோமி, ஆப்பிள் மற்றும் சாம்சங் டேப்லெட்களுக்கு பெரிய அளவில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாடல்கள் இதுவரை இல்லாத குறைந்த விலையில் விற்பனையாகின்றன.

அமேசான் டேப்லெட் ஆஃபர்
அமேசான் கிரேட் சம்மர் சேல் 2026 (Amazon Great Summer Sale 2026) இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த முறை ஸ்மார்ட்போன்கள் மட்டும் இல்லாமல் டேப்லெட் பிரிவிலும் பெரிய அளவில் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆப்பிள், சாம்சங், ஜியோமி, ஒன்பிளஸ் மற்றும் லெனோவா நிறுவனங்களின் பல மாடல்கள் விலை குறைந்து கவனம் ஈர்த்துள்ளன.

ஒன்பிளஸ் பேட் லைட்-க்கு செம்ம டீல்
ஒன்பிளஸ் பேட் லைட் தற்போது ரூ.19,999 முதல் ரூ.16,999க்கு கிடைக்கிறது. அதோடு பழைய சாதனத்தை மாற்றி கொடுத்தால் கூடுதல் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும். 11 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 9340mAh பேட்டரி கொண்ட இந்த டேப்லெட் மாணவர்கள் மற்றும் ஓடிடி பயனர்களுக்கு நல்ல தேர்வாக பார்க்கப்படுகிறது.
ஜியோமி பேட் 8 கேமிங் ரசிகர்களின் கவனம்
ஜியோமி பேட் 8 தற்போது ரூ.40,999 முதல் ரூ.35,999க்கு விற்பனையாகிறது. Snapdragon 8s Gen 4 சிப்செட் கொண்ட இந்த டேப்லெட் கேமிங் மற்றும் மல்டிடாஸ்கிங்கிற்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. பெரிய பேட்டரி மற்றும் பிரீமியம் டிஸ்ப்ளே இதன் முக்கிய பலமாக உள்ளது.
ஆப்பிள் மற்றும் சாம்சங் டேப்லெட்களுக்கும் ஆஃபர்
ஆப்பிள் ஐபேட் 11 தற்போது ரூ.33,499க்கு கிடைக்கிறது. மேலும் சாம்சங் Galaxy Tab A11+ ரூ.23,499க்கு விற்பனையாகிறது. மேலும் Galaxy Tab S11 மாடலுக்கு ரூ.25,000க்கும் அதிகமான விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரீமியம் டேப்லெட் சந்தையில் போட்டி அதிகரித்துள்ளது.
வங்கி ஆஃபர்களும் கூடுதல் சேமிப்பும்
ஹெச்டிஎப்சி வங்கி மற்றும் Amazon Pay ICICI வங்கி கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. No-cost EMI வசதியும் இருப்பதால், இந்த அமேசான் சம்மர் சேல்பலருக்கும் டேப்லெட் வாங்க சிறந்த வாய்ப்பாக மாறியுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

