MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • அமேசான் குடியரசு தின விற்பனை; அடிச்சு நொறுக்கும் ஆபர்; எந்தெந்த போன்களுக்கு தள்ளுபடி?

அமேசான் குடியரசு தின விற்பனை; அடிச்சு நொறுக்கும் ஆபர்; எந்தெந்த போன்களுக்கு தள்ளுபடி?

அமேசான் நிறுவனம் குடியரசு தின சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இதில் எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். 

2 Min read
Rayar r
Published : Jan 11 2025, 09:02 PM IST| Updated : Jan 25 2025, 12:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Amazon Republic Day Sale 2025

Amazon Republic Day Sale 2025

அமேசான் குடியரசு தின சிறப்பு விற்பனை

இந்தியாவில் ஆன்லைன் விற்பனை தளத்தில் ப்ளிப்கார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதில் ப்ளிப்கார்ட் நிறுவனம் குடியரசு தின சிறப்பு விற்பனை ஜனவரி 13 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக ஏற்கெனவே அறிவித்து விட்டது. இதில் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம்.

இதனால் அமேசான் குடியரசு தின சிறப்பு விற்பனையை எப்போது அறிவிக்கும்? என வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இப்போது அது குறித்த அறிவிப்பை அமேசான் வெளியிட்டுள்ளது.

24
OnePlus 13 Series Smartphone

OnePlus 13 Series Smartphone

அதிரடி தள்ளுபடி

அமேசானின் குடியரசு தின சிறப்பு விற்பனை ஜனவரி 13ம் தேதி தொடங்குகிறது. அதே வேளையில் அமேசான் பிரைம் சந்தாதாரர்களுக்கு குடியரசு தின சிறப்பு விற்பனை ஒருநாள் முன்னதாகவே தொடங்கும். ப்ளிப்கார்ட்டை போலவே அமேசானின் குடியரசு தின சிறப்பு விற்பனையிலும் ஐபோன் உள்ளிட்ட அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடி வாரி வழங்கப்பட உள்ளது. 

OnePlus 13 சீரிஸ் போன்கள்

அமேசானின் சிறப்பு விற்பனையில் OnePlus 13 சீரிஸ் போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு செய்யப்படுகிறது. அதாவது OnePlus 13 வாங்குபவர்களுக்கு ரூ.5,000 வங்கி தள்ளுபடியும், OnePlus 13R வாங்குபவர்களுக்கு ரூ.3,000 வங்கி தள்ளுபடியும் கிடைக்கும். OnePlus 13 மாடல் ரூ.69,999 என்ற விலையிலும், OnePlus 13R மாடல் ரூ.42,999 என்ற விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டது. 

ஜனவரியில் விற்பனையாகும் சிறந்த 7 போன்கள்; பட்ஜெட் விலை; எக்கச்சக்க அம்சங்கள்!
 

34
Discount for IPhones

Discount for IPhones

ஐபோன்கள் 

அமேசான் குடியரசு தின சிறப்பு விற்பனையில் ஐபோன்களுக்கும் அதிக தள்ளுபடி கிடைக்கும். iPhone 15 மாடல் ரூ.60,000 க்கும் குறைவான விலையில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமேசானில் இந்த போன் ரூ.60,499க்கு விற்கப்படுகிறது. இதேபோல் iPhone 16 விலையிலும் தள்ளுபடியை எதிர்பார்க்கலாம். 

44
Flipkart Republic Day Sale 2025

Flipkart Republic Day Sale 2025

கிரெடிட் கார்டுகளுக்கு டிஸ்கவுண்ட் 

இது மட்டுமின்றி Redmi A4, Samsung Galaxy S23 Ultra, Oppo F27 Pro+, OnePlus 13 Neo, OnePlus 13, iPhone 15, iQOO Z9s, OnePlus Nord 4, OnePlus 13R உள்பட அனைத்து மாடல் போன்களுக்கும் அதிரடி தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கிகளின் கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதல் தள்ளுபடியும், கேஷ் பேக் சலுகையும் கிடைக்கும். கிப்ட் வவுச்சர்களும் பெறலாம். 

ஒருநாளைக்கு ரூ.7 போதும்: தினமும் 3 ஜிபி டேட்டாவை வாரி வழங்கும் பிஎஸ்என்எல் - வேலிடிட்டி எத்தனை நாள்?

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரு நாளுக்கு ரூ.5 கூட இல்லை… 300 நாளைக்கு கவலை இல்ல.. பிஎஸ்என்எல் சூப்பர் பிளான்
Recommended image2
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. ரெட்மி நோட் 15 5ஜி, ரெட்மி பேட் 2 ஜனவரியில் அறிமுகம்.. விலை எவ்ளோ?
Recommended image3
மிட்-ரேஞ்ச் போன் + முதல் 5ஜி டேப்லெட்.. எல்லாமே பட்ஜெட்டில்.. OnePlus 15R & Pad Go 2வை வாங்க ரெடியா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved