- Home
- டெக்னாலஜி
- Airtel 5G: ஏர்டெல் யூசர்களுக்கு ஷாக்! இனி 5G ஹாட்ஸ்பாட் ஷேரிங் கிடையாதா? WFH செய்வோருக்கு பேரிடி!
Airtel 5G: ஏர்டெல் யூசர்களுக்கு ஷாக்! இனி 5G ஹாட்ஸ்பாட் ஷேரிங் கிடையாதா? WFH செய்வோருக்கு பேரிடி!
Airtel 5G: ஏர்டெல் நிறுவனம் தனது அன்லிமிடெட் 5G டேட்டாவை, மொபைல் ஹாட்ஸ்பாட் மூலம் மற்ற டிவைஸ்களுக்கு ஷேர் செய்யும் வசதியை நிறுத்தப் போகிறது என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

5G ஹாட்ஸ்பாட் ஷேரிங் நிறுத்தும் ஏர்டெல்?
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், தனது யூஸர்களுக்கு ஒரு அதிர்ச்சி தரும் முடிவை எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஏர்டெல் தனது அன்லிமிடெட் 5G டேட்டாவை, மொபைல் ஹாட்ஸ்பாட் மூலம் மற்ற டிவைஸ்களுக்கு ஷேர் செய்யும் வசதியை நிறுத்தப் போகிறது. இந்த மாற்றத்தால் யூஸர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி
பல யூஸர்கள் சோஷியல் மீடியாவில் தங்கள் கோபத்தையும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். பலர் தங்கள் ஆபீஸ் வேலைகளுக்காக ஹாட்ஸ்பாட்டை நம்பி இருப்பதாகக் கூறுகின்றனர். அன்லிமிடெட் 5G டேட்டாவை இப்படி ஷேர் செய்ய முடியாவிட்டால், வேலை பார்ப்பதில் பெரிய சிக்கல் ஏற்படும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், இந்த விதிமுறை உண்மையானால், நாங்கள் வேறு நெட்வொர்க்குகளுக்கு மாறிவிடுவோம் என்றும் சில யூஸர்கள் எச்சரித்துள்ளனர்.
சோஷியல் மீடியாவில் வைரலாகும் போஸ்ட்
சமீபத்தில், ஏர்டெல்லின் 'டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ்' பக்கத்தின் ஸ்கிரீன்ஷாட் ஒன்று X (முன்பு ட்விட்டர்) தளத்தில் வைரலானது. அதில், 'அன்லிமிடெட் 5G டேட்டாவை மொபைல் ஹாட்ஸ்பாட் மூலம் ஷேர் செய்ய முடியாது' என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விதிமுறை அமலுக்கு வந்தால், நீங்கள் ஹாட்ஸ்பாட் பயன்படுத்தும்போது, உங்கள் தினசரி 4G டேட்டா பேக்கில் இருந்துதான் டேட்டா கழிக்கப்படும்; அன்லிமிடெட் 5G டேட்டாவில் இருந்து கழிக்கப்படாது. ஆனாலும், ஏர்டெல் நிறுவனம் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல்லுக்கு இது எப்படித் தெரியும்?
டேட்டா போனில் நேரடியாகப் பயன்படுத்தப்படுகிறதா அல்லது ஹாட்ஸ்பாட் மூலம் மற்ற டிவைஸ்களுக்கு ஷேர் செய்யப்படுகிறதா என்பது டெலிகாம் கம்பெனிக்கு எப்படித் தெரியும் என்ற கேள்வி இப்போது பலருக்கும் எழுந்துள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி டெலிகாம் நிறுவனங்களால் நெட்வொர்க் அளவில் டேட்டா டிராஃபிக்கை எளிதாகக் கண்காணிக்க முடியும்.
இதற்காக, TTL (டைம் டு லிவ்), TCP/IP ஃபிங்கர்பிரிண்டிங், HTTP யூஸர்-ஏஜென்ட் மற்றும் டீப் பேக்கெட் இன்ஸ்பெக்ஷன் (DPI) போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த டெக்னாலஜி மூலம், டேட்டா எந்த டிவைஸில் இருந்து வருகிறது, அதன் தன்மை என்ன என்பதை அவர்களால் கண்டறிய முடியும்.
ஏர்டெல் ஏன் இந்த முடிவை எடுக்கிறது?
நெட்வொர்க் நெரிசல் (Network Congestion): ஒரே ஒரு அன்லிமிடெட் 5G சிம் கார்டை ஹாட்ஸ்பாட் மூலம் லேப்டாப், ஸ்மார்ட் டிவி போன்ற பல டிவைஸ்களுக்கு இணைத்து பிராட்பேண்ட் போல பயன்படுத்துவதால், ஏர்டெல் டவர்களின் டேட்டா டிராஃபிக் பன்மடங்கு அதிகரிக்கிறது. இதனால் மற்ற சாதாரண மொபைல் யூஸர்களின் வேகம் குறைகிறது.
வருவாய் இழப்பு: வாடிக்கையாளர்கள் தங்களது வைஃபை (Wi-Fi) அல்லது ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்புகளை ரத்து செய்துவிட்டு, இந்த இலவச 5G ஹாட்ஸ்பாட்டையே நம்பியிருக்கத் தொடங்கினர். இது ஏர்டெல் நிறுவனத்தின் ஹோம் பிராட்பேண்ட் (Airtel Xstream Fiber/AirFiber) வர்த்தகத்தைப் பெரியளவில் பாதிக்கிறது.
டெலிகாம் கொள்கை மாற்றம் (FUP லிமிட்)
ஆரம்பத்தில் 5G நெட்வொர்க்கை மக்களிடம் கொண்டு சேர்க்க 'True Unlimited' ஆக வழங்கப்பட்டது. ஆனால், தற்போதைய சூழலில் இதனை வணிக ரீதியாகத் தொடர முடியாது என்பதால், நியாயமான பயன்பாட்டுக் கொள்கை (Fair Usage Policy - FUP) என்ற விதியின் கீழ் டேட்டா பயன்பாட்டிற்கு ஏர்டெல் ஒரு எல்லையை (Cap) நிர்ணயிக்க ஆலோசித்து வருகிறது.
ஜியோவும் இதே பாதையில் செல்ல வாய்ப்பு?
டெலிகாம் சந்தையில் ஏர்டெல் எடுக்கும் கட்டண உயர்வு அல்லது கொள்கை முடிவுகளைப் பின்பற்றி, அதன் போட்டி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவும் (Jio) தங்களது அன்லிமிடெட் 5G ஹாட்ஸ்பாட் பகிர்வுக்குக் கட்டுப்பாடு விதிக்க அதிக வாய்ப்புள்ளதாக சந்தை வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

