Airtel, Jio விளம்பர முதலீடு: பண்டிகை காலத்தில் மட்டும் விளம்பரத்திற்காக 400 கோடி!
ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் இந்த பண்டிகை காலத்தில் மட்டும் விளம்பரத்திற்காக 300 முதல் 400 கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் இந்த பண்டிகை காலத்தில் மட்டும் விளம்பரத்திற்காக 300 முதல் 400 கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையில் அடுத்தடுத்து பண்டிகைகள் உள்ளன. ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், விதவிதமாக ஆஃபர்களை அள்ளிகொடுக்கும் காலமும் இதுதான்.
கட்டாயம் 5 விளம்பரங்களை பார்க்க வேண்டுமா? Youtube நிறுவனம் விளக்கம்!!
அந்த வகையில், நடப்பு ஆண்டில் வரவிருக்கும் பண்டிகை காலத்தில் விளம்பரம் செய்வதற்கும், 5ஜி சேவையை தொடங்குவதற்கும் ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் முழுவீச்சில் பணிபுரிந்து வருகிறது. இதற்காக கிட்டத்தட்ட 350 கோடி முதல் 400 கோடி ரூபாய் வரையில் விளம்பரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக எகானமிக் டைம்ஸ் செய்திநிறுவனம் செய்திவெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்த பண்டிகை காலத்தில் முக்கிய பிராண்டுகள் மூன்று விஷயங்களில் விளம்பரத்திற்காக அதிகளவு முதலீடு செய்ய உள்ளன. அவை உலகக்கோப்பை கால்பந்து, ஐசிசி டி20 உலகக்கோ்பை, க்ரோபதி போட்டி.
முன்னதாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள், 2023 நிதியாண்டில் தங்கள் விளம்பரத்திற்காக சுமார் 700 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக திட்டமிடப்பட்டது. ஆனால், பொருளாதா மந்தம் உள்ளிட்ட காரணங்களினால் தற்போது இந்தத் தொகை குறைந்துள்ளது. இவற்றில் வோடபோன் ஐடியா நிறுவனம் தங்களது திட்டம் குறித்து தெளிவான வரையறை எதுவும் வெளியிடவில்லை. 2020 ஆம் ஆண்டு வோடபோன் ஐடியா இணைந்த பிறகு, அந்நிறுவனத்தின் முதல் விளம்பர பிரச்சாரம் இதுவே ஆகும்.
எது எப்படியோ, வாடிக்கையாளர்கள் தலையில் வரி, வட்டி, விலைவாசி உயர்வு என்று அதிகப்படியான கட்டணங்கள் இல்லாமல், தரமான சேவை வழங்கினாலே போதும் என்பது பொதுவான கருத்தாகும்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.