Asianet News TamilAsianet News Tamil

கட்டாயம் 5 விளம்பரங்களை பார்க்க வேண்டுமா? Youtube நிறுவனம் விளக்கம்!!

யூடியூப்பில் தவிர்க்க முடியாத வகையில் 5 கட்டாய விளம்பரங்கள் வரவுள்ளதாக செய்திகள் வந்த நிலையில், யூடியூப் நிறுவனம் அதற்கு விளக்கமளித்துள்ளது. 

YouTube ends experiment that forced users to watch large unskippable ads
Author
First Published Sep 19, 2022, 6:28 PM IST

யூடியூப்பில் தவிர்க்க முடியாத வகையில் 5 கட்டாய விளம்பரங்கள் வரவுள்ளதாக செய்திகள் வந்த நிலையில், யூடியூப் நிறுவனம் அதற்கு விளக்கமளித்துள்ளது. உலகளவில் வீடியோ ஸ்ட்ரீமிங் தளத்தில் நம்பர் ஒன் இடத்தில் யூடியூப் திகழ்ந்து வருகிறது. தொடக்கத்தில் விளம்பரங்களே இல்லாமல், இலவசமாக வீடியோக்களை வழங்கி வந்த யூடியூப், கடந்த சில வருடங்களுக்கு முன்பு 5 நொடி விளம்பரங்களை வைத்தது. பின்னர், இரண்டு விளம்பரங்களை கொண்டு வந்தது. அதன்பிறகு, தவிர்க்கவே முடியாதபடி 30 நொடிக்கு விளம்பரங்களை அடுக்கியது. 

இதையும் படிங்க: Xiaomi தீபாவளி சிறப்பு விற்பனை ஆரம்பம்! முழு விவரங்கள்!!

இதன் உச்சக்கட்டமாக தற்போது 5 கட்டாய விளம்பரங்களை யூடியூப் சோதித்து வருவதாக செய்திகள் வந்தன.  ஒருபுறம் விளம்பரங்களை அடுக்கியும், மறுபுறம் விளம்பரங்கள் இல்லாமல் வீடியோக்களை பார்க்க வேண்டுமானால் பிரீமியம் சந்தாவாக மாறும்படியும் மறைமுகமாக கூறியது. இந்த நிலையில், 5 தொடர்ச்சியான விளம்பரங்களை குறித்து யூடியூப் செய்திதொடர்பாளர்  9to5Google என்ற செய்தி தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். 

இதையும் படிங்க: Amazon Great Indian Sale: எந்த மாதிரியான சலுகைகள் உள்ளன?

அதன்படி, ‘யூடியூப்பில் சோதனை முயற்சியாக மட்டுமே 5 விளம்பரங்களை வைத்து பார்த்ததாகவும், இது அமல்படுத்தப் போவதில்லை எனவும் கூறியுள்ளார். மேலும், ஆண்ட்ராய்டு டிவி, ஸ்ட்ரீமிங் டிவி போன்ற சாதனங்களில் தான் இந்த 5 கட்டாய விளம்பரங்களை சோதனை செய்தோம். பயனர்கள் இவ்வாறு 5 விளம்பரங்களை பார்த்துவிட்டால், அதன்பிறகு விளம்பர தொல்லையே இல்லாமல் முழு நீள படத்தை கூட பார்க்கலாம். அதற்காகத் தான் இதுபோல் கொண்டு வர முயற்சித்தோம். மற்றபடி பயனர்களின் வசதிக்கேற்ப மட்டுமே யூடியூப் தளத்தை மேம்படுத்தி வருகிறோம்’ இவ்வாறு கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios