MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • Airtel Plan: 200 ரூபாய்க்கு 18+ ஓடிடியுடன் யூடியூப் பிரீமியம் இலவசம்.. பட்டையை கிளப்பும் ஏர்டெல்!

Airtel Plan: 200 ரூபாய்க்கு 18+ ஓடிடியுடன் யூடியூப் பிரீமியம் இலவசம்.. பட்டையை கிளப்பும் ஏர்டெல்!

Airtel Plan: ஏர்டெல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு விளம்பரங்கள் இல்லாத யூடியூப் பிரீமியம் சேவையை வழங்க அதிரடி ஒப்பந்தம் செய்துள்ளது. 30 ஜிபி டேட்டா மற்றும் 18 ஓடிடி தளங்களுடன் கிடைக்கும் இந்த சலுகையை, ஏர்டெல் ஆப் மூலம் ஆக்டிவேட் செய்யலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 24 2026, 01:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
யூடியூப் மியூசிக் பிரீமியம் வசதி
Image Credit : AI

யூடியூப் மியூசிக் பிரீமியம் வசதி

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா போன்ற தனியார் நிறுவனங்களும், அரசின் பிஎஸ்என்எல் நிறுவனமும் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. இதில் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை இந்தத் துறையில் இந்தியாவின் இரண்டு பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களாக உள்ளன. இதனால் ஜியோவும், ஏர்டெல்லும் வாடிக்கையாளர்களை கவர போட்டி போட்டு புதிய திட்டங்களை கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சூப்பரான ஒரு என்டர்டெயின்மென்ட் அனுபவத்தை கொடுக்க, பிரபல வீடியோ தளமான யூடியூப் உடன் ஒரு முக்கியமான ஒப்பந்தத்தை போட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலமாக‌ ப்ரீபெய்ட் யூசர்களுக்கு யூடியூப் பிரீமியம் சேவை கிடைக்கப் போகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஏர்டெல்லின் புதிய ஆஃபர்
Image Credit : X

ஏர்டெல்லின் புதிய ஆஃபர்

இப்போதெல்லாம் மொபைல் டேட்டா என்பது வெறும் பேசுவதற்கு மட்டும் இல்லை. சினிமா, சீரியல் பார்ப்பது, கன்டென்ட் கிரியேட்டர்களை ஃபாலோ செய்வது, பாட்டு கேட்பது என டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட்டுக்கு தான் அதிகம் பயன்படுகிறது. வாடிக்கையாளர்களின் இந்த தேவையை புரிந்துகொண்டு தான் ஏர்டெல் இந்த புதிய ஆஃபரை கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் ஷார்ட்ஸ் உட்பட எந்த வீடியோவையும் விளம்பரங்கள் இல்லாமல் யூடியூபில் பார்க்கலாம். அதோடு பேக்கிரவுண்ட் பிளேபேக், ஆஃப்லைன் டவுன்லோட் மற்றும் யூடியூப் மியூசிக் பிரீமியம் வசதிகளும் கிடைக்கும்.

34
ரூ.200 ஓடிடி டாப்-அப்
Image Credit : X

ரூ.200 ஓடிடி டாப்-அப்

ஏர்டெல் ஏற்கனவே வழங்கி வரும் ₹200 ஓடிடி டாப்-அப் பேக்கில் (30 ஜிபி கூடுதல் டேட்டாவுடன்) இப்போது யூடியூப் பிரீமியம் சேவையும் சேர்ந்துள்ளது. இந்த பேக்கில் பிரைம் வீடியோ, ஜியோ ஹாட்ஸ்டார், ஜீ5 பிரீமியம், சோனிலிவ் என மொத்தம் 18க்கும் மேற்பட்ட முன்னணி ஓடிடி தளங்கள் கிடைக்கின்றன.

ஆக்டிவாக ஒரு ப்ரீபெய்ட் பிளான் வைத்திருக்கும் எந்த ஒரு ஏர்டெல் வாடிக்கையாளரும் இந்த டாப்-அப்பை பெற முடியும். ரீசார்ஜ் செய்த பிறகு, ஏர்டெல் ஆப்பில் உள்ள 'ரிவார்ட்ஸ் அண்ட் ஓடிடிஸ்' (Rewards and OTTs) பகுதிக்கு சென்று யூடியூப் பிரீமியம் வசதியை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த பிளான் முடிந்த பிறகு, வாடிக்கையாளர்கள் மீண்டும் டாப்-அப் செய்து சேவையை தொடரலாம்.

44
எந்தெந்த சாதனத்தில் ஆக்டிவேட் செய்யலாம்?
Image Credit : Asianet News

எந்தெந்த சாதனத்தில் ஆக்டிவேட் செய்யலாம்?

ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய ரூ.200 ஓடிடி டாப்-அப் பேக்கில் கிடைக்கும் யூடியூப் பிரீமியம் மற்றும் 18 ஓடிடி சேவைகளை, வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போன் தவிர ஸ்மார்ட் டிவி, டேப்லெட் மற்றும் லேப்டாப் போன்ற பல்வேறு சாதனங்களிலும் லாகின் செய்து ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளும் வசதியும் இந்த திட்டத்துடன் கூடுதலாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஏர்டெல்
தொழில்நுட்பம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
செவ்வாய் கிரகத்தில் உருவாகும் 1,800 கி.மீ விசித்திர மேகம்: பிரபஞ்சத்தில் இதுவரை பார்க்காத வினோதம்!
Recommended image2
சாம்சங் vs எல்ஜி ஸ்மார்ட் டிவி: இரண்டில் எது உங்க பணத்திற்கு வொர்த்? தொழில்நுட்ப வல்லுநர்களின் ரிப்போர்ட்!
Recommended image3
5.2 சேனல் சப்போர்ட் , வீட்டிலேயே ஒரிஜினல் தியேட்டர் வைப்: ரூ.10,000-க்கும் குறைவான விலையில் சவுண்ட்பார்கள்!
Related Stories
Recommended image1
Airtel Offers: ஏர்டெல் பயனர்களுக்கு குட் நியூஸ்! ரூ.348 ரீசார்ஜில் ஓராண்டு இலவச சந்தா!
Recommended image2
Airtel Recharge : அதகளம் செய்யும் ஏர்டெல்! கம்மி விலையில் 3 புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved