MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • பசிபிக் கடலின் 529 மீ. ஆழத்தில் தங்க மரம்: முற்றிலும் புதிய பவளப்பாறையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

பசிபிக் கடலின் 529 மீ. ஆழத்தில் தங்க மரம்: முற்றிலும் புதிய பவளப்பாறையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

கோஸ்டா ரிகா கடற்கரைக்கு அருகே பசிபிக் பெருங்கடலின் 360 முதல் 529 மீட்டர் ஆழத்தில், மரத்தைப் போன்ற தோற்றத்துடன் மஞ்சள் நிறத்தில் காணப்படும் புதிய பவளப்பாறை இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

2 Min read
Author : Kiruthickraj D
Published : Oct 16 2026, 11:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பசிபிக் பெருங்கடலில் புதிய பவளப்பாறை இனம்
Image Credit : X

பசிபிக் பெருங்கடலில் புதிய பவளப்பாறை இனம்

கோஸ்டா ரிகா (Costa Rica) கடற்கரைக்கு அருகே பசிபிக் பெருங்கடலின் ஆழமான நீருக்கடியில் உள்ள மலைப்பகுதிகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், இதுவரை அறியப்படாத முற்றிலும் புதிய வகை பவளப்பாறை (Coral) இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இதன் தனித்துவமான மரபணு அமைப்பு மற்றும் உடலமைப்பு காரணமாக, இதனை வகைப்படுத்த விஞ்ஞானிகள் முற்றிலும் புதிய குடும்ப வகைப்பாட்டை உருவாக்கியுள்ளனர்.

பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் இருந்து சுமார் 360 முதல் 529 மீட்டர் ஆழத்தில் இந்த அரிய பவளப்பாறைகள் கண்டறியப்பட்டுள்ளன. கிளைகளுடன் மரத்தைப் போன்ற தோற்றத்தைக் கொண்ட இந்த பவளப்பாறைகள், பிரகாசமான மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. இக்கண்டுபிடிப்பு குறித்த ஆய்வுக் கட்டுரை 'ஜூகீஸ்' (ZooKeys) என்ற திறந்தவெளி அறிவியல் இதழில் வெளியாகி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கடலுக்கு நடுவே ஜொலிக்கும் 'தங்க மரம்'
Image Credit : X

கடலுக்கு நடுவே ஜொலிக்கும் 'தங்க மரம்'

இந்த வகை பவளப்பாறைகளில் சில பகுதிகள் ஒரு மீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு வளரக்கூடியவை. 'ஷ்மிட் பெருங்கடல் நிறுவனம்' (Schmidt Ocean Institute) இயக்கும் 'ஃபால்கர்' மற்றும் 'ஃபால்கர் டூ' ஆகிய ஆராய்ச்சித் கப்பல்கள் மூலம் 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, 'சுபாஸ்டியன்' (SuBastian) என்ற தொலைதூரத்தில் இருந்து இயக்கப்பட்ட நீருக்கடி வாகனம் (ROV) மூலம் இதன் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. கடலடிப் பாறைப் பகுதிகளில் 'பிரிட்டில் ஸ்டார்ஸ்' (Brittle Stars) எனப்படும் நட்சத்திர மீன் போன்ற உயிரினங்கள் நிறைந்திருந்த சூழலில், இந்த மஞ்சள் நிற பவளப் பாறைகள் கண்டறியப்பட்டன.

மின்னுவது போன்ற அந்த பின்னணியில், இந்த மஞ்சள் நிறக் கிளைகள் நட்சத்திரங்களால் சூழப்பட்ட ஒளிரும் மரங்களைப் போலக் காட்சியளித்தன. இந்த விசித்திரமான மற்றும் அழகான காட்சலே இதன் அறிவியல் பெயருக்கு ஊக்கமளித்தது. இத புதிதாக உருவாக்கப்பட்ட பேரினத்திற்கு (Genus) 'லாரின்கே' (Laurinque) என்று பெயரிடப்பட்டுள்ளது. 'தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' கதையாசிரியர் ஜே.ஆர்.ஆர். டோல்க்கினின் எல்விஷ் (Quenya) மொழியில் 'லாரின்கே' என்றால் "தங்க மரம்" என்று பொருளாகும். அதேபோல, இதன் சிற்றினப் பெயரான (Species) 'எலென்யா' (Elenya) என்பதற்கு எல்விஷ் மொழியில் "நட்சத்திரம் சார்ந்த" என்று பொருள். பவளப்பாறைகளைச் சுற்றி அடர்த்தியாக இருக்கும் நட்சத்திர மீன்களைக் குறிக்கும் வகையில் இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.

34
டிஎன்ஏ வெளியிட்ட புதிய ரகசியம்
Image Credit : X

டிஎன்ஏ வெளியிட்ட புதிய ரகசியம்

இந்த பவளப்பாறை எந்த பரிணாமக் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிவது விஞ்ஞானிகளுக்குத் தொடக்கத்தில் பெரும் சவாலாக இருந்தது. வழக்கமாக பவளப்பாறைகளை அடையாளம் காணப் பயன்படும் 3 மரபணுக்களைச் சோதித்தபோது, ஒவ்வொரு மரபணுவும் தொடர்பு இல்லாத வேறு வேறு குடும்பங்களைக் காட்டின. இதனால், ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான மரபணுக்களை ஒப்பிடும் 'ஃபைலோஜெனாமிக்ஸ்' (Phylogenomics) என்ற மேம்பட்ட மரபணு பகுப்பாய்வு முறையை விஞ்ஞானிகள் பயன்படுத்தினர்.

அதன் முடிவில், இந்த உயிரினம் இதுவரை அறியப்பட்ட எந்த பவளப்பாறை குடும்பத்துடனும் பொருந்தவில்லை என்பதும், இது முற்றிலும் புதிய பரிணாமக் கிளையைக் கொண்டது என்பதும் உறுதியானது. இதையடுத்து, இதற்கு 'லாரின்கேடே' (Laurinqueidae) என்ற புதிய குடும்பப் பெயர் சூட்டப்பட்டு, 'லாரின்கே' என்ற புதிய பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டது.

44
ஆராய்ச்சியாளரின் கூற்று
Image Credit : X

ஆராய்ச்சியாளரின் கூற்று

கோஸ்டா ரிகா பல்கலை. முதன்மை ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 2019-ல் முதன்முதலில் இந்த கடலடிப் பூங்காவைப் பார்த்தபோதே அதன் அழகு என்னை வியப்பில் ஆழ்த்தியது. அதுவே இந்த உயிரினத்திற்கு எல்விஷ் பெயர் வைக்க உத்வேகமாக இருந்தது. ஆரம்பத்தில் இது தெரிந்த ஏதேனும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் உடலமைப்பு பகுப்பாய்வுக்குப் பிறகே இது முற்றிலும் மாறுபட்ட ஒன்று என்பதை உணர்ந்தேன்.

பூமியின் மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு கடலால் சூழப்பட்டிருந்தாலும், ஆழ்கடலின் பெரும் பகுதி இன்னும் மனிதர்களால் ஆராயப்படாமல் உள்ளது என்பதையும், இதுபோன்ற அரிய கடலடி உயிரினங்கள் கடல்சார் பல்லுயிர் பெருக்கத்திற்கு மிக முக்கியமானது என்பதையும் இந்தக் கண்டுபிடிப்பு மீண்டும் நிரூபித்துள்ளது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

KD
Kiruthickraj D
அறிவியல்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
டிஷ், செட்-டாப் பாக்ஸ தூக்கிப்போடுங்க... வெறும் ரூ.199-க்கு 500+ லைவ் டிவி சேனல்கள்; டாடா ப்ளேயின் புதிய ஆப் அறிமுகம்!
Recommended image2
6.3 இன்ச் OLED ஸ்கிரீன், 9GB ரேம்: மார்ச் மாதம் களமிறங்கும் ஐபோன் 18 & 18e; ஆப்பிள் ரசிகர்களுக்கு டபுள் சர்ப்ரைஸ்!
Recommended image3
இரவிலும் பூமிக்கு சூரிய ஒளியா? 'ஸ்கைரூட்' நிறுவனத்துடன் கைகோர்க்கும் அமெரிக்க ஸ்டார்ட்அப்!
Related Stories
Recommended image1
இரவிலும் பூமிக்கு சூரிய ஒளியா? 'ஸ்கைரூட்' நிறுவனத்துடன் கைகோர்க்கும் அமெரிக்க ஸ்டார்ட்அப்!
Recommended image2
நொடிக்கு 100 டிரில்லியன் துகள்கள் நம் உடலைக் கடக்கிறதா? 26 ஆண்டுகள் கழித்து கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னணி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved