போதை பழக்கத்திற்கு நீங்கள் அடிமையாக கூடாது.. மாணவர்களுக்கு அறிவுரை சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்.!!
திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாட்டில் மிகப்பெரிய மறுமலர்ச்சி நடந்துவருகிறது. இந்தியாவில் அனைத்திலும் நம்பர் ஒன் தமிழ்நாடு என்று பேசும் அளவுக்கு வளர்ந்துவருகிறது என்று கூறியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை பெருநகர காவல்துறை சார்பில் நடந்த மாணவர்களை நல்வழிப்படுத்தும் சிற்பி திட்ட நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், காலை சிற்றுண்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறோம். இந்த வரிசையில்தான் மாணவர்களை நல்வழிப்படுத்தும் சிற்பி என்ற திட்டத்தை கொண்டுவந்தோம்.
மாணவர்களை கண்டவுடன் எனது பள்ளிப் பருவ காலம் என் நினைவுக்கு வருகிறது. சமத்துவ இந்தியாவை பேணி காக்கும் பொறுப்பு மாணவர்கள் கையில் உள்ளது. சிறுவர்களை இளம் வயதிலேயே சமூக பொறுப்புடன் நல்வழிப்படுத்த சிற்பி திட்டம் பயன்படுகிறது. திராவிட மாடல் அரசு கல்வித்துறையில் மகத்தான சாதனையை செய்து வருகிறது.
திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாட்டில் மிகப்பெரிய மறுமலர்ச்சி நடந்துவருகிறது. இந்தியாவில் அனைத்திலும் நம்பர் ஒன் தமிழ்நாடு என்று பேசும் அளவுக்கு வளர்ந்துவருகிறது. அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதலிடம் நோக்கி முன்னேறி வருகிறது.
அலெர்ட்..! குடையை மறக்காதீங்க.! இன்று முதல் 4 நாட்களுக்கு மழை - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
IAS, IPS பணிகளுக்கு வழங்கும் பயிற்சியை மாணவர்களுக்கும் வழங்கியுள்ளோம். சிறார் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பு கவனம் செலுத்திவருகிறது. தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. பள்ளி படிப்புடன் நிறுத்தாமல் அனைவரும் கல்லூரி சென்று படிக்க வேண்டும்.
கல்வி மட்டும்தான் உங்களிடம் இருந்து பிரிக்க முடியாத சொத்து. சமத்துவ இந்தியாவை பேணி காக்க வேண்டிய பொறுப்பு, நாட்டின் எதிர்காலமான மாணவர்களாகிய உங்கள் கையில்தான் உள்ளது. எல்லாருக்குமான இந்தியாவை உருவாக்க நினைத்த முன்னாள் பிரதமர் நேரு பெயரில் உள்ள அரங்கில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் திராவிட மாடல் ஆட்சியின் மகத்தான திட்டம்.
வயிற்று பசியை போக்கிவிட்டால் அறிவுப்பசியை தீர்த்துக் கொள்ளலாம். அதனை மனதில் வைத்தே காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டது. மாணவர்கள் படிப்பில் முதலிடத்தை பிடிப்பதுபோல் ஒழுக்கத்திலும் முதலிடத்தை பிடிக்க வேண்டும். எந்த விதமான போதை பழக்கத்திற்கும் நீங்கள் அடிமையாக கூடாது. உங்கள் நண்பர்களையும் அடிமையாக விடக்கூடாது என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறினார்.
மக்களே உஷார்.! இந்த வழியாக இயக்கப்படும் ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு