அலெர்ட்..! குடையை மறக்காதீங்க.! இன்று முதல் 4 நாட்களுக்கு மழை - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வெயில் வாட்டி வதைத்த நிலையில், பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது என்றே சொல்லலாம். இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாளை முதல் 28.06.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
WhatsApp-ன் 5 சீக்ரெட் அம்சங்கள் உங்களுக்கு தெரியுமா.? தெரிஞ்சா அசந்துடுவீங்க
சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உங்க ஸ்மார்ட்போன் ஸ்லோவா இருக்கா.! இதை ட்ரை பண்ணி பாருங்க.!!