MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இரண்டு பெண் குழந்தைகள் இருக்கா! உங்களுக்கு ரூ.50,000 கிடைப்பது கன்ஃபாம்! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!

இரண்டு பெண் குழந்தைகள் இருக்கா! உங்களுக்கு ரூ.50,000 கிடைப்பது கன்ஃபாம்! தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!

Girl Child Protection Scheme: இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வுத்தொகை வேண்டி விண்ணப்பம் அளிக்காதவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 10 2026, 04:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
தமிழக அரசு
Image Credit : Asianet News

தமிழக அரசு

தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெண் குழந்தைகளின் நலனை மேம்படுத்தவும், பாலினப் பாகுபாட்டைத் தடுக்கவும், கல்வி மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கவும் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கவும், இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்ப கட்டுப்பாட்டை பின்பற்ற ஊக்குவித்தலுக்காகவும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

26
இரண்டு பெண் குழந்தைகள் திட்டம்
Image Credit : Asianet News

இரண்டு பெண் குழந்தைகள் திட்டம்

இந்த திட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்தில், ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் தலா ரூ.25,000 நிலையான வைப்புத்தொகையாக தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும். 18 வயது நிறைவடையும் போது, வைப்புத்தொகை மற்றும் வட்டியுடன் முதிர்வுத் தொகை (சுமார் ரூ.1,50,000 வரை) பெண் குழந்தைக்கு வழங்கப்படும். குறிப்பாக அந்த பெண் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இடம்பெற பல்வேறு தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
குஷியில் துள்ளிக்குதிக்கும் பெண்கள்... கம்மியான வட்டியில் 3 லட்சம் ரூபாய் கடன்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Related image2
கொளுத்து வெயில்..! குடிமகன்களுக்கு குஷியான அறிவிப்பு.! டாஸ்மாக்கில் அலைமோதும் கூட்டம்..!
36
உதவித்தொகை பெற தேவையான தகுதிகள்
Image Credit : our own

உதவித்தொகை பெற தேவையான தகுதிகள்

குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும், ஆண் குழந்தை இருக்கக் கூடாது, பெற்றோரில் ஒருவர் (பொதுவாக தாய்) 35 வயதுக்குள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000க்கு மேல் இருக்கக் கூடாது. இரண்டாவது பெண் குழந்தை பிறந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பெண் குழந்தைகள் 01.08.2011 அல்லது அதற்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும்.

46
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
Image Credit : UIDAI

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

பெண் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்று, கருத்தடை அறுவை சிகிச்சை சான்று, ஆண் குழந்தை இல்லை என்பதற்கு வட்டாட்சியர் உறுதிச் சான்று. இருப்பிடச் சான்று, குடும்பப் புகைப்படம் முக்கியம்.

விண்ணப்ப முறை

விண்ணப்பப் படிவத்தை மாவட்ட சமூக நல அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் (BDO), ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி அல்லது மாநகராட்சி அலுவலகங்களில் பெறலாம். தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

56
இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்தில் முதிர்வு தொகை
Image Credit : Google

இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்தில் முதிர்வு தொகை

இந்நிலையில் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் முதிர்வுத்தொகை வேண்டி விண்ணப்பம் அளிக்காதவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதிர்வுத் தொகை பெற்று வழங்கிட விரிவாக்க அலுவலர் மற்றும் நகர் நல அலுவலர்கள் மூலம் பயனாளிகளை கண்டறிந்து ஆவணங்களை பெற்று ஆணையரகம் மூலம் தொகை பெற்று வழங்கப்பட்டு வருகிறது. கண்டறிய இயலாத பயனாளிகள் விவரம் சென்னை மாவட்ட வலைத்தளத்தில் (http://chennai.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

66
முதிர்வு தொகை பெறுவது எப்படி.?
Image Credit : Asianet News

முதிர்வு தொகை பெறுவது எப்படி.?

மேலும் வைப்புத்தொகை பத்திரம் பெற்று 22 வயது மற்றும் அதற்கு மேல் பூர்த்தி அடைந்தும் முதிர்வுத்தொகை வேண்டி விண்ணப்பம் அளிக்காதவர்கள் தங்களின் வைப்புத்தொகை பத்திரம். வங்கி கணக்கு விவரம் (தனி கணக்கு). 10ம் வகுப்பு மதிப்பெண் சான்று ஆகிய ஆவணங்களுடன் சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்திலுள்ள விரிவாக்க அலுவலர் மற்றும் நகர் நல அலுவலர்களிடம் விண்ணப்பம் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு
விண்ணப்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
வரலாறு காணாத Gas சிலிண்டர் விலை உயர்வால் இந்திய மக்கள் அதிர்ச்சி - செல்வப் பெருந்தகை பேட்டி
Recommended image2
இவர்களுக்கெல்லாம் சீட் இல்லை..! அதிமுகவில் எடப்பாடியின் ருத்ரதாண்டவம்..! கதிகலங்கும் சீனியர்கள்..!
Recommended image3
வாட்டி வதைக்கும் வெயில்.! குளிர்வித்த திடீர் மழை.! எந்தெந்த பகுதிகளில்.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்!
Related Stories
Recommended image1
குஷியில் துள்ளிக்குதிக்கும் பெண்கள்... கம்மியான வட்டியில் 3 லட்சம் ரூபாய் கடன்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Recommended image2
கொளுத்து வெயில்..! குடிமகன்களுக்கு குஷியான அறிவிப்பு.! டாஸ்மாக்கில் அலைமோதும் கூட்டம்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved