அதிகாலையில் 33 வயது ஆன்ட்டியும் 17 வயது சிறுவனும்! அதிர்ந்து போன ஊர் பொதுமக்கள்!
Dindigul Women Arrest: திண்டுக்கல் மாவட்டத்தில் 87 வயது மூதாட்டி டீக்கடைக்காரரிடம் மிளகாய் பொடி தூவி 3 சவரன் நகை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் மற்றும் பெண் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிளகாய் பொடி
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள பாகாநத்தத்தில் தனியாக கூரைக் கொட்டகையில் டீக்கடை நடத்தி வருபவர் அய்யம்மாள் (87). வழக்கம் போல நேற்று முன்தினம் அதிகாலை கடையை திறந்துள்ளார். அப்போது ஒரு பெண் மற்றும் சிறுவன் உள்பட 2 பேர் கடைக்கு வந்துள்ளனர். பேச்சு கொடுத்த சிறிது நேரத்தில் அந்த பெண்ணும், சிறுவனும் சேர்ந்து அய்யம்மாளின் கண்களில் மிளகாய் பொடியை தூவியுள்ளனர்.
காவல் நிலையத்தில் புகார்
இதனால் கண் எரிச்சல் தாங்க முடியாமல் அய்யம்மாள் அலறிய படி அப்படியே கீழே சரிந்து விழுந்தார். இதனையடுத்து அந்த மூதாட்டியின் கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்தனர். அவரது அலறல் சத்தத்தை கேட்டு என்ன ஆச்சோ ஏது ஆச்சோ என்று பதறி அடுத்துக்கொண்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் அய்யம்மாளுக்கு தண்ணீர் கொடுத்து முகத்தை கழுவிய பிறகு எரியோடு காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி புகார் அளித்தார்.
ராஜேஸ்வரி
இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் மேற்கொள்ளப்பட்டது. மேலும், சம்பவம் நடந்தபோது அந்த வழியாக வந்தவர்கள் யார், யார் என்று போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது ஒரு சிறுவனும், ஒரு பெண்ணும் அப்பகுதியில் நடமாடியது தெரியவந்தது. இதையடுத்து 12-ம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுவனை பிடித்த போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி (33) என்பவர் அய்யம்மாளிடம் இருந்து சங்கிலியை பறித்து சென்றதும், அவர் கரூருக்கு சென்று தலைமறைவாகி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் ராஜேஸ்வரியை பிடித்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
சிறையில் அடைப்பு
பின்னர் ராஜேஸ்வரி மற்றும் திருட்டுக்கு உடந்தையாக இருந்த 12ம் வகுப்பு மாணவன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து 2 பேரும் வேடச்சந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து வேடசந்தூர் நீதிபதி உத்தரவின்பேரில், ராஜேஸ்வரி நிலக்கோட்டை மகளிர் சிறையிலும், சிறுவன் திண்டுக்கல் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர். மூதாட்டியிடம் சிறுவன் மற்றும் பெண் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.