MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 இருக்கா? இல்லையா? உண்மையை போட்டு உடைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு!

பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 இருக்கா? இல்லையா? உண்மையை போட்டு உடைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு!

Pongal Gift 2025: பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 இருக்கா இல்லையா என்ற தகவலை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

1 Min read
Author : vinoth kumar
| Updated : Dec 29 2024, 08:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pongal Gift 2025

Pongal Gift 2025

ஒவ்வொரு ஆண்டு பொங்கல் பண்டிகையின் போதும் பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1000 ரொக்கம் வழங்கப்பட்டு வந்தது. அதன்படி இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. 

25
Tamilnadu Government

Tamilnadu Government

அதில்,  2025-ம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்த ரூ.1000 இடம் பெறவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு தொகை ரூ.1000 கிடைக்குமா? கிடைக்காதா? வெளியான தகவல்!

35
CM Stalin

CM Stalin

அப்படி இருந்த போதிலும் பொங்கலுக்கு இரண்டு வாரங்கள் இருப்பதால் ரூ.1000 தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த பொதுமக்களின் தலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு இடியை இறக்கியுள்ளார். 

45
Pongal Gift

Pongal Gift

இந்நிலையில் பொங்கல் தொகுப்பில் ரூ.1000 தரப்படாததன் காரணம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். அதில், கடந்த ஆண்டு புயல், மழையால் ஏற்பட்ட பேரிடர்களுக்கு ரூ.2,028 கோடி செலவிட்டுள்ளோம். பேரிடர்களுக்காக மாநில நிதியில் இருந்து செலவிட்டிருக்கிறோம். பேரிடர் நிவாரண நிதியாக ரூ.37,000 கோடி கேட்டதற்கு ரூ.276 கோடி மட்டுமே மத்திய அரசு தந்தது. மத்திய அரசிடம் அதிகம் கேட்டாலும் சொற்பமாகத்தான் கிடைத்தது. நிதிச்சுமையை தமிழக அரசு ஏற்றது.

இதையும் படிங்க: மீண்டும் தமிழகத்தில் ஏழரையை கூட்டப்போகுதா மழை? வானிலை மையம் கூறுவது என்ன? பரபரப்பு தகவல்!

55
Minister Thangam Thennarasu

Minister Thangam Thennarasu

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க ரூ.280 கோடி செலவாகியுள்ளது. நல்ல சூழல் விரைவில் உருவாகும். மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000-ஐ பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வழங்குவது குறித்து பரிசீலிக்கிறோம் என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
சென்னையில் அதிர்ச்சி! பிசினஸ்மேன் மனைவியை கரெக்ட் செய்த திலிப்.. நினைக்குப்போதெல்லாம்! வெளியான அதிர்ச்சி தகவல்!
Recommended image2
தகைசால் தமிழர் தோழர் நல்லக்கண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை..! முதல்வர் அறிவிப்பு
Recommended image3
பள்ளி மாணவர்கள்.. அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மார்ச் 4, 10ம் தேதி விடுமுறை..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved