நம்பர் 1 டிரெண்டிங்கில் 'தக்காளி வெற்றி கழகம்' பஸ்! யார் பாத்த வேலைடா இது?
சென்னையில் இயக்கப்படும் மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்றின் வழித்தடப் பலகையில், வழக்கமான ஊர்களின் பெயர்களுக்குப் பதிலாக 'தக்காளி வெற்றி கழகம்' என்று குறிப்பிடப்பட்டிருந்த சம்பவம் பயணிகளிடையே ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய மாற்றம்
சென்னையில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளைப் பயன்படுத்தி வருகின்றனர். எந்தப் பேருந்து எந்த வழித்தடத்தில் செல்கிறது என்பதைப் பயணிகள் எளிதில் அடையாளம் காணும் வகையில், பேருந்தின் முன்னேயும் பக்கவாட்டிலும் வழித்தடப் பலகைகள் (Route Boards) பொருத்தப்பட்டிருக்கும். இந்நிலையில், சென்னையில் இயக்கப்பட்ட ஒரு மாநகரப் பேருந்தின் வழிகாட்டிப் பலகையில் வழக்கமான வழித்தடப் பெயருக்கு மாற்றாகப் புதியதாக 'தக்காளி வெற்றி கழகம்' என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
இதையும் படிங்க : USA Salary : அமெரிக்காவில் பாத்ரூம் கழுவினாலே கோடீஸ்வரர் ஆகிடலாமா? அட்ரா சக்கை!
சமூக வலைத்தளங்களில் வைரல்
இந்தக் காட்சியைப் பார்த்த பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையான அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தனர். சிலர் உடனடியாக இதைப் புகைப்படம் எடுத்தும், வீடியோவாகப் பதிவு செய்தும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர். இந்த விசித்திரமான மற்றும் நகைச்சுவையான சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Courtesy : Puthiyathalaimurai Instagram Page
இதையும் படிங்க : Rice Water : அரிசி கழுவிய நீரை வீணாக கொட்டுறீங்களா? இதுக்கு எவ்வளவு பயன்பாடுகள் இருக்குனு தெரியுமா?
அதிகாரிகள் தரப்பில் விசாரணை
வழக்கமாகப் பேருந்துகளில் ஊர் பெயர்கள் இடம்பெறும் நிலையில், இதுபோன்று வித்தியாசமான வாசகம் இடம்பெற்றது பயணிகளிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது. மேலும், இது மின்னணு பலகையின் தொழில்நுட்பக் கோளாறா அல்லது யாராவது வேண்டுமென்றே செய்த குறும்பு செயலா என்பது குறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தரப்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : OYO Rules : கல்யாணம் ஆகாத ஜோடி OYO ரூமில் தங்குவது குற்றமா? சட்டம் என்ன சொல்கிறது?

