நம்பி தமிழகம் வந்த அமித்ஷா.! ஏமாற்றிய இபிஎஸ், ராமதாஸ்- நடந்தது என்ன.?
தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த அமித்ஷா சென்னை வந்தார். அதிமுக, பாமக தலைவர்கள் பங்கேற்காததால் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் பாஜக கூட்டமாக மாறியது.

ADMK PMK BJP alliance : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான நாட்கள் வெகு வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்னும் 365 நாட்களுக்குள் தேர்தலை நடத்தப்படவுள்ளது. இதன் காரணமாக கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டுள்ளது. இதில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் திமுக கூட்டணியானது வெற்றி கூட்டணியாக உள்ளது.
எனவே இந்த கூட்டணியானது வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என கூறப்படுகிறது. எனவே அதிமுக தங்கள் அணியை வலுப்படுத்தும் வகையில் கூட்டணிக்காக பல்வேறு கட்சிகளுக்கு தூது விட்டது.
அதிமுகவின் கூட்டணி தூது
ஆனால் விஜய்யின் தவெக கூட்டணிக்கு உடன்படாத காரணத்தால் பாஜக பக்கம் காய் நகர்த்தியது. இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கவும், ஆலோசிக்கவும், மத்திய அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக சென்னை வந்தார். அவரை பாஜக தலைவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
அந்த வகையில் இன்று காலை நட்சத்திர விடுதியில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களோடு செய்தியாளர்களை அமித்ஷா சந்திக்க திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. இதன் படி மேடையில் 6 முக்கிய தலைவர்கள் அமருவதற்கான நாற்காழியும் அமைக்கப்பட்டது. மேலும் மேடைக்கு பின்பக்கம் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற தலைப்பில் விளம்பரம் இடம்பிடித்திருந்தது.
என்டிஏ டூ பாஜக
எனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, பிரேமலதா, ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் பங்கேற்பார்கள் என கூறப்பட்டது. ஆனால் சில மணி நேரத்திற்கு பிறகு அந்த பேர் மாற்றப்பட்டு தமிழக பாரதிய ஜனதா என விளம்பரம் இடம்பெற்றது.
எனவே இன்றைய அமித்ஷாவின் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக தலைவர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மிகப்பெரிய கூட்டணி தொடர்பாக அறிவிப்பு வெளியிட சென்னை வந்த அமித்ஷாவிற்கு ஏமாற்றம் ஏற்பட்டதாகவும் தகவல் கூறப்படுகிறது.
இபிஎஸ், ராமதாஸ் புறக்கணித்தார்களா.?
இதன் படி ஒருங்கிணைந்த அதிமுக மட்டுமே வெற்றிக்கு வாய்ப்பு என எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஆனால் இதனை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துவிட்டார். எனவே இன்றைய கூட்டத்தில் இபிஎஸ் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதே போல பாஜக தலைவராக இருந்த அன்புமணி பாஜக கூட்டணியில் இடம்பெற முடிவெடுத்திருந்தார்.
ஆனால் பாஜக கூட்டணிக்கு ராமதாஸ் ஒத்துக்கொள்ளவில்லை. இதனாலேயே தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே இன்றைய கூட்டத்தில் இரண்டு கட்சிகளும் பங்கேற்காத காரணத்தால் தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு பாஜக கூட்டமாக மாறியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.