- Home
- Tamil Nadu News
- அன்புமணி போட்ட ஒரே போடு! பதறிய ஆவின் நிர்வாகம்! இதற்காக தான் பால் விலையை உயர்த்தியதாக விளக்கம்!
அன்புமணி போட்ட ஒரே போடு! பதறிய ஆவின் நிர்வாகம்! இதற்காக தான் பால் விலையை உயர்த்தியதாக விளக்கம்!
Aavin Green Magic Plus Milk: ஆவின் நிறுவனம் கிரீன் மேஜிக் பிளஸ் எனும் புதிய பால் பாக்கெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் புதிய பால் வைட்டமின் ஏ மற்றும் டி சத்துக்களுடன் கூடுதல் கொழுப்புச் சத்தையும் கொண்டுள்ளது. சில்லறை விற்பனையாளர்களின் செலவுகளைக் கருத்தில் கொண்டு 450 மில்லி ரூ.25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

anbumani ramadoss
ஆவின் நிறுவனம் தற்போது கிரீன் மேஜிக் பிளஸ் எனும் புதிய பச்சை நிற பால் பாக்கெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆவின் கிரீன் மேஜிக் பாலுடன் பிளஸ் என்ற வார்த்தையை கூடுதலாக சேர்ப்பதற்காக லிட்டருக்கு ரூ.11 அதிகம் வசூலிப்பது மட்டுமல்லாமல் பாலின் அளவை 50 மி.லி குறைத்திருப்பது அப்பட்டமான மோசடி அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான பாலின் விற்பனை அளவையும் குறைக்கவில்லை என ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
Aavin Milk
இதுதொடர்பாக ஆவின் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள 27 ஒன்றியங்கள் மற்றும் சென்னை மெட்ரோ மூலமாக சுகாதாரமான முறையில் தரம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு பால் மற்றும் சுமார் 200 வகையான பால் உபப்பொருட்களை தயாரித்து நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் பால் விற்பனையில் தமிழகத்தின் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது.
Aavin Green Magic plus
தமிழ்நாடு முழுவதும் கடந்த 2019-2020 ஆம் ஆண்டில் சுமார் 23 இலட்சம் லிட்டராக இருந்த ஆவின் பால் விற்பனையான நிலையில் தற்போது 2024-2025 இல் சுமார் 7 இலட்சம் லிட்டர் அதிகரித்து 30 இலட்சம் லிட்டர் அளவில் விற்பனையை அதிகரித்துள்ளது. பொதுமக்கள் விருப்பத்திற்கு ஏற்ப அவ்வப்பொழுது புது வகையான பால் மற்றும் பால் பொருட்கள் ஆராய்ந்து பொதுமக்களுக்கு ஏற்ற வகையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
Aavin Green Magic plus Price Hike
இந்நிலையில் ஆவின் பால் விற்பனை அனைத்து நகர வெளிப்புறப் பகுதிகளை விரிவாக்கம் செய்யும் வகையில் சுமார் 2 இலட்சம் லிட்டர் பால் விற்பனை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வெளிப்புற பகுதிகளில் சில்லறை விற்பனையாளர்களின் குளிர்சாதன செலவினங்களை கருத்தில் கொண்டும் மேலும் தற்பொழுது குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இடையே வைட்டமின் ஏ மற்றும் டி சத்து குறைபாடு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதால் அதற்கு ஏற்றவாறு 4.5 கொழுப்பு சத்து மற்றும் 9 % இதர சத்துக்களுடன் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட கிரீன் மேஜிக் பிளஸ் என்ற புதிய வகையான பால் சில்லறை விற்பனையாளர்களுக்கு சற்று அதிக கமிஷனுடன் சில ஒன்றியங்களில் மட்டும் குறைந்த அளவில் உற்பத்தி செய்து அதனுடைய சந்தையை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Aavin Milk News
மேலும் சில்லறை தட்டுப்பாடு காரணமாக 450 ml ரூபாய் 25 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து வகையான பாலின் விற்பனை அளவையும் குறைக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.