Adani : சென்னை வந்த அதானி.!! 5 மணி நேரம் மட்டுமே இருந்தார்: யாரை சந்தித்தார்.? என்ன பேசினார்?
பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரும் பிரபல தொழிலதிபருமான அதானி நேற்று மாலை சென்னை வந்தார். சுமார் 5 மணி நேரம் மட்டுமே சென்னையில் தங்கியிருந்தவர் இரவு 10.40 மணியளவில் தனி விமானம் மூலம் அகமதாபாத் புறப்பட்டு சென்றார். அதானி சென்னையில் யாரை சந்தித்தார். என்ன பேசினார் என்பது தொடர்பாக பலவித கேள்விகள் எழுந்துள்ளது.
அதானியின் சென்னை பயணம்
உலக கோடீஸ்வரர்களில் முதல் 10 இடங்களில் போட்டிபோடுபவர் அதானி, பிரபல தொழிலதிபரான அதானி பல நாடுகளில் தொழில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளார். வேளாண்மை, பாதுகாப்புத் துறை, துறைமுகம், பெயர்ச்சியியல், எரிசக்தி மற்றும் மின் உற்பத்தி துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதானியின் சொத்து மதிப்பு 77.8 பில்லியன் அமெரிக்க டாலர் என கூறப்படுகிறது.
CRIME : சென்னையில் 6000 ரவுடிகளுக்கு செக்.! பட்டியல் தயார்.! யார் எங்கே இருக்காங்க.? கமிஷனர் அதிரடி
யாரை சந்தித்தார் அதானி.?
ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 4ஆயிரம் கோடி அளவிற்கு தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொள்ள இருப்பதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதானி நேற்று மாலை மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். இரவு 10.40 மணியளவில் அகமதாபாத் புறப்பட்டு சென்றார். சுமார் 5 மணி நேரம் மட்டுமே சென்னையில் தங்கியவர் யாரை சந்தித்தார். என்ன பேசினார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
sabareesan
ரகசிய சந்திப்பின் நோக்கம் என்ன.?
இது தொடர்பாக கள விசாரணையில் இறங்கிய போது அதானி நேற்று மாலை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிற்கு வந்ததாகவும் அங்கு முதலமைச்சரை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. மற்றொரு தகவலோ அதானி முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கவில்லை முதலமைச்சரின் மருகன் சபரீசனை சந்தித்தார் என சொல்லப்படுகிறது. அதானியின் சந்திப்பு ரகசியமாக வைக்கப்படுகிறது. இது தொடர்பாக மேலும் பல வித தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில் கடந்த அதிமுக ஆட்சியில நிலக்கரி வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. அது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முதலமைச்சர் வீடு தேடி அதானி வந்ததாக கூறப்படுகிறது.
நிலக்கரி முறைகேடு வழக்கா.?
மற்றொரு தரப்போ அதானி தமிழகத்தில் 4ஆயிரம் கோடி முதலீட்டிற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் காட்டுப்பாக்கம் துறைமுகம் விரிவாக்கம் தொடர்பாகவும் அரசு அதிகாரிகளை சந்தித்து பேசியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே அதானி சென்னை வருகை தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறும்போது, முதலமைச்சரை சந்தித்தாரா அல்லது அவரது மருமகன் சபரீசனை சந்தித்தாரா என்பது தொடர்பான தகவல் விரைவில் வெளியே வரும்
Annamalai: ஆர்.எஸ்.பாரதியை சிறைக்கு அனுப்புவேன்; நீதிமன்றத்தில் அதிரடியாக வழக்கு தொடர்ந்த அண்ணாமலை
திமுகவின் பவர் சென்டர்
முதலமைச்சரை சந்தித்தால் அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. திமுகவின் பவர் சென்டர் மருகன் மற்றும் மகன் கையில் உள்ளது. அதானி மட்டுமில்லை யார் வந்தாலும் மருமகனை சந்திக்காமல் எதுவும் நடக்காது என்பது நேற்று நடைபெற்ற சம்பவம் ஒரு சான்று. தலைமை செயலாளர் தேவையில்லை, டிஜிபி தேவையில்லை உள்ளிட்ட யாரும் தேவையில்லை. இதைத்தான் சூப்பர் சீப் மினிஸ்டராக சபரீசன் உள்ளார் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.