MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அடுத்த 3 மணிநேரத்தில் எந்ததெந்த மாவட்டங்களில் மழை கொட்டிதீர்க்க போகுது? சென்னையின் நிலவரம் என்ன?

அடுத்த 3 மணிநேரத்தில் எந்ததெந்த மாவட்டங்களில் மழை கொட்டிதீர்க்க போகுது? சென்னையின் நிலவரம் என்ன?

பிப்ரவரி மாதமே வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Apr 06 2025, 10:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Summer Rain

Summer Rain

கோடை வெயில்

எந்த ஆண்டும் இல்லாத வகையில் பிப்ரவரி மாதம் முதலே வெயில் வாட்டி வதைத்து வந்தது. போதா குறைக்கு கோடையில் வெயிலும் தொடங்கியதால் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. குறிப்பாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் இன்று எந்தெந்த பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதை பார்ப்போம்.

இதையும் படிங்க:   தமிழகத்தில் இன்று இந்த 7 மாவட்டங்களில் ஏழரையை கூட்டப்போகுதாம் மழை! அலறவிடும் வானிலை மையம்! 

24
Tamilnadu Heavy Rain

Tamilnadu Heavy Rain

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: கோவையில் கொட்டி தீர்த்த கனமழை! இன்றும் தரமான சம்பவம் இருக்காம்! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்!

34
Chennai Rain

Chennai Rain

சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்  என வானிலை மையம் கணித்துள்ளது. 

இதையும் படிங்க:  டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 4 தேர்வர்களுக்கு குட் நியூஸ்! தமிழக அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!

44
Tamilnadu Rain News

Tamilnadu Rain News

அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு

இதனிடையே  ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் அதாவது காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மழை செய்திகள்
கனமழை
தமிழ்நாடு மழை
தமிழ்நாடு வானிலை
சென்னை வானிலை ஆய்வு மையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு.. அரசு தேர்வுத் துறைக்கு ஆசிரியர்கள் வைத்த முக்கிய கோரிக்கை!
Recommended image2
மார்ச் 4 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அட! அடுத்த மாதம் இத்தனை நாட்கள் லீவா? மாணவர்கள் குஷி!
Recommended image3
முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved