MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 4 தேர்வர்களுக்கு குட் நியூஸ்! தமிழக அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 4 தேர்வர்களுக்கு குட் நியூஸ்! தமிழக அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 & 4 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் ஏப்ரல் 9 முதல் பயிற்சி ஆரம்பம்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Apr 05 2025, 01:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Tamil Nadu Public Service Commission

Tamil Nadu Public Service Commission

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்

தனியார் துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் கொட்டி கிடந்தாலும் எப்படியாவது அரசு பணியில் சேர்ந்தவிட வேண்டும் என பல லட்சம் இளைஞர்கள் இரவு பகலாக தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கு அரசு பணி வழங்கப்படுகிறது.  

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
TNPSC

TNPSC

டிஎன்பிஎஸ்சி தேர்வு

இந்நிலையில் தனியார் பயிற்சி நிறுவனங்களில் பல ஆயிரங்கள் செலவு செய்து தேர்விற்கு படிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏழை எளிய இளைஞர்களால் தேர்வில் வெற்றி பெற முடியாத நிலையானது உருவாகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் குரூப் 1 மற்றும்  குரூப் 4 போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்படுள்ளது. 

35
TNPSC Free Coaching

TNPSC Free Coaching

இலவச பயிற்சி வகுப்பு

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும்  குரூப் 4 போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்திட அறிவுரை பெறப்பட்டுள்ளது.  

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே! எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பு வந்தாச்சு!

45
TNPSC Exam

TNPSC Exam

டிஎன்பிஎஸ்சி குரூப் 1,  குரூப் 4 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் ஏப்ரல் 01ம் தேதி  டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தொகுதியில்  அறிவிக்கப்பட்டுள்ள 70-காலிப்பணியிடங்களுக்கும், இம்மாதத்தில்  அறிவிக்கப்படவுள்ள   டிஎன்பிஎஸ்சி குரூப் 4  தேர்வுகளுக்கான  இலவச பயிற்சி  வகுப்பு ஏப்ரல் 09ம் தேதி முதல் காலை 10.30 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்  மையத்தில்  செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் துவக்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு  நடத்தப்படுவதுடன்  இலவச மாதிரி தேர்வுகள்  நடத்தப்பட  உள்ளது.

55
TNPSC News

TNPSC News

விண்ணப்பிக்க அழைப்பு

கடந்த  ஆண்டு இவ்வலுவலகம் வாயிலாக  நடைபெற்ற கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து  கொண்டு  பயிற்சி  பெற்றவர்கள்  தற்போது  பல்வேறு அரசு துறைகளில்  பணி நியமனம் பெற்றுள்ளனர்.   மேற்காணும் இப்பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 6381552624,  9626456509  என்ற கைபேசி எண்களை  தொடர்பு   கொண்டு  விவரம்  அறிந்து கொள்ளலாம். மேற்காணும்  கட்டணமில்லா  பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள  விண்ணப்பதாரர்கள் இரு பாஸ்போர்ட்  அளவு புகைப்படம், ஆதார் அடையாள அட்டை நகலுடன் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்  மையத்திற்கு அலுவலக நாட்களில்  நேரில் வருகை புரிந்து  பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு  பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தேர்வு
டி.என்.பி.எஸ்.சி.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
தமிழ்நாடு
தமிழ்நாடு அரசு
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
விண்ணைத் தொடும் விலைவாசி உயர்வு... கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது! - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Recommended image2
Now Playing
மாணவர்களின் உலக சாதனை முயற்சி மூலம் போதைப்பொருள் விழிப்புணர்வு! - அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்
Recommended image3
Now Playing
டாஸ்மாக்கில் ₹10 விலை உயர்த்தப்படவில்லை...! - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved