டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே! எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பு வந்தாச்சு!
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 70 காலிப்பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் 15ல் நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க ஏப்ரல் 30 கடைசி நாள்.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம்
டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றது. எப்படியாவது அரசு பணியில் சேர்ந்து விட என்பதால் குறைந்த காலி பணியிடங்கள் என்றாலும் எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதுகின்றனர். டிஎன்பிஎஸ்சியை பொறுத்த வரையில் குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல நிலைகளில் தேர்வு நடத்தப்படுகின்றன.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1
இந்நிலையில் வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத் துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான உயர் பதவிகளில் 70 காலிப்பணியிடங்கள் உள்ளது. அதிகபட்சமாக துணை ஆட்சியர் பணியிடத்துக்கு 28, துணை காவல் கண்காணிப்பாளர் 7, உதவி ஆணையர் 19, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் 7, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் 3, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் 6 உள்ளிட்ட காலியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: அதிகாலையிலேயே பொதுமக்களுக்கு குட்நியூஸ்! சிலிண்டர் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1ஏ தேர்வு
இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணை இன்று வெளியாகியுள்ளது. அதன்படி இன்று முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் மூலமாக விண்ணப்பிக்கலாம். தங்களின் விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் மே 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
முதன்மை தேர்வு
முதல்நிலை தேர்வு வருகிற ஜூன் 15ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது. முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றுபவர்களுக்கான முதன்மை தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னை, கோவையில் இன்று வானிலை எப்படி இருக்கும்? முக்கிய அப்டேட் இதோ!
குரூப் 1ஏ தேர்வு
அதேபோல் குரூப் 1ஏ தேர்வு 2 பணியிடங்களுக்காக நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கும் இன்று முதல் ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான முதல்நிலைத் தேர்வும் ஜூன் 15ம் தேதி நடைபெற உள்ளது.