Pongal Gift: ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 எப்போது கிடைக்கும்? வெளியான தகவல்!
Pongal Gift for Ration Card Holders: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கம் வழங்கப்படும். அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
Pongal Festivel
தீபாவளி பண்டிகை முடிவடைந்து பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துகிடக்கின்றனர். என்னென்றால் இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.
முதல் காரணம் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு ஊர்களில் இருக்கும் சொந்த பந்தங்களுடன் சொந்த ஊருக்கு வந்து ஆட்டம் பாட்டத்துடன் வெகு விமர்சியாக கொண்டாடி மகிழ்வது வழக்கம்.
Jallikattu
அதுமட்டுமல்லாமல் பொங்கல் தினத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான உலக புகழ் பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெறும். இதனை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வருகை தருவர்.
Pongal Gift
மற்றொரு காரணம் ஒவ்வொரு ஆண்டு பொங்கல் பண்டிகையின் போதும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக ரூ.1000 ரொக்கம் வழங்கப்படுவது.
Ration Card Holders
கடந்த முறை மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரேஷன் கடைகளில் ரொக்கமாக வழங்கப்பட்டது. ஆனால், இந்த முறை மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 1000 ரூபாய் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
CM Stalin
மேலும் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை பரிசு தொகுப்பு எப்போது கிடைக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 13ம் போகி பண்டிகை, 14ம் தை பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாட்கள் சனி, ஞாயிறு விடுமுறை வந்துவிடுகிறது. இதனால், பொங்கலுக்கு முன்னதாகவே அதாவது ஜனவரி 10ம் தேதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் மகளிர் உரிமைத் தொகை ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த முறை பொங்கலுக்கு முன்னதாக வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.