தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வானிலை எப்படி இருக்கும்? முக்கிய அப்டேட் இதோ!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில், அதிகாலை நேரத்தில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் பகல் நேரத்தில் வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வானிலை எப்படி இருக்கும்? வானிலை மையம் சொன்ன முக்கிய அப்டேட்!
தமிழகத்தில் ஒரு வழியாக வடகிழக்கு பருவமழை நிறைவடைந்தாலும் அதிகாலை நேரத்தில் கடுமையான பனிபொழிவு நிலவுகிறது. இதனால், அதிகாலை நேரத்தில் கார், பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்கள் முகப்பு விளக்கை ஏறியவிட்டாரே செல்கின்றனர். அதே நேரத்தில் பகல் நேரத்தில் வெயிலும் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் வெளியே செல்வதற்கே அஞ்சுகின்றனர். பிப்ரவரி மாதத்திலேயே வெயில் இப்படி என்றால் கோடை காலத்தில் எப்படி இருக்குமோ என இப்போதே பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
heatwave
இந்நிலையில் தமிழ்நாட்டில் பிப்ரவரி 21ம் தேதி வரை வெப்பநிலை 2°-3° டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அதாவது இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2°-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
heatwave
அதேபோல் 20 முதல் 22 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2°-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். 23 மற்றும் 24 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33°செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.