MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ரஜினியுடன் சேர்ந்து புதிய கட்சி தொடங்க திட்டமா.? சந்தித்தது ஏன்.? அண்ணாமலை வெளியிட்ட ரகசிய தகவல்

ரஜினியுடன் சேர்ந்து புதிய கட்சி தொடங்க திட்டமா.? சந்தித்தது ஏன்.? அண்ணாமலை வெளியிட்ட ரகசிய தகவல்

புதிய கட்சி தொடங்குவதாகவும், அதற்காக ரஜினிகாந்தை சந்தித்ததாகவும் பரவிய தகவல்களுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். ரஜினிகாந்துடனான சந்திப்பு முற்றிலும் ஆன்மீகம் மற்றும் நட்பு அடிப்படையிலானது என தெரிவித்துள்ளார். 

2 Min read
Author : Ajmal Khan
Published : Sep 23 2025, 11:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டார். புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாகவும், விரைவில் புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Image Credit : Asianet News

மேலும் பாஜக மாநில தலைவராக புதிதாக நியமிக்கப்பட்ட நயினார் நாகேந்திரன் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனும் கூட்டணியில் இருந்து வெளியேறினார்கள்.

எனவே இந்த தலைவர்களை ஒருங்கிணைத்து புதிய கட்சியை அண்ணாமலை தொடங்க இருப்பதாகவும், இதற்காக நடிகர் ரஜினி காந்தை சந்தித்து ஆலோசித்ததாகவும் தகவல் பரவியது. இந்த நிலையில் இந்த தகவலுக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

35
Image Credit : X

பாஜக நிர்வாகி ராதிகா சரத்குமாரின் தாயார் மறைவிற்கு சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு அண்ணாமலை சென்று அஞ்சலி செலுத்து ராதிகாவிற்கு ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிட்ம பேசிய அண்ணாமலை,டிடிவி தினகரனை சந்தித்து பேசியதாகவும், கூட்டணியில் இடம்பெற அழைப்பு விடுத்தாகவும் தெரிவித்தார். 

அப்போது அவரது கருத்தை தினகரன் கூறியதாகவும் கூறினார். ரஜினியோடு சந்திப்பு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ரஜினி சாரை அடிக்கடி சந்திப்பேன். மாதத்திற்கு ஒருமுறை, இரண்டு முறை சந்திப்பேன். அதை நான் சமூக வலை தளத்தில் சூப்பர் ஸ்டாரை பார்த்தேன் என பதியவில்லை.

45
Image Credit : Asianet News

சூப்பர் ஸ்டார் என் தலைவர், அவரை சினிமா நடிகராக பார்க்கவில்லை. ஆத்மார்த்தமான நட்பு இருக்கக்கூடிய, ஆன்மிகத்தில் அடிப்படையில் முதலில் இருந்து பழக்கம் உள்ளது. ஆமாம் சமீபத்தில் கூட சந்தித்தேன். அடிக்கடி சந்திப்பது தான். அதனாலே இன்றைக்கு பார்த்தார்கள். 

இப்படி பார்த்தார்கள் என சூப்பர் ஸ்டார் அடிக்கடி சந்திப்பது வழக்கம். ஆன்மிக அதிகமான விஷயம் சொல்லுவார். யோகா போக செல்லுவார . தலைவராக அறிவுரை கூறுவார். குருவாக பார்க்கிறேன். அவரை தயவு செய்து அரசியல் களத்தில் இழுத்து வந்து அவரை பார்த்தார் என கூற வேண்டாம்.

55
Image Credit : X/Annamalai

அதை செய்தாலும் வெளிப்படையாக செய்பவன், என் பாஜக தலைவர்களிடம் பேசி வருகிறேன் கருத்துகளை வெளிப்படையாக எனது கருத்துகளை பேசிவருகிறேன். யாரையும் ஒளிந்து கொண்டு மறைந்து கொண்டு பார்க்க வேண்டிய தேவையில்லை.

 தனிப்பட்ட முறையில் பார்ப்பதை நான் வெளிப்படுத்துவதில்லை. ரஜியை சந்திப்பது ஏன் வெளிப்படுத்த வேண்டும். அடிக்கடி சந்திப்பது நட்பு அரசியல் கிடையாது. எனவே இதையும் அதையும் முடிச்சு போட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
அண்ணாமலை பாஜக
பிஜேபி
அரசியல்
அதிமுக பாஜக கூட்டணி
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cyclone Murasu: முன்கூட்டியே கரையை கடக்கிறதா முரசு புயல்? எங்கே, எப்போது, எவ்வளவு வேகம்? முழு விவரம்
Recommended image2
SCHOOL, COLLEGE HOLIDAY: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! அடுத்தடுத்து மழை கொட்டப்போகும் மாவட்டங்கள் எவை?
Recommended image3
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Related Stories
Recommended image1
பூண்டிக்கு பதிலடி கொடுக்கும் தவெக..! தீயா வேலை செய்யும் விஜயின் ஐடி விங்
Recommended image2
Madhampatty Rangaraj: என் குழந்தையோட சாபம் உங்களை சும்மா விடாது.. ஆதங்கத்தில் குமுறிய கிரிஸில்டா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved