தக்காளி விலை மீண்டும் குறைந்ததா.? இஞ்சி விலை அதிகரித்ததா.? கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை என்ன.?
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களாக காய்கறி விலையானது சற்று விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
காய்கறிகள் விலை என்ன.?
சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் சென்னை கோயம்பேடு மொத்த சந்தையில் இருந்து சென்னையின் பல்வேறு இடங்களுக்கு சில்லரை விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் காய்கறிகளின் வரத்தை பொறுத்து விலையானது, ஏறி இறங்கி வருகிறது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய காய்கறி விலையை பொறுத்தவரை, பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கத்திரி விலை என்ன.?
பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், சுரக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. இதே போல அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 8 ரூபாய், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய், கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முருங்கைக்காயை பொருத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 20 ரூபாய், பெரிய கத்தரிக்காய் 50 ரூபாய், பச்சை கத்தரிக்காய் 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
உச்சத்தில் இஞ்சி விலை
இஞ்சியின் விலையானது கடந்த சில வாரங்களாகவே உச்சத்தில் இருந்து வருகிறது. ஒரு மாதத்திற்கு முன்னதாக ஒரு கிலோ இஞ்சி 60 முதல் 50 ரூபாய்க்கு என்ற நிலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது ஒரு கிலோ இஞ்சி 200 ரூபாய் முதல் 240 வரை விற்பனை ஆகிறது. மேலும் தரம் குறைந்த இஞ்சியானது 150 முதல் 170 என்ற விலைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சரிவை நோக்கி செல்லும் தக்காளி விலை
கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்த தக்காளியின் விலையானது கடந்த சில நாட்களாக கடும் வீழ்ச்சியை .நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளியானது 10 ரூபாய் என்ற அளவில் மொத்த சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதே போல இன்றைய தக்காளி நிலவரத்தை பார்க்கும் பொழுது ஒரு கிலோ தக்காளி ஆனது 15 முதல் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை வர்த்தகத்தில் 30 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி ஆனது விற்பனையாகிறது.
இதையும் படியுங்கள்