MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • டெமு Vs மெமு ரயில்களுக்கு இடையிலான வேறுபாடு என்ன? என்னென்ன ஃபெசிலிட்டி.. ஸ்பீடு எவ்வளவு?

டெமு Vs மெமு ரயில்களுக்கு இடையிலான வேறுபாடு என்ன? என்னென்ன ஃபெசிலிட்டி.. ஸ்பீடு எவ்வளவு?

Train: டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் (DEMU) மற்றும் மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் (MEMU) ரயில்களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன என்பதை விரிவாக பார்ப்போம். 

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 26 2026, 07:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரயில் போக்குவரத்து
Image Credit : Google

ரயில் போக்குவரத்து

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் போக்குவரத்து துறையில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்வே துறை. குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பேருந்தை விட ரயில் பயணத்தை பொதுமக்கள் அதிக அளவில் விரும்புகின்றனர். இந்தியாவில் எக்ஸ்பிரஸ், வந்தே பாரத், ராஜதானி, சதாப்தி, விஸ்டாடோம், மகாராஜா, டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் (DEMU), மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் (DEMU)என பல ரயில்கள் உள்ளன. இந்த ரயில்கள் அனைத்திற்கும் ஒவ்வொரு தனித்துவம் மற்றும் சிறப்புகளை கொண்டுள்ளது.

25
டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் Vs மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்
Image Credit : Asianet News

டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் Vs மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்

இந்நிலையில் டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் (DEMU) மற்றும் மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் (MEMU) ரயில்களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன என்பதை விரிவாக பார்ப்போம். இந்த ரயில்கள் பெங்களூரு, சென்னை, டெல்லி உள்ளிட்ட பெருநகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கின்றன.

Related Articles

Related image1
தி.மலை கோவில் செல்லும் பக்தர்களுக்கு குட்நியூஸ்.. சிலிண்டர் தட்டுப்பாட்டால் அதிரடி முடிவு
Related image2
தொழில் தொடங்க 1 கோடி ரூபாய் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.. யாருக்கெல்லாம்?
35
டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்(DEMU)
Image Credit : Asianet News

டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்(DEMU)

டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் என்பது DEMU ரயிலின் முழு வடிவமாகும். அதாவது டீசல் இன்ஜின் மூலம் இயங்குவது இதன் அர்த்தம். குறுகிய தூர பயணங்களுக்கு DEMU ரயில்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் டீசல் எலக்ட்ரிக் DEMU, டீசல் மெக்கானிக்கல் DEMU மற்றும் டீசல் ஹைட்ராலிக் DEMU என மூன்று வகைகள் உள்ளன. மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது, ஒவ்வொரு மூன்று பெட்டிகளுக்கும் பிறகு ஒரு பவர் கோச் இருக்கும்.

இந்த ரயில்களில் ஸ்லீப்பர் கோச், ஃபர்ஸ்ட் ஏசி, எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் வசதிகள் உள்ளன. 120 கிமீ வேகத்தில் செல்லும் திறன் இருந்தாலும் மெதுவாகவே இயக்கப்படுகின்றன. மின்மயமாக்கப்படாத பாதைகளில் இந்த DEMU ரயில்கள் அதிகம் இயக்கப்படுகின்றன. அக்டோபர் 23, 1994ம் ஆண்டு ஜலந்தர் மற்றும் ஹோசியார்பூர் இடையே முதல் DEMU ரயில் இயக்கப்பட்டது. கிராமப்புற அல்லது புறநகர் பகுதிகளை இணைக்கின்றன.

45
மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்(MEMU)
Image Credit : Google

மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்(MEMU)

மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் என்பது MEMU ரயிலின் முழு வடிவமாகும். மின்சாரத்தை கொண்டு குறைந்த மற்றும் நடுத்தர தூரம் பயணம் செய்யும் ரயிலாகும். ஒவ்வொரு 4 பெட்டிகளுக்கும் இடையே பிறகு ஒரு பவர் கார் பொருத்தப்பட்டிருக்கும். மணிக்கு அதிகபட்சம் 160 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது, 200 கி.மீ.க்கும் அதிகமான தூர பயணங்களுக்கு MEMU ரயில்கள் பயன்படுத்தப்படுகின்றன.

உயர் தொழில்நுட்பத்தைக் கொண்டது, 25 கிலோவாட் ஏசி ஓவர்ஹெட் லைன் மூலம் MEMU ரயில்கள் இயக்கப்படுகின்றன. MEMU ரயில்களில் ஸ்லீப்பர், ஏசி, ஃபர்ஸ்ட் கிளாஸ், செகண்ட் ஏசி, நாற்காலி என பல வசதிகள் உள்ளன. 1995ம் ஆண்டில் முதல் முறையாக MEMU ரயில்கள் தங்கள் சேவையைத் தொடங்கியது.

55
எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்
Image Credit : Asianet News

எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்

எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட் என்பது இதன் முழு வடிவமாகும் EMU. இது MEMU ரயிலைப் போன்றது. நகர்ப்புற பகுதிகளான மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் சென்னையில் இந்த ரயில்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. லோக்கல் டிரெயின் (புறநகர் மின்சார ரயில்) மும்பை நகரத்தின் உயிர்நாடி என்று அழைக்கப்படுகிறது. மும்பையில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல மக்கள் அதிகளவில் லோக்கல் டிரெயின்களைப் பயன்படுத்துகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ரயில்
தென்னக இரயில்வே
சென்னை
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
எடப்பாடி பழனிசாமி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம்.. பிரசாரத்தை தொடங்கினார்.
Recommended image2
Now Playing
அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்த இபிஎஸ்.. ஓபிஎஸ் அட்டாக்!
Recommended image3
கே.என். நேரு வழக்கில் ஊமையாக இருப்பது ஏன்..? - லஞ்ச ஒழிப்புத் துறையின் முகமூடியைக் கிழித்த நீதிமன்றம்..!
Related Stories
Recommended image1
தி.மலை கோவில் செல்லும் பக்தர்களுக்கு குட்நியூஸ்.. சிலிண்டர் தட்டுப்பாட்டால் அதிரடி முடிவு
Recommended image2
தொழில் தொடங்க 1 கோடி ரூபாய் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.. யாருக்கெல்லாம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved