MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தொழில் தொடங்க 1 கோடி ரூபாய் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.. யாருக்கெல்லாம்?

தொழில் தொடங்க 1 கோடி ரூபாய் மானியம்.. அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.. யாருக்கெல்லாம்?

Tamil Nadu Government: மானியம் மொத்த திட்டத் தொகையில் 35% ஆகும். மானிய உச்சவரம்பு ரூ.1.5 கோடி. இதுவன்றி, கடன் திரும்பச் செலுத்தும் காலம் முழுதும் 6% வட்டி மானியமும் வழங்கப்படும். 

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 25 2026, 12:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்
Image Credit : Asianet News

ம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் (Annal Ambedkar Business Champions Scheme - AABCS) என்பது தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின (SC/ST) சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களைத் தொழில் முனைவோராக மாற்றுவதற்காகத் தமிழக அரசால் தொடங்கப்பட்ட ஒரு சிறப்புத் திட்டமாகும்.

25
ஒரு கோடி வரை அரசு மானியம்
Image Credit : our own

ஒரு கோடி வரை அரசு மானியம்

இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், SC/ST சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் வேலை தேடுபவர்களாக மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கு வேலை அளிக்கும் 'தொழில் முனைவோராக' உயர வேண்டும் என்பதாகும். பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்குத் தேவையான நிதி மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதே இதன் இலக்கு. இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில்களுக்குத் திட்ட மதிப்பீட்டில் 35% அல்லது அதிகபட்சமாக ஒரு கோடி வரை அரசு மானியம் வழங்குகிறது.

Related Articles

Related image1
கவுன்ட்டவுன் ஸ்டார்ட்.. சவுக்கு சங்கர் சரணடையலனா.. போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட ஐகோர்ட்
Related image2
பெட்டி பெட்டியாக தக்காளி! மூட்டை மூட்டையாக வெங்காயம்! பை நிறைய அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்!
35
ரைஸ் மில்
Image Credit : our own

ரைஸ் மில்

இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி, சேவை மற்றும் வணிகம் சார்ந்த தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்படும். உணவு பதப்படுத்தல், தென்னைநார் சார்ந்த தொழில்கள், ஆயத்த ஆடை தயாரித்தல், ரைஸ் மில், ஸ்பின்னிங் மில், மளிகை கடை வணிக பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, அழகு நிலையம், உடற்பயிற்சி நிலையம், வாடகை கார், ஆம்புலன்ஸ், ரைஸ் மில், ஆயில் மில் உள்ளிட்ட புதிதாக தொடங்கப்படும் தொழில்களுக்கும் மற்றும் இயங்கி கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்கும் மானியம் வழங்கப்படும்.

45
வங்கிக்கடன் மற்றும் மானியம் விவரம்
Image Credit : our own

வங்கிக்கடன் மற்றும் மானியம் விவரம்

விண்ணப்பதாரர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, சட்டப்படியாக வரையறுக்கப்பட்டதல்லாமல், வேறெந்த கல்வித்தகுதியும் தேவையில்லை. மொத்த திட்டத் தொகையில் 65% வங்கிக்கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35% அரசின் பங்காக முன்முனை மானியம் வழங்கப்படும். எனவே, பயனாளர்களுக்குத் தம் பங்காக நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது. வயது வரம்பு 18 முதல் 55 க்குள் இருக்க வேண்டும்.குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இத்திட்டத்தில் கடனுதவி பெற முடியும்.

55
விண்ணப்பிப்பது எப்படி?
Image Credit : our own

விண்ணப்பிப்பது எப்படி?

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை மற்றும் ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற தளத்தில் இணையவழியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆர்வமுள்ள தொழில் முனைவோர்க்குத் தேவையான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், விண்ணப்பித்தல் தொடர்பான உதவிகள் மாவட்டத் தொழில் மையத்தில் வழங்கப்படும். கடன் பெறுவது தொடர்பாக நிதி நிறுவனங்களுடன் இணைப்புப் பாலமாகவும் மாவட்டத் தொழில் மையம் விளங்கும்.

தகுதியும் ஆர்வமும் கொண்ட எஸ்.சி மற்றும் எஸ்.டி தொழில் முனைவோர் மற்றும் அவர்களுக்கு உரிமையான தொழில் அலகுகளுக்கு இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்தி இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்டத் தொழில் மையம், மாவட்ட ஆட்சியரகம் ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு
பெண்கள்
பெண் அதிகாரம்
கடன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
நாங்கள் திமுகவுடன் நிற்போம் ...அழுத்தமான ஆதரவு கொடுப்போம் ! கமலஹாசன் பேட்டி
Recommended image2
Now Playing
கோட்டையில் கொடியேற்றுவார் விஜய்...வெற்றிக்கொடி உயரப்பறக்கும்.! அதிரடி விசில் அடித்த செங்கோட்டையன்
Recommended image3
கவுன்ட்டவுன் ஸ்டார்ட்.. சவுக்கு சங்கர் சரணடையலனா.. போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட ஐகோர்ட்
Related Stories
Recommended image1
கவுன்ட்டவுன் ஸ்டார்ட்.. சவுக்கு சங்கர் சரணடையலனா.. போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட ஐகோர்ட்
Recommended image2
பெட்டி பெட்டியாக தக்காளி! மூட்டை மூட்டையாக வெங்காயம்! பை நிறைய அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved