MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பெட்டி பெட்டியாக தக்காளி! மூட்டை மூட்டையாக வெங்காயம்! பை நிறைய அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்!

பெட்டி பெட்டியாக தக்காளி! மூட்டை மூட்டையாக வெங்காயம்! பை நிறைய அள்ளிச்செல்லும் இல்லத்தரசிகள்!

Onion Tomato Price: பிரியாணி முதல் ரசம் அனைத்து விதமான சமையலுக்கு வெங்காயம், தக்காளிக்கு முக்கிய பங்கு உண்டு. சுவையைத் தாண்டி ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 25 2026, 08:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ருசி மட்டுமல்ல மருத்துவ குணங்கள் கொண்ட வெங்காயம், தக்காளி
Image Credit : Google

ருசி மட்டுமல்ல மருத்துவ குணங்கள் கொண்ட வெங்காயம், தக்காளி

இந்திய சமையலில் தவிர்க்க முடியாத இடத்தை வெங்காயம் மற்றும் தக்காளி பிடித்துள்ளது. பிரியாணி முதல் ரசம் அனைத்து விதமான சமையலுக்கு வெங்காயம், தக்காளிக்கு முக்கிய பங்கு உண்டு. சுவையைத் தாண்டி ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. வெங்காயத்தில் பொட்டாசியம், வைட்டமின் C மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதிலுள்ள 'குவெர்செடின்' (Quercetin) எனும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் (Cholesterol) கட்டுப்படுத்தவும் வெங்காயம் உதவுகிறது. இது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும்.கோடை காலங்களில் வெங்காயத்தைச் சாப்பிடுவது உடல் சூட்டைத் தணிக்கும். குறிப்பாகச் சின்ன வெங்காயம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

26
தக்காளியின் மருத்துவ குணங்கள்
Image Credit : our own

தக்காளியின் மருத்துவ குணங்கள்

தக்காளியில் உள்ள 'லைகோபீன்' (Lycopene) மற்றும் வைட்டமின் A ஆகியவை உடலுக்குப் பல நன்மைகளைத் தருகின்றன. தக்காளியில் வைட்டமின் A மற்றும் சி அதிகம் உள்ளதால், இது மாலைக்கண் நோய் வராமல் தடுக்கவும், கண் பார்வையை மேம்படுத்தவும் உதவுகிறது. தக்காளியை உணவில் சேர்ப்பது மற்றும் சருமத்தில் பூசுவது சூரியக் கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து, தோலை மென்மையாக மாற்றும். இதில் வைட்டமின் K மற்றும் கால்சியம் உள்ளதால் எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது.

Related Articles

Related image1
பொளந்து கட்டும் வெயில்.. மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
Related image2
Skoda Kylaq Sales: ஸ்கோடா விற்பனை செய்யும் 10 கார்களில் 7 இந்த ஒரு மாடல்தான் டாப். அப்படி என்ன ஸ்பெஷல்?
36
சென்னை கோயம்பேடு சந்தை நிலவரம்
Image Credit : our own

சென்னை கோயம்பேடு சந்தை நிலவரம்

இதில் எந்த காய்களை மக்கள் வாங்குகிறார்களோ இல்லையோ கண்டிப்பாக தக்காளி மற்றும் வெங்காயத்தை பை நிறைய மக்கள் வாங்கி செல்வார்கள். அதற்கு ஏற்றார் போல தக்காளி, வெங்காயம் விலையும் போட்டி போட்டுக்கொண்டு குறைந்து வருகிறது. ஈரான் போர் காரணமாக கேஸ் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால்காய்கறிகளின் விலை சற்று உயர்ந்துள்ளது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி, வெங்காயம் மற்றும் காய்கறிகளின் விலை என்ன என்பதை பார்ப்போம்.

46
முருங்கைக்காய் நிலவரம்
Image Credit : Asianet News

முருங்கைக்காய் நிலவரம்

பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 68 முதல் 90 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 முதல் 130 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கும், காலிஃபிளவர் ஒரு கிலோ 30 ரூபாய், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 120 முதல் 140 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 46 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

56
ஒரு கிலோ மாங்காய் எவ்வளவு?
Image Credit : google

ஒரு கிலோ மாங்காய் எவ்வளவு?

சேனைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 முதல் 45 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், மாங்காய் 55 முதல் 60 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 46 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 முதல் 66 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், நூக்கல் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கும், கோவைக்காய் ஒரு கிலோ 25 முதல் 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

66
குடைமிளகாய், பாகற்காய் விலை
Image Credit : our own

குடைமிளகாய், பாகற்காய் விலை

மேலும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 63 முதல் 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 40 முதல் 50 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 230 முதல் 290 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 56 முதல் 62 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 46 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
காய்கறி விலை
சென்னை
வெங்காயம்
தக்காளி
தக்காளி விலை
தக்காளி மற்றும் வெங்காயத்தின் இன்றைய விலை
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
தேர்தலில் மநீம போட்டியிடவில்லை; அதிரடியாக அறிவித்த கமல்ஹாசன்
Recommended image2
Now Playing
நம்பர் முடிவாயிடுச்சி.! ஈபிஎஸ் சொல்லுவார்! பொடி வைத்து பேசிய ஜி.கே.வாசன்
Recommended image3
ஒரே தொகுதியில் பலமுறை வென்ற 'டாப்' அரசியல் தலைவர்கள் யார்? யார்? முழு விவரம் இதோ!
Related Stories
Recommended image1
பொளந்து கட்டும் வெயில்.. மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
Recommended image2
Skoda Kylaq Sales: ஸ்கோடா விற்பனை செய்யும் 10 கார்களில் 7 இந்த ஒரு மாடல்தான் டாப். அப்படி என்ன ஸ்பெஷல்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved