MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பொளந்து கட்டும் வெயில்.. மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

பொளந்து கட்டும் வெயில்.. மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

TN Weather: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மதுரை, கரூர் போன்ற மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டியுள்ளது. வரும் நாட்களில் வெப்பநிலை மேலும்  உயரக்கூடும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 24 2026, 03:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வாட்டி வதைக்கும் வெயில்
Image Credit : Asianet News

வாட்டி வதைக்கும் வெயில்

தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்து கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மதுரை, கரூர், வேலூர், ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கே அலறுகின்றனர்.

25
அதிக தண்ணீர் குடிக்க அறிவுறுத்தல்
Image Credit : Asianet News

அதிக தண்ணீர் குடிக்க அறிவுறுத்தல்

இதனால் சுகாதாரத்துறை தரப்பில் பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. அதாவது மதியம் 12 மணி முதல் 3 மணி வரை நேரடியாக வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும், தாகம் இல்லாவிட்டாலும் போதிய அளவு தண்ணீர், இளநீர், மோர் போன்றவற்றை அருந்தவும், மெல்லிய பருத்தி (Cotton) ஆடைகளை அணிய வேண்டும். குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

Related Articles

Related image1
ரூ.597 கோடி சொத்து.. 26 கோடி தங்கம்.. 38 கோடிக்கு வாட்ச்.. பிரமிக்க வைக்கும் சொத்து.. யார் இந்த ஜோஸ் சார்லஸ் மார்டின்?
Related image2
வீட்டில் இருந்த படியே தினமும் ரூ.5,000 ஈசியாக சம்பாதிக்கலாம்! எப்படி தெரியுமா?
35
கனமழை எச்சரிக்கை
Image Credit : Google

கனமழை எச்சரிக்கை

இந்நிலையில் வரும் நாட்களில் மேலும் வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது மன்னார் வளைகுடா முதல் வடக்கு உள் கர்நாடகா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 26ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.

45
வறண்ட வானிலை
Image Credit : our own

வறண்ட வானிலை

மார்ச் 28 முதல் 30 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கணித்துள்ளது.

வெயில் அதிகரிக்கும்

மார்ச் 26 முதல் 28 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என தெரிவித்துள்ளது.

55
சென்னை வானிலை அப்டேட்
Image Credit : our own

சென்னை வானிலை அப்டேட்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வெப்ப அலை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
மழை செய்திகள்
வானிலை அறிக்கை
கனமழை
Latest Videos
Recommended Stories
Recommended image1
இது தற்கொலை முடிவு..! எடப்பாடியின் ஏடாகூட முடிவுக்கு முட்டுக்கட்டை போட்ட அமித் ஷா..! சீனியர்கள் நிம்மதி..!
Recommended image2
ஓபிஎஸை வேரறுக்க தேனியில் எடப்பாடி போட்ட மாஸ்டர் பிளான்..! ஆபரேஷன் அனுராதா..! திணறும் திமுக..!
Recommended image3
'குடி'மகன்களுக்கு ஷாக்.. இனி டாஸ்மாக்கில் ஒரு நபருக்கு இவ்வளவு சரக்கு தான் லிமிட்.. அதிரடி அறிவிப்பு!
Related Stories
Recommended image1
ரூ.597 கோடி சொத்து.. 26 கோடி தங்கம்.. 38 கோடிக்கு வாட்ச்.. பிரமிக்க வைக்கும் சொத்து.. யார் இந்த ஜோஸ் சார்லஸ் மார்டின்?
Recommended image2
வீட்டில் இருந்த படியே தினமும் ரூ.5,000 ஈசியாக சம்பாதிக்கலாம்! எப்படி தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved